#1
பிரம்மக் கமலம் ( Epiphyllum oxypetalum) மலரைக் குறித்து ஏற்கனவே 2012 ஆம் ஆண்டில் விரிவாக இங்கே.. “
பத்து பிரம்மக் கமலங்கள் - அபூர்வமாய்ப் பூத்த அதிசய மலர்கள்” பகிர்ந்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து சில வாரங்களில் என் வீட்டிலும் ஒரு தொட்டியில் ஓர் இலையை நட்டு வைத்தேன். இலையின் விளிம்புகளிலிருந்து மேலும் இலைகளும், தண்டுகளுமாய் துளிர்த்தன. அதில் ஒரு தண்டு மட்டும் சற்று தடிமனாக, மெல்ல மெல்ல உயரமாக, சுமார் எட்டடி அடி உயரத்துக்கு வளர்ந்து, வளைந்து வீட்டு சன்னல் வழியாக எட்டிப் பார்த்து ‘நான் இங்கு நலமே.. நீ அங்கு நலமா..’ என விசாரித்தபடியே இருந்ததே தவிர ஒரு மொட்டு கூட விடவில்லை நான்கு வருடங்களாக. இரு மாதம் முன்னர் வீடு மாறி வந்த போது மற்ற தொட்டிச் செடிகளை அங்கிருந்த நண்பர்களுக்கு கொடுத்து விட்டாலும் இதை மட்டும் கொண்டு வந்து இங்குள்ள தோட்ட மண்ணில் நட்டு வைத்தேன். கொடி போல் வளைந்தபடி இருந்த செடியை ஒரு முருங்கை மரக் கம்பை நட்டு அதில் கட்டியும் வைத்தேன்.
நான்கு வருடக் காத்திருப்புக்குப் பின், அட, இரண்டு மொக்குகள் விட்டிருந்தது செடி, புதிய இடத்தில்.. புதிய மண்ணில்..
மலர் விரியும் அழகு பனிரெண்டு படங்களாக உங்கள் பார்வைக்கு..
மொக்கு, நான்கைந்து நாட்கள் முன்னர்..
#2
இன்று காலையில்..
#3
#4