#1
பட்டாம்பூச்சிகளைப் படமாக்குவது ஒரு சுவாரஸ்யமான சவால். ஓரிடத்தில் நில்லாது பூவுக்குப் பூ தாவியபடி இருப்பவற்றை சத்தமின்றிப் பின் தொடர்ந்து, அவை பூவில் தேனை உறிஞ்சும் போதோ, இலைகளின் மேல் இளைப்பாறும் போதோ கேமராவில் சிறைப்பிடிப்பது பரவசமானது.
#2
#3
ஜூப்ளி பூங்காவில் பட்டாம்பூச்சிகள் வெளியே பறந்து விட முடியாதபடி கூரையைக் கொண்ட ஒரு அரங்கில் ஒரு சிறு பண்ணை அமைத்திருந்தார்கள். திறந்த வெளித் தோட்டங்களில் அவற்றுக்குப் பின் பதுங்கிப் பதுங்கி விரைய வேண்டும். குறிப்பாகக் காலை பத்து, பதினொரு மணியளவில் அவை மிக சுறுசுறுப்பாகி விடும்.