Sunday, March 29, 2015

பிரியம் - ‘தென்றல்’ தமிழ் மாத இதழில்..


# பக்கம் 76

சாப்பாடு இறங்கவில்லை
கைவிரித்து விட்டார்கள் மருத்துவர்கள்.
எத்தனைக் கெஞ்சியும் துளிக் கஞ்சி
குடிக்க வைக்க முடியாத வருத்தத்தில்
பசி மறந்தது எங்களுக்கும்.

Friday, March 27, 2015

நாகர்கோவில் புகைப்படக் கண்காட்சியும்.. எனது படங்களும்..

நாகர்கோவில் நகரசபைத் தலைவர் திருமதி. மீனாதேவ் தொடங்கி வைக்க மார்ச் 7, 8 தேதிகளில் புகைப்படப்பிரியன் குழுமம் நடத்திய ”எக்ஸ்போஷர் 2015” கண்காட்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. அது குறித்த எனது முந்தைய அறிவிப்புப் பதிவு இங்கே.  கண்காட்சி குறித்து மேலும் அறிந்திட... தி இந்து செய்தி இங்கே. தின மலர் செய்தி இங்கே.

#2
படம் நன்றி: “நெல்லை வீக் என்ட் க்ளிக்கர்ஸ்”

இடம் பெற்றிருந்த ஆயிரத்துக்கும் மேலான ஒளிப்படங்களை ஆர்வத்துடன் கண்டு இரசித்திருக்கிறார்கள் பொது மக்கள். இவர்களில் பள்ளி மாணவர்களிலிருந்து அனைத்து வயதினரும் அடக்கம்.

நல்ல தரத்திலான பிரதிகளோடு, நேர்த்தியாகப் படங்களைக் காட்சிப் படுத்தி சிறப்பாக நிகழ்வைக் கொண்டு சென்ற மெர்வின் ஆன்டோவுக்கும், அவருக்கு துணையாக செயல்பட்ட நண்பர்கள் மூவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

அங்கே காட்சிப் படுத்தப்பட்டிருந்த எனது 8 படங்களும் உங்கள் பார்வைக்காகவும் எனது சேமிப்பிற்காகவும் இங்கே. தேர்வு செய்து காட்சிப்படுத்திய மெர்வின் ஆன்டோவுக்கும், அவற்றைப் படமாக்கி அனுப்பி வைத்த ஒளிப்படக் கலைஞர் நித்தி ஆனந்த்துக்கும் என் நன்றி.

படம் ஒன்றில் இருக்கிற நான்கும் அரங்கின் முகப்பிலேயே இடம் பெற்றிருந்ததாகத் தெரிவித்தார், நித்தி ஆனந்த்.

அடுத்த மூன்று...

Wednesday, March 25, 2015

இதிகாசக் கடமை - ‘சக்கர வியூகம்’ புத்தக விமர்சனம் - கல்கியில்..

இந்த வார கல்கி இதழில்..

ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’ சிறுகதைத் தொகுப்புக்கான எனது நூல் விமர்சனம்..

பக்கம் 39_ல் :

Monday, March 23, 2015

தினமலர் ‘புதுப்பயணம்’ - ‘நிழல் யுத்தம்’ போட்டியில் பரிசு


தினமலர் நாளிதழின் வெள்ளிக்கிழமை இணைப்பாக வருகிறது நான்கு பக்கங்களுக்கு மனிதம் தேடும்.. ‘புதுப்பயணம்’ பகுதி. இதில் ‘நிழல் யுத்தம்’ புகைப்படப் போட்டியில் அறிவிப்பான ‘வலி’ எனும் தலைப்புக்காக எனது படம் தேர்வாகி சென்ற வெள்ளி 20 மார்ச் 2015 இதழில், இணைப்பின் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது. அதற்காக ‘தின மலர்’ அனுப்பி வைத்த சான்றிதழ்...

நன்றி தினமலர்!


பரிசு பெற்ற படம்: ‘வலி’க்குப் பயந்தால் வாழ முடியாதப்பா!

Saturday, March 21, 2015

உலகக் கவிதைகள் தினம்

ன்று உலகக் கவிதைகள் தினம். இந்தநாளில் இப்பகிர்வு பொருத்தமானதாக இருக்குமென எண்ணுகிறேன்.

#1
கவிஞர் கலாப்ரியா

#2
திருமதி. சரஸ்வதி கலாப்ரியா

#3
எழுத்தாளர் பாவண்ணன்
இரு தினங்களுக்கு முன், 18 மார்ச் அன்று, மாலை ஐந்து மணி. கிளிகள் பாடும், மரங்கள் சூழ்ந்த கப்பன் பூங்காவில்,  நடை பெற்றது ஒரு இலக்கிய சந்திப்பு. கவிஞர் கலாப்ரியா அவர்களின் பெங்களூர் வருகையை முன்னிட்டு. தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையான அவரைச் சந்திக்க மிகக் குறுகிய கால அவகாசத்திலும் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆவலுடன் குழுமி விட்டிருந்தார்கள்.

Friday, March 20, 2015

‘ஆஹா’ படங்களின் அணிவகுப்பு - மார்ச் போட்டி

#1

சத்தி விட்டிருக்கிறார்கள், கோடு போட்டால் ரோடு போடும் "PiT" குடும்பத்தினர். இந்த முறை சற்று வித்தியாசமான ஒரு தலைப்பைக் கொடுப்போமென முடிவு செய்த நடுவர் நவ்ஃபலுக்கு நிச்சயம் மகிழ்ச்சிதான். எழுபது படங்கள் வரை அணி வகுத்து நிற்கின்றன சவால் விட்டபடி. அப்படி என்னதான் தலைப்பு?

#2

Tuesday, March 17, 2015

‘வாழ்க்கை என்பது வாழ்க்கை’ - அன்னை தெரஸாவின் பாடல் வரிகள் 15, படங்களுடன்..

1. வாழ்க்கை ஒரு அதிர்ஷ்டம், அதை அடைந்திடுங்கள்.


2. வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு, அதை விளையாடுங்கள்.


#3. வாழ்க்கை ஒரு வாக்குறுதி. அதை பூர்த்தி செய்யுங்கள்.


#4. வாழ்க்கை அழகானது, அதை ஆராதியுங்கள்.

Friday, March 13, 2015

எலிஸபெத் பேரட் பிரெளனிங்: குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 10 & 11)


ரண்டு வார்த்தைகள், “எம் தந்தையே”
நிஜத்தில் இவைதாம் நினைவில் நிற்கும் எங்கள் பிரார்த்தனை.
அச்சுறுத்தும் நள்ளிரவு வேளையில், எங்கள் கூடத்தில்,
அண்ணாந்து பார்த்து மென்மையாக வசீகரமாக நாங்கள் சொல்பவை
எங்களுக்கு வேறெந்த வார்த்தைகளும் தெரியாது

Sunday, March 8, 2015

'பெண்ணுருப் போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்..'

8 மார்ச். வருடத்தில் ஓர் நாள் சர்வதேச மகளிர் தினம். கொண்டாட்டங்கள், வாழ்த்துப் பரிமாற்றங்கள் இவற்றைத் தாண்டி.., ‘கருவறையில் உயிர் கொடுத்து,  குடும்பத்தைக் கட்டிக் காத்து, திறன்மிகு அறிவுடன் சாதனைகள் பல புரிந்து, நாட்டையும் அகிலத்தையும் தாங்கி நிற்பவள் பெண்’ என்கிற உணர்வைத் தட்டி எழுப்ப இந்நாள் பயன்பட்டால் அதன் நோக்கம் நிறைவேறும். பெண்ணுக்கு எதிரான உடல், மனரீதியான வன்முறைகள் அற்ற சமுதாயமே முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். பெண்ணும் பெண்ணின் உணர்வுகளும் மதிக்கப்பட்டாலே பிரச்சனைகள் தீரும். மாற்றங்கள் மலரும்.

#1
உறுதி கொண்டவள் பெண்


#2
தன் சிந்தனை, செயல், பிரார்த்தனைகளில் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் நலன் ஒன்றையே நாடி நிற்கிறவள் பெண். #3
தன் அடையாளங்களைத் தொலைத்து விடாமல், திறமைகளை வளர்த்துக் கொண்டு மிளிருபவள் பெண்
ஓவியக் கலைஞர்: செல்வி லக்ஷ்மணன்

#4 எண்ணியன முடிப்பவள் பெண்

Tuesday, March 3, 2015

நாகர்கோவிலில் புகைப்படப்பிரியனின் "எக்ஸ்போஷர் ‘15 "


ஃபேஸ்புக் ‘புகைப்படப்பிரியன்’ குழுமத்தின் வெற்றிகரமான மூன்றாம் வருட மாநாடு, வருகிற சனி-ஞாயிறு, மார்ச் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தங்கள் கடந்த இருமாத காலமாகவே நடைபெற்று வருகின்றன.  குறிப்பிட்டத் தலைப்பு எதுவுமின்றி பொதுவான சிறந்த படங்களுக்கான அழைப்புடன் புகைப்படப் போட்டி அறிவிப்பாகியிருந்தது.

Monday, March 2, 2015

தளராத நம்பிக்கை.. இவர்தம் தாரக மந்திரம்..

ன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சாமான்ய மனிதர்கள் பத்துப் பேரைப் பார்க்கலாமா? ஒவ்வொரு புது நாளிலும் புதுப்புது சவால்களை எதிர்பார்த்தே விடிகிறது வாழ்வு இவர்களுக்கு. புன்னகையுடன், நம்பிக்கையுடன் வாழ்வில் நகருகிறார்கள் இம்மக்கள். குறிப்பாக முதியவர்களிடம் தென்படுகிற மன உறுதி அசாத்தியமானதாக இருக்கிறது. தோலின் சுருக்கம் இவர்களின் தன்னம்பிக்கையை எள்ளளவும் சுருக்கி விடவில்லை.

#1 சவாலே சமாளி..

#2 எளிமையின் அழகு

#3 ‘எல்லாம் விற்று விடும்..’

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin