#1
வெண்புருவக் கொண்டலாத்தி, ஒரு கொண்டை வகைப் பறவை. ஆங்கிலப் பெயர்: White-browed Bulbul. உயிரியல் பெயர்: Pycnonotus luteolus.
இலங்கையிலும் இந்திய தீபகற்பத்திலும் வாழ்கின்றன. தென்னிந்தியாவில் ஆண்டின் குறிப்பிட்ட காலங்களில் காணப்படுகின்றன. வடக்கே குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் காய்ந்த பரந்த கிராமப்புற குறுங்காடுகளிலும், அடர்த்தியான புதர்களுள்ள குறுங்காடுகளிலும் மற்றும் தோட்டங்களிலும் காணப்படும்.
#2
வெண்புருவக் கொண்டலாத்தியின் நீளம் 20 செ.மீ (சுமார் 7 அங்குலம் 8) இருக்கும். உடலின் மேற்பகுதி ஆலிவ் நிறத்திலும், கீழ்ப் பகுதியின் மேற்பக்கம் வெண்மையாகவும், அடிப்பக்கம் மஞ்சளாகவும் காணப்படும். வெண் கண் புருவம், கண்களுக்குக் கீழ் வெள்ளை நிறப் பிறை வடிவம் மற்றும் மீசை போன்ற கரிய கோடு ஆகியன இவற்றின் சிறப்பு அடையாளம் எனலாம்.