கட்டுரை/சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை/சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 மார்ச், 2022

ஆதி சக்தி - மார்ச்.. மகளிர் தின மாதம்..

 #1

பெண்ணாக இருப்பதே ஓர் உயர்ந்த சக்தி. 
அதைக் கொண்டாடுங்கள்!

#2
ஒவ்வொரு வலிமை வாய்ந்த பெண்ணுக்குப் பின்னும் 
அவளுக்கு வேறு வாய்ப்புகளைத் தராத கதையொன்று இருக்கிறது.
_ Nakeia Homer.
#3
சற்று அவகாசம் எடுத்துக் கொண்டாலும் கூட, 
உனது ஒவ்வொரு பொறுப்பையும் 
புன்னகையுடன் கையாளுகிறாய்!

திங்கள், 8 மார்ச், 2021

மகளிர் தினம் 2021



ரு நூற்றாண்டுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது ‘சர்வதேச மகளிர் தினம்’. பெரும்பாலான மக்கள் இதைப் பெண் உரிமைகளை வலியுறுத்தும் தினமாக நினைக்கின்றனர். ஆனால் இதன் வேர், உழைக்கும் மகளிரின் இயக்கமாகவே ஆரம்பமானது. 1911_ஆம் ஆண்டு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மார்க்ஸிய சித்தாந்தத்திலும்  கம்யூனிஸ கொள்கையிலும் பற்று கொண்டவரும், வக்கீலும் ஆன ஜெர்மனியைச் சேர்ந்த க்ளாரா ஜெட்கின் இதைத் தொடங்கி வைத்தார். அப்போதிலிருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 மகளிர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

உலகெங்கிலும் பெண்கள் தம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் பயணத்தின் அடையாளமாக மகளிர் தினம் பார்க்கப்படுகிறது. எவ்வளவோ சாதிக்கப்பட்டிருந்தாலும் இப்பயணம் எவ்வளவு நீண்டது, இன்னும் எவ்வளவு செய்து முடிக்கப்பட வேண்டியுள்ளது என்பதற்கான நினைவூட்டலாகவும் இத்தினம் திகழ்கின்றது.

இந்த வருட மகளிர் தினத்திற்கான கரு, ‘சவால் விடுவோம்’ (#ChooseToChallenge)! சவால் விடப்படும் உலகம், எச்சரிக்கை உணர்வோடு இருப்பதோடு, சவால்களில் இருந்தே மாற்றங்களும் நிகழும் என்பதே இந்தக் கருவின் குறிக்கோளாகும். வரும் வருடம் மகளிர் தம்மைப் பின்னடைய வைப்பது எதுவாக இருப்பினும் அதை நோக்கிச் சவால் விட்டு வென்று காட்ட வேண்டும்.

போராட்டமான வாழ்க்கையை மன உறுதியுடன் எதிர்கொண்டு பயணிக்கும் மகளிரின் படங்கள் பத்தின் தொகுப்பு...

பெண் ஒரு முழுமையான வளையம். அவளுக்குள் இருக்கிறது உருவாக்கவும், பேணி வளர்க்கவும், உருமாற்றவும் முடிகின்ற ஆற்றல். 

#1


#2




#3

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

யாரைத் தேடும் குரல்? - நன்றி க. அம்சப்ரியா!


கவிஞர் க. அம்சப்ரியா அவர்கள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்  “சூழலியல் கவிதைகளில் ஒரு பசுமைப்பயணம்” எனும் தலைப்பில் ஒரு தொடரை ஆரம்பித்துள்ளார். பாகம் நான்கில் எனது கவிதையை முன் வைத்து இன்று அவர் எழுதியிருப்பதைப் பகிர்ந்து கொள்கிறேன்:


சூழலியல் கவிதைகளில் ஒரு பசுமைப்பயணம் - 04

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு
துயர் உறுத்தும்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்"
    (சிலப்பதிகாரம்- காடுகாண் காதை) 

    செழிப்பு, தன் நிலையிலிருந்து திரிந்து பாலைவனமாக மாறுகிறதென்றால் யார் காரணமாக முடியும்? 

  சூழலியல் என்கிற பதத்தின் அரிச்சுவடியும் அறியாத ஆள்கிறவர்கள், அதிகார வட்டங்கள், பொதுவெளி மக்கள் எல்லாரும்தான்.

  மரங்களை, செடிகளை, கொடிகளை வெறுமனே கிளைகளாக, இலைகளாக, வேர்களாக மட்டுமே பார்ப்பவர்கள் ஒரு வகையென்றால், எல்லாவற்றிலும் பொருளீட்டுகிற உத்தி அறிந்தவர்கள் இன்னொரு வகை. 

புதன், 13 ஜூன், 2018

கலைமகளில்.. அட்டைப்படமும் கட்டுரையும்.. - இலங்கையின் கலாச்சார உடைகள் - (ஸ்ரீலங்கா 5)

கலைமகள் மாதப் பத்திரிகையின் ஜூன் இதழில்..
 அட்டைப்படமாக நான் எடுத்த படமும்..

மேலும் இரண்டு படங்களுடன்
அட்டைப் படக் கட்டுரையும்..

லங்கையின் அதிகாரப்பூர்வமான பாரம்பரிய உடை என அறிவிக்கப்படாவிட்டாலும் பெண்கள் அணியும் சேலையும், ஆண்கள் அணியும் சாரமும் கலாச்சார முக்கியத்துவம் மிக்கவையாகக் கருதப்படுகின்றன. இலங்கையில் உள்ள தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் ஆகியோரின் கலாச்சார உடைகளாகத் திகழ்பவை ஆண்களுக்கு மேற்சட்டையுடன் சாரமும் (தமிழரின் வேட்டி), பெண்களுக்கு சேலையும். 
# பக்கம் 15

புதன், 26 ஏப்ரல், 2017

கிருஷ்ணராஜபுர ஏரியும்.. பெங்களூர் நீர் நிலைகளும்..

#1
40 ஏக்கர் பரப்பளவிலான வெங்கையா அல்லது வெங்கைநகரே ஏரி, பெங்களூரின் (Old Madras Road) பழைய சென்னை சாலையில் உள்ளது. சில வருடங்களுக்கு முன் வரையிலும் இது மோசமான நிலைமையில் இருந்தது. ஏரி முழுவதும் தீங்கு விளைவிக்கும் நீர் பதுமராகம் மற்றும் களைகளால் நிரம்பியிருந்திருக்கிறது. மேலும் மோசமாகும் முன் ஏதேனும் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டிய கட்டத்தில், பெங்களூர் மாநகராட்சி 15 வருடங்களுக்குப் பராமரிக்குமாறு ஏரியை Lake Development Authority (LDA) - ஏரி வளர்ச்சி அதிகாரக்குழுவிடம் ஒப்படைத்தது. ஏரியை ஓரளவுக்கு சீரமைத்த LDA,  “ஃபேன்டஸி லகூன்” என்ற பெயரில் இயங்கும் தீம் பார்க் நிர்வாகத்திடம் மாதாந்திர வாடகைத் திட்டத்தில், ஒப்படைத்து விட்டது.

#2

ஸ்கூட்டர் படகு, பெடல் படகு, வேகப் படகு என விதம் விதமான படகுச் சவாரிக்கு பிரபலமாகி விட்டது. சிறுவர் பூங்கா, நடை மற்றும் ஓட்டப் பயிற்சிக்கான பாதைகள், ஆங்காங்கே இளைப்பாற இருக்கைகள், நீருக்கு நடுவே படகில் மட்டுமே செல்ல முடிகிற செயற்கைத் தீவுப் பூங்கா, சிறு உணவகங்கள் என நுழைவுக்கு, கேமராவுக்கு, பூங்கா விளையாட்டுகளுக்கு, படகுச் சவாரிக்கு எனத் தனித்தனியாக கட்டணம் வசூலித்து இலாபம் பார்க்கும் ஃபேண்டஸி லகூன் ஏரியையும் பூங்காங்களையும் சரிவரப் பராமரிக்கிறதா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி.

#3

சனி, 12 டிசம்பர், 2015

அவசர காலத்தில்..

மாமழையில் சிக்கிக் கொண்டபோது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் கற்க நேர்ந்த பாடங்களென வந்த ‘வாட்ஸ் அப்’ பகிர்வுகள் இன்னும் சில. மீண்டும் இப்படியொரு நிலை  வேண்டாவே வேண்டாம் என்றாலும் சில விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே. அதே போல உணர்ந்து கொள்ளவும் சில உண்மைகள்..

இன்வெர்டரிலிருந்து நேரடியாக மொபைலுக்கு சார்ஜ்:

மின் தடையின் காரணமாக மொபைலில் சார்ஜ் இல்லாமல் முற்றிலுமாக நான்கு நாட்களுக்கு வெளியுலகோடு தொடர்பு துண்டிக்கப்பட்டு மாட்டிக் கொண்டவர்கள் பலபேர். அவர்கள் நிலைமை என்னாயிற்றோ என உறவினர் நண்பர்களின் பதட்டம் ஒரு புறம்.

புதன், 9 டிசம்பர், 2015

மழைக்குப் பின்.. சுகாதாரம்.. சில குறிப்புகள்..

வெள்ள நீர் வடிந்தாலும் சென்னையின் பல பகுதிகளில் இன்னும் சாலைகள் சுத்தம் செய்யப்படாமல், குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும்,.மாசடைந்த சூழலில் மக்கள் பயந்துபடியே இருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி தேவையான மருந்துகள் கிடைக்காமல், இன்னும் மின்சாரம் திரும்பாமல், BSNL, Airtel சரியாகாமல் எங்கும் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலும் பலர் சிரமத்தில் இருக்கிறார்கள். இவ்வேளையில் மக்கள் தங்கள் உடல் நலத்தைக் காத்துக் கொள்ளவும், நீரினால் பரவக் கூடிய நோய்களைத் தடுக்கவும் அறிவுறுத்தப்பட வேண்டும். சுகாதாரத்தில் காட்ட வேண்டிய அக்கறை பற்றி வாட்ஸ் அப்பில் ஆங்கிலத்தில் பகிரப் பட்ட குறிப்புகளைத் தமிழாக்கம் செய்து இங்கு அளித்திருக்கிறேன். இவற்றில் பல மருத்துவர்களைக் கலந்தாலோசித்து தரப்பட்டவை.
முதலில் மும்பையைச் சேர்ந்த  மருத்துவர் ஒருவர் பகிர்ந்ததைப் பார்க்கலாம்:

புதன், 2 டிசம்பர், 2015

சென்னை மழை - மீட்புப் பணி - பிரார்த்தனைகள்!

#1

சென்னையிலும், தமிழ்நாட்டின் கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் மழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கில் மாட்டிக் கொண்டு மக்கள் படுகிற அவதி மனதைப் பதைக்க வைப்பதாக இருக்கிறது. இருப்பிடம், உணவு, மின்சாரம், உடல்நலம், பாதுகாப்பு என எல்லாமே கேள்விக் குறியாகி விட்டுள்ளது. இந்த நேரத்தில் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு மனித நேயத்துடன் களம் இறங்கி, உதவி வருகிற அத்தனை நல்லுள்ளங்களுக்கும் வந்தனங்கள்.

உரிய நேரத்தில் உதவி பல இடங்களுக்கு கிடைக்கவில்லை என்ற செய்திகள் வந்தபடி இருந்தாலும் மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளவர்கள் காட்டி வரும் அர்ப்பணிப்பு நெகிழ வைப்பதாகக் குறிப்பிட்டார் பின்வரும் படங்களை தன் மொபைலில் எடுத்து அனுப்பியிருந்த நண்பர்.

#2

வெள்ளி, 9 அக்டோபர், 2015

கரையாத கணபதி பப்பா - பெங்களூரு, சாங்கி ஏரி


ரு வாரங்களுக்கு முன், ஒரு ஞாயிறு மாலை பெங்களூர் மல்லேஸ்வரத்தில் இருக்கும் சாங்கி ஏரிக்கு சென்றிருந்தேன். அதற்கு முந்தைய வாரத்தில் அந்த ஏரியைக் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை செய்தித்தாளில் படிக்க நேர்ந்ததும் செல்லும் ஆவல் எழுந்ததற்கு ஒரு காரணம்.

#2

பசுமை சுருங்கிக் கொண்டே வருகிற இந்தத் தோட்ட நகரில் பல வித உயிர்களுக்கும் மரங்களுக்கும் புகலிடமாக இருந்து வருகிறது

வியாழன், 1 அக்டோபர், 2015

அலங்கார பலூன்களும் விபரீத விளைவுகளும்..


லுவலக விழாக்கள், குடும்ப நிகழ்வுகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இவற்றை A to Z கவனித்து  நடத்தித் தருகிறோம்’ என வாக்குத் தருகிற, இவெண்ட் ஆர்கனைசர் எனப்படுகிற விழா ஏற்பாட்டளர்களிடம் பொறுப்பைக் கொடுத்து விடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் மக்கள். தவறில்லை. ஆனால் ஒப்படைக்கும் பொறுப்பை நேர்மையாகச் செயல்படுத்துவார்களா என்பதைத் தீர விசாரிப்பது மிக மிக அவசியம்.

சனி, 22 நவம்பர், 2014

“நம்பிக்கை மனுஷிகள்” - குறும்பட வெளியீடு


வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி மலர்ந்த முகம், உதவும் உள்ளம், உற்சாகமான பேச்சு, உறுதியான நம்பிக்கை, தெளிவான சிந்தனை கொண்ட சகோதரிகள் .Muscular dystrophy-தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட இவர்கள் கடந்த வந்த பாதை, வலிகளை வலிமையாக்கிக் கொண்ட விதம், தளராத போராட்ட குணம் இவற்றால் வியக்கவும் பாராட்டவும் வைக்கிறார்கள்.

ஞாயிறு, 27 ஜூலை, 2014

ஆயிரம் தட்டான்களும் அயல்நாட்டு ஆவணப்படமான வெற்றிக் கதையும் - கைக்கொண்டனஹள்ளி ஏரி (பாகம் 3)

 பாகம் 1 இங்கே; பாகம் 2 இங்கே

#1
ராளமான ஏரிகளைக் கொண்ட பெங்களூரில் சொல்லிக் கொள்ளும்படியான பராமரிப்புடன் இருப்பவை வெகு சொற்பமே. இவற்றிலும் சீர் செய்யப்பட வேண்டிய பிரச்சனைகள் பல இருந்தாலும் ஓரளவு மக்கள் பயன்படுத்தும் நிலையில், பறவைகள் தேடி வரும் வகையில் உள்ளன. இவை போக கவனிப்பாரற்றுக் கிடக்கிற மற்ற பல ஏரிகளைப் போலவே மாசடைந்து, கிட்டத்தட்ட ஒரு குப்பைக் கிடங்கை ஒத்ததாகவே இருந்தது கைகொண்டனஹள்ளி ஏரியும் 2009 ஆண்டு வரையிலும்.

#2

சனி, 22 மார்ச், 2014

உலக தண்ணீர் தினம்: நீர் சேமிப்பு.. நீருக்காகக் காத்திருப்பு.. - ஓவியங்கள் ஆறு

இன்று உலக தண்ணீர் தினம். வருடத்தில் ஓர் நாள் நீர் வளத்தைக்  காக்கவென அனுசரிக்கப்படும் இத்தினத்துக்காக என்றில்லாமல் கடந்த பதினைந்து வருடங்களாக (1999_லிருந்து) “நீர் சேமிப்பு, நீருக்கான காத்திருப்பு” (SAVE WATER, WAITING FOR WATER) இந்த இரண்டு கருக்களை மட்டுமே எடுத்துக் கொண்டு சுமார் நானூறு ஓவியங்களைப் படைத்திருக்கிறார், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீஷாய்ல் பாட்டில்.
#1

கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தில் வசிக்கும் இவரை 2014 பெங்களூர் சித்திரச் சந்தையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது

# 2

மற்ற மாநிலங்களை விட நீர் வளம் சொல்லிக் கொள்ளும்படியாக இருந்தாலும் கூட விவசாயிகள் மழை வராவிட்டால் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். இயற்கையை மதித்து, காடுகளை.. மரங்களை.. இருக்கும் நீர் வளங்களை.. நாம் காக்காமல் போனால் நீருக்காகக் காத்தே இருக்கும் நிலை வருமென்பதை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டுமென்பதே தன் நோக்கம் என்கிறார்.
#3

சனி, 22 பிப்ரவரி, 2014

முப்பாட்டன் சொத்தா பூமி? - ஹல்சூரு ஏரி, பெங்களூரு

#1
பழமையானதும் பெங்களூரின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றும் ஆன அல்சூர்(ஹல்சூரு) ஏரி, நகரின் மையத்தில், மகாத்மா காந்தி சாலைக்கு அருகே உள்ளது. பெங்களூரை உருவாக்கிய முதலாம் கெம்பகெளடா (1513-1569), அல்சூர் கிராமத்தை விஜய நகர அரசர்களிடமிருந்து பரிசாகப் பெற்றிருக்கிறார். அல்சூர் ஏரி இரண்டாம் கெம்ப கெளடாவினால் நிர்மாணிக்கப் பட்டது. ஏரிக்கு அருகாமையில் ஒரு பலாப்பழத் தோட்டம் இருந்திருக்கிறது. கன்னட மொழியில் பலாவை 'ஹலசின ஹன்னு' என்பார்கள். அதனாலேயே இந்த இடம் ‘ஹல்சூரு’ என அழைக்கப்பட்டிருக்கிறது. பின்னாளில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஹல்சூரு.. அல்சூர் ஆகிவிட்டது. 1807_ல்முதல் பிரிட்டிஷ் இராணுவ நிலையம் இங்குதான் அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

123 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்திருக்கும் ஏரி பல சிறு தீவுகளைத் தன்னுள் கொண்டது.
#2

ஏரியைச் சுற்றிய கரையின் நீளம் சுமார் 3 கிலோ மீட்டர்.

புதன், 14 ஆகஸ்ட், 2013

செங்கல் சூளை சித்திரங்கள் - ‘கல்கி கேலரி’க்காக சரவணன் தண்டபாணியுடன் ஒரு நேர்காணல்


 67_ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறது நாடு. சமீப ஆண்டுகளில் நாடு கண்டிருப்பது பெரும் வளர்ச்சி என்றே உவகையுடன் பேசப்படுகிறது. சர்வதேச தரத்துக்கு விமான நிலையங்கள், சாலைகள், பாலங்கள், ஐடி அலுவலகக் கட்டிடங்கள், வேலைவாய்ப்புகளால் நகரங்களில் கூடிக் கொண்டே போகும் மக்கள் தொகைக்கு ஈடு கொடுக்க முளைத்துக் கொண்டே இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், Malls.. இவை யாவும் இப்படியான ஒரு மாயையை உருவாக்கி இருப்பதில் ஆச்சரியமென்ன?

திங்கள், 17 ஜூன், 2013

‘சூழல் மாசடைதல்’ ( Pollution - June PiT ) - ‘பெங்களூரு’ ஐடி நகரத்தின் இன்னொரு பக்கம்

டுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லப் போகிற உலகம் எப்படியானதாக இருக்கப் போகிறது? இந்தக் கேள்விக்கான பதில் அச்சத்தையே தருகிறது. விளைவுகளை நமது காலத்திலேயே சந்திக்க ஆரம்பித்து விட்டோம். தலையாய இப்பிரச்சனை குறித்த விழிப்புணர்வு வேண்டித் தலைப்பைத் தந்திருக்கிறார் இம்மாத PiT போட்டிக்கான நடுவர் நவ்ஃபல்.

தலைப்பு: சூழல் மாசடைதல்

சுத்தமான தண்ணீரும், காற்றும் எத்தனை அவசியம் என்பதை உணராமல் தன்னை ஐடி நகரமாக முன்னிலைப்படுத்துவதிலேயே அக்கறை காட்டி வந்த அரசு சென்ற வருடத்தில் பெங்களூரில் அகற்றப்படாமல் குன்றுகளாய்க் குவிந்த குப்பைப் பிரச்சனை  சர்வதேசச் செய்தியில் அடிபட்டபோதுதான் அவசரமாக விழித்துக் கொண்டு ஆணைகள் பிறப்பித்தது. அது குறித்த என் பகிர்வு இங்கே: மாதிரி நகரம் ஆகிறதா பெங்களூர்?  இதற்கான விடை இப்போது வரை எதிர்மறையாகதான் உள்ளது.

#1
அலை குளத்தில்
கோபுர நிழல்.
அருகே..
”Cleanliness is next to Godliness” எனும் தலைப்போடு
Bangalore AID கண்காட்சியில் இடம் பெற்ற படம்.
கிட்டத்தட்ட ஒரு கோடியை நெருங்கும் ஜனத்தொகை தினம் வெளியேற்றும் 4000 டன் குப்பையைக் கழித்துக் கொட்ட புதிய நிலக்குழிகளைதான் தேடுகிறார்களே தவிர திட்டமிட்டபடி அவற்றை மாற்று சக்தியாக்கப் போதுமான ஆலைகளை அமைப்பதில் நாட்டம் காட்டவில்லை. 15-20% குப்பைகள் மட்டுமே மாற்று சக்தியாக்கப்படுவதாய் தெரிகிறது. ஏற்கனவே இருக்கும் நிலக்குழிகளைச் சுற்றியிருக்கும் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதுதான் சென்ற வருடம் பிரச்சனை வெடித்தது.  மாநகராட்சி பொதுமக்கள் ஒத்துழைப்பதில்லை எனக் குற்றம் சாட்டுகிறது. பதிலுக்கு மக்கள் போதுமான பணியாளர்களும் இல்லை, தேவையான கருவிகளும் இல்லை என மாநகராட்சியைச் சாடுகிறது. பெரும் அளவில் குப்பைகளை வெளியேற்றுகிறவர்கள் கூட அதற்கான ஆலைகள் நிறுவ அக்கறை எடுக்கவில்லை.

பெங்களூரின் முக்கிய இடமாகக் கருதப்படும் ஹல்சூர் ஏரியில் கிடைத்த சில காட்சிகள் (படங்கள் 1 முதல் 6 வரை):

வியாழன், 14 பிப்ரவரி, 2013

உப்புத் தாத்தா

#1 
உப்பு உப்போய்... கோலப்பொடி! உப்பு உப்போய்... கோலப்பொடி” எனக் குரல் கொடுத்தபடி வெள்ளிக்கிழமைகளில் இருமுடி கட்டிய மாதிரி தலையில் இரண்டையும் சுமந்து வருகிற பழனித் தாத்தாவை நெல்லை வீதிகளில் உங்களில் யாரேனும் பார்த்திருக்கவும் கூடும். சிறு வியாபாரிகளுக்கும் அவர்களிடம் வாடிக்கையாய் வாங்குகிற வீட்டினருக்கும் ஒரு காலத்தில் இருந்த பந்தங்கள் நகர வாழ்வில் காண அரிதானதென்றால் சிறுநகரங்களிலும் வந்துவிட்டுள்ள பல்பொருள் அங்காடிகள், சந்தைகளால்  இந்தக் காட்சிகள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன.

வியாழன், 24 ஜனவரி, 2013

தூறல்:11 - ஆட்டிசம்; பெங்களூர் மலர் கண்காட்சி, சித்திரச் சந்தை தகவல்கள்; குழந்தைத் தொழிலாளர் மீட்பு

கடந்த சில தினங்களாக எனது முந்தைய மலர்கண்காட்சிப் பதிவுகளையும், சென்ற வருடச் சித்திரச் சந்தை பதிவையும் தேடி யாரேனும் வந்தபடி இருப்பதைக் காட்டுகிறது ஸ்டாட்ஸ். மின்னஞ்சல் அனுப்பியும் நண்பர்கள் தகவல் கேட்கவே, செல்ல விரும்புகிறவர்களுக்குப் பயனாகும் என விவரங்களைப் பகிருகிறேன்.

திங்கள், 31 டிசம்பர், 2012

பெண்மை வாழ்கவென..


நாற்பது வருடங்களாகக் கோமாவில் இருக்கிறார் அருணா ஷான்பாக். தற்போது 64 வயதாகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் பத்திரிகையாளரும் அவரது தோழியுமான பிங்கி விரானியால் இவருக்காகக் கோரப்பட்ட கருணைக் கொலைக்கான மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து தள்ளுபடி செய்யப்பட்ட போதுதான் இவருக்கு நேர்ந்த கொடுமை பலகாலம் கழித்து மீண்டும் உலகின் கவனத்திற்கு வந்தது. சோஹன்லால் பர்தா வால்மிகி எங்கோ உத்திரபிரதேசத்தில் கல்யாணம் காட்சி பார்த்து புள்ளையும் குட்டியுமாக நன்றாக இருக்கிறான் எனக் கேள்வி. தன் பிறப்பின் அர்த்தம் என்னவென்றே தெரியாமல் அருணா சுவாசித்துக் கொண்டிருக்கிற காற்றில் இந்த சமூகத்தின் அலட்சியமும், இன்றைய நொடி வரைத் தன்னை மாற்றிக் கொள்ளாத ஆணவமும் கலந்திருக்கிறது.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

செல்லம் செல்லம் செல்லமே..

நாய் வளர்ப்பவர்களுக்கு பெங்களூர் குடியிருப்புகளில் வாடகைக்கு வீடு கிடையாது. அது குறித்துக் கடைசியில்..

பூனை, நாய்ப் பிரியர்களா நீங்கள்? உங்களுக்காக முதலில் சில படங்கள்!

#1 பொம்மையைப் போல்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin