ஞாயிறு, 8 மே, 2022

இலக்கு

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 133
பறவை பார்ப்போம்.. - பாகம் 84
#1
“நம்பிக்கையுடன் இருங்கள், ஆனால் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். 
முன்னேற்றத் திசையைப் பார்த்திருங்கள், ஆனால் காத்திருக்காதீர்கள்.”


#2
 “வையத்துள் உங்களுக்கான இடத்தை நீங்கள் கண்டடைவதில்லை, 
அதனைச் செதுக்குகின்றீர்கள்!”


#3
“பெரும்பாலான உங்கள் கேள்விகளுக்கு

ஞாயிறு, 1 மே, 2022

சுய மரியாதை

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 132
பறவை பார்ப்போம்.. - பாகம் 83

#1
 “உங்களைக் குறித்த மற்றவர்களின் கருத்தைக் கொண்டு 
உங்கள் எல்லையை வரையறுக்காதீர்கள்.”

#2
“எப்போதும் எல்லாவற்றையும் தனிப்பட்ட முறையில் 
எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.  
மற்றவர்கள் உங்களைப் பற்றிக் கூறுவது 
அவர்களைப் பற்றிய பிரதிபலிப்பே அன்றி, 
உங்களைப் பற்றியதல்ல.”


#3
“உங்கள் பயங்களை நம்பாதீர்கள். 
அவற்றுக்கு

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

ஒற்றைக் கனவு

 #1

"மனஉறுதியே, 
வெற்றிக்குத் தேவையான சக்தி!" 
_  Dan Gable

#2
"சில விஷயங்கள் சற்றே அதிக வருத்தம் தருபவையாக முடிந்தாலும், 
நாம் மூழ்கி விடாமல் மிதப்போம், 
பரவாயில்லை..!"
#3
“ஒற்றைக் கனவு

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

வெற்றிக் கதைகள்

 #1

"கடினமாக உழைத்தால், 
உங்களை நீங்கள் நம்பினால், 
எவரும் எதுவும் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாது."

#2
"இருக்கும் இடத்திலேயே நின்று கொண்டிருந்தால் 
நீங்கள் விரும்பும் இடத்தை அடைய முடியாது."


#3
"உங்களுடைய வெற்றிக் கதையை உருவாக்க

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

அழிப்பான் அற்றச் சித்திரக் கலை

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 129

#1
நீங்கள், நீங்கள் மட்டுமே உங்கள் நிலைமையை மாற்றிட இயலும். 
எதன் மீதுமோ யார் மீதுமோ பழியைச் சுமத்தாதீர்கள்." 
_  Leonardo DiCaprio

#2
"வாழ்க்கை உங்களிடம் இருப்பதைக் கொண்டு அமைகிறதேயன்றி

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

துணிவு எய்தல்

பறவை பார்ப்போம்.. - பாகம் 82
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 128
#1
"கடமை அழைக்கும் போது ஆளுமை வெளிப்படுகிறது."
__ William Safire

#2
"சில நேரங்களில், 
நீங்கள் எடுக்கும் மிகச் சிறிய முடிவுகள்
உங்கள் முழுவாழ்க்கையையும் 
மாற்றி விடுகின்றன."
__  Keri Russell

#3
"நமது ஆற்றல்

ஞாயிறு, 27 மார்ச், 2022

சூரியோதயம்

 #1

“நன்றியுணர்வு  உதிக்கும் பொழுதில் 
போராட்டம் முடிவுக்கு வருகிறது.”
_Neale Donald Walsh


#2
"நம்பிக்கை என்பது சூரியன். 
அது ஒரு வெளிச்சம். ஒரு பேரார்வம். 
வாழ்க்கை மலர்வதற்கான அடிப்படை உந்து சக்தி. ”
_Daisaku Ikeda


#3
"ஒவ்வொரு கார்மேகத்திலும்

ஞாயிறு, 20 மார்ச், 2022

மன்னிப்பு

  #1

“அனைத்தையும் செய்து முடிக்கப் போதுமான நேரம் இருப்பதே இல்லை, 
ஆனால் 
அதிமுக்கியமானவற்றைச் செய்து முடிக்க எப்போதும் நேரம் இருக்கிறது.”
_Brian Tracy

#2
"எல்லாவற்றிலும் நிறைந்திருங்கள். 
எல்லாவற்றுக்கும் நன்றியுடையவராய் இருங்கள்."
 _ Maya Angelou

#3
"நீங்கள் மட்டுமே போதும். 

ஞாயிறு, 13 மார்ச், 2022

ஆதி சக்தி - மார்ச்.. மகளிர் தின மாதம்..

 #1

பெண்ணாக இருப்பதே ஓர் உயர்ந்த சக்தி. 
அதைக் கொண்டாடுங்கள்!

#2
ஒவ்வொரு வலிமை வாய்ந்த பெண்ணுக்குப் பின்னும் 
அவளுக்கு வேறு வாய்ப்புகளைத் தராத கதையொன்று இருக்கிறது.
_ Nakeia Homer.
#3
சற்று அவகாசம் எடுத்துக் கொண்டாலும் கூட, 
உனது ஒவ்வொரு பொறுப்பையும் 
புன்னகையுடன் கையாளுகிறாய்!

ஞாயிறு, 6 மார்ச், 2022

பந்தயம்

 பூனை பூனை பூனை

#1
உங்கள் தகுதிக்குக் குறைவான எதையும்
ஒப்புக் கொள்ளாதீர்கள்!
_Steve Maraboli


#2
சிறப்பாகக் கழியும் ஞாயிறானது 
ஒரு வாரத்திற்கான மனநிறைவைத் தந்து செல்லும்.


#3
கவலைப் படுவது என்பது 
உங்களுக்கு எதிராக

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

அச்சம் தவிர்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 126
பறவை பார்ப்போம்.. - பாகம் 81
#1
"உங்களுக்கானது உங்களைக் கண்டடையும்." 
_ Imam Ali

#2
"ஒன்றைக் கண்டு அச்சம் கொள்வதைக் காட்டிலும் 
அது உங்களுக்குத் தேவை என்பதில் தீர்மானமாக இருங்கள்." 
_ Bill Cosby

#3
“நிதானமாகச் சிந்திக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள், 
ஆனால்

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

சாக்லேட் எனும் சந்தோஷம்

பெரியவர் சிறியவர் பாகுபாடின்றிப் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருப்பது சாக்லேட். 


டேபிள் டாப் ஒளிப்படங்களாக இந்த வார ஞாயிறு படத்தொகுப்பு:

#1
ப்ரவுன் சாக்லேட்

"குழந்தைப் பருவ மலரும் நினைவுகள், பெருவாழ்வு, இன்சுவை மற்றும் சாக்லேட் சாதாரண உணவை விடவும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது - அது ஒரு சிகிச்சை.
_ Christelle Le Ru


#2

வெள்ளை சாக்லேட்

தொழில் நுட்பப்படிப் பார்த்தால் இவற்றைச் சாக்லேட் எனச் சொல்ல முடியாது. ஆனால் சுவையானவை.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

ரோஜா தினத்தில் தொடங்கி.. - பிப்ரவரி 14

14 பிப்ரவரி அன்று மட்டுமல்ல, அதற்கு ஒரு வாரம் முன்பாகவே காதலர்கள்/அன்பர்கள் தினக் கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கி விடுகின்றன. இப்படியும் தினங்கள் உள்ளன என்பது இப்போதுதான் பரவலாகத் தெரிய வருகிறது. பரிசுப் பொருட்கள் விற்பனைக்கான வியாபார உத்தியாகவும் இந்தத் தினங்கள் விளம்பரப் படுத்தப்பட்டு வருகின்றன! புகைப்படக் கலைஞர்களுக்கோ  தேடிப் பொருத்தமான படங்களைப் பதிய ஒரு வாய்ப்பு :)!

#7பிப்ரவரி 
ரோஜா தினம்:
இதயம் மட்டுமே அறிந்த 
மெளன மொழியில் பேசும் 
ரோஜா.

#8பிப்ரவரி 
விருப்பத்தைத் தெரிவிக்கும் தினம்:
நீயே எனது 
பதில் கிடைத்தப் பிரார்த்தனை
நிறைவேறிய விருப்பம்
பலித்த கனவு.#9பிப்ரவரி
சாக்லேட் தினம்:
இனிப்புகள் வரும் போகும்

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

அகத்தின் அழகு

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 124

#1

 அழகிய நினைவுகளைச் சேகரியுங்கள்.


#2
“தைரியம் என்பது பயமே இல்லாது இருப்பது அன்று, 
பயத்தை எதிர் கொண்டு நிற்பதும்,  
பயத்தை வெல்வதுமே ஆகும்.”
 _ Mark Twain


#3
“எங்கே நம்பிக்கை வளர்கிறதோ, 

வியாழன், 3 பிப்ரவரி, 2022

கமலா பஸீன் கவிதைகள்

 கமலா பஸீன் / Kamla Bhasin  (ஏப்ரல் 1946 – செப்டம்பர் 2021) 

நான்கு மாதங்களுக்கு முன்னர் 25 செப்டம்பர் 2021 அன்று தனது 75_வது வயதில் காலமானார் கவிஞரும் எழுத்தாளருமான கமலா பஸீன். கடந்த அரை நூற்றாண்டில் பெண் கல்வி, பெண் உரிமை குறித்த விழிப்புணர்வு பரவ, மாற்றங்கள் நிகழ இவரது எழுத்துகளும் செயல்பாடுகளும் ஆற்றிய பங்கு, இவர் காலமான பொழுது மீண்டும் பெருமளவில் பேசவும் போற்றவும் பட்டது.

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

பறவைக்குக் கூடு

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 123 

#1
“சில நேரங்களில் நீங்கள் இரண்டடி முன்னேற 
அரையடி பின் வாங்க நேரலாம்.”
_Vince McMahon#2
"வெற்றியை நோக்கிச் செல்லத் தொடங்கி விட்டால், 
அது எட்டி விடும் தூரமே."
_  Stephen Richards

#3
"உள்ளம் அமைதியாக இருந்தால்
அச்சத்தையும் மீறி

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

கருமமே கண்ணாயினார்

பறவை பார்ப்போம் - பாகம்: (79) 
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: (122)
#1
"தொலைநோக்குப் பார்வையில் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருங்கள், ஆனால் நடைமுறைப் படுத்துவதில் வளைந்து கொடுத்து மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்."
_Jef Bezos


 #2
"பிரச்சனை என்னவெனில், 
வரும் இடரை எண்ணி முடிவெடுக்கத் தயங்கினால் 
மேலும் இடரைத் தருவிக்கும் அபாயம் உள்ளது."
_Erica Jong

#3
"உடனடியாகவோ அல்லது சற்று பொறுத்தோ, 
வெற்றியை எட்டிய எவரும்

ஞாயிறு, 16 ஜனவரி, 2022

பனி விலகும்

 #1
"வெறுப்பை வெறுப்பால் 
முடிவுக்குக் கொண்டு வர முடியாது,  
அன்பால் மட்டுமே முடியும்,  
அதுவே நிலையான விதி."
_Buddha 


#2
"இசை என்பது 
அழகிய, கவித்துவமான விஷயங்களை 
இதயத்திற்கு உணர்த்தும் தெய்வீக வழி."
_ Pablo Casals


#3 
“பார்ப்பதற்கு முன்  
கேட்பதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்

வெள்ளி, 7 ஜனவரி, 2022

அக்காக் குயில் ( Common hawk-cuckoo ) - பறவை பார்ப்போம்

 #1

ஆங்கிலப் பெயர்: Common hawk-cuckoo
உயிரியல் பெயர்: Hierococcyx varius

க்காக் குயில் இந்திய துணைக் கண்டங்களில் காணப்படும், நடுத்தர அளவிலான பறவை. குயில் இனத்தைச் சேர்ந்த இப்பறவை தோற்றத்தில் வல்லூறுவைப் போல் இருக்கும் என்பது உண்மை. நானும் இதனை இளம் வல்லூறு என எண்ணியே படம் எடுத்தேன். ஓரிரு கணங்களே காட்சி தந்து விட்டுப் பறந்து விட்ட படியால் நன்றாகப் பார்க்க முடியவில்லை. (தெளிவாகப் படமாக்கவும் முடியவில்லை.) பின்னர் எடுத்த படத்தை உற்று நோக்கிய போது வல்லூறுவைப் போலக் கண்கள் மஞ்சளாக இல்லையே எனத் தோன்றியது. கண்களைச் சுற்றிக் காணப்பட்ட அந்த மஞ்சள் வளையமும் வித்தியாசமாகப் பட்டது. இணையத்தில் தேடியதில் இது அக்காக் குயில் (அல்லது  அக்காக் குருவி) எனத் தெரிய வந்தது. 

#2

வேறு பெயர்கள்: 
அக்காக் குருவி, 
மூளைக்காய்ச்சல் பறவை

மற்ற பல குயில் இனங்களைப் போல இவையும் தம் முட்டைகளைப் காக்கை அல்லது தவிட்டுக்குருவி போன்ற பிற பறவைகளின் கூடுகளில் இடுகின்றன. மனிதர்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள மரங்களில் வாழும் என்றாலும் அத்தனை எளிதில் தென்பட்டு விடாது.

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

உரமொருவற்கு..

   என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 120

பறவை பார்ப்போம் - பாகம்: (77)
#1
"முயற்சியைக் கைவிடுவதைக் காட்டிலும் பெரிய தோல்வி 
வேறு எதுவும் இல்லை."
_ Elbert Hubbard 

#2
"நாம் எவ்வளவு உழைப்பைப் போடுகிறோமோ 
அதற்கான பலனே கிட்டும். 
மேலும் முயன்றிடாமல் 
மேலும் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது."

#3
"குறி வைத்தால் மட்டும் போதாது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin