#1

“18 ஜனவரி 2013, அன்று கர்நாடக முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு பெங்களூர் லால்பாகில் நடந்து கொண்டிருக்கிறது மலர் கண்காட்சி. இந்த வருடத்தின் பிரதான அம்சமாக 35 அடி உயரமும், 20X20 அடி பரப்பளவும் கொண்ட ஈஃபில் டவர் உருவாகியிருக்கிறது இரண்டரை இலட்சம் ரோஜாக்களாலும் பத்தாயிரம் ஆர்க்கிட் மலர்களாலும். அதன் முன்னே 6 அடி உயரத்தில் எழுந்தருளி நிற்கிறார் விவேகானந்தர். அவரது பொன்மொழிகளும் சிலையைச் சுற்றி பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. விவேகானந்தரின் 150-வது பிறந்த தினம் அனுசரிக்கப்படுகிற ஆண்டு இது. இந்த இரண்டு மலர்க் கட்டுமானங்களுடன் அந்தூரியம் மலர்களால் ஆன உடையணிந்த பார்பி பொம்மையும் இடம் பெற்றிருக்கிறது. போகச் சுற்றி வரப் பல மலர் அலங்காரங்கள், போன்சாய் பார்க்கில் 500 செடிகள் என நீள்கிறது மக்களைக் கவரும் அம்சங்கள். ....
#2
#3 முக்கிய அம்சங்களாய் பாரீஸின் ஈஃபில் கோபுரமும் விவேகானந்தரும்..

'இத்தனை வருடங்களிலும் பெங்களூரில் எது மாறினாலும், திருவிழா போல் வருடம் இருமுறை நடைபெறும் மலர்கண்காட்சிகளும், அலைமோதும் கூட்டமும், ஆர்வத்துடன் காண வரும் மக்களின் உற்சாகமும் மட்டும் மாறவேயில்லை' என ஒருவர் பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மையும் கூட.” என சென்ற பதிவில் கண்காட்சி
குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தேன். சென்று வந்து, படங்கள் இருபத்து
மூன்றைப் பகிர்ந்து கொள்கிறேன் குடியரசு தின வாழ்த்துகளுடன்.
#2