
ஹாட்ரிக்காக கலைமகள், லேடீஸ் ஸ்பெஷல் ஆகியன தொடர்ந்து தினமணி தீபாவளி மலரிலும் என் பங்களிப்பு. அது கதையா கட்டுரையா கவிதையா என சிந்தித்தபடி வரும் நண்பர்களுக்கு கொடுக்கிறேன் 'கொத்து' ஆச்சரியம். முத்துச்சரம் தொடுக்க ஆரம்பித்து இரண்டரை வருடமும் 126 பதிவுகளும் கடந்த நிலையில் சமையல் சார்ந்த பதிவே இல்லை எனும் குறையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டாமா:)? நாங்களும் சமைப்போம்ல..
எங்க வீட்டு ருசி.. எங்க ஊர் ருசியும்தான்..!

தீபாவளி மலரின் 336 பக்கங்களின் நடுநடுவே, பலரது வீட்டு ருசியையும் தொகுத்து வழங்கியவர் கவிஞர் மதுமிதா.
***

பத்திரிகைக்காக செய்த அன்று டிஸ்ப்ளேயில் வைத்த விதம் உங்கள் பார்வைக்கு.

சரி, இப்போ பிடிங்க இந்த முந்திரிக் கொத்தை..:)!
வீட்டிலும் செய்து பாருங்க! புரோட்டின் சத்து நிறைந்த ஆரோக்கியமான பதார்த்தம். அம்மாவிடம் கற்றது.
- வாய்ப்பை நல்கிய மதுமிதாவுக்கு என் முதல் நன்றி!
- மிக்க நன்றி தினமணி!
- பெங்களூரில் புத்தகம் கிடைக்கத் தாமதமாவது அறிந்து கொரியரில் அனுப்பி வைத்த கோமாவுக்கு ஸ்பெஷல் நன்றிகள்!
***