ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

வெற்றிக் கதைகள்

 #1

"கடினமாக உழைத்தால், 
உங்களை நீங்கள் நம்பினால், 
எவரும் எதுவும் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாது."

#2
"இருக்கும் இடத்திலேயே நின்று கொண்டிருந்தால் 
நீங்கள் விரும்பும் இடத்தை அடைய முடியாது."


#3
"உங்களுடைய வெற்றிக் கதையை உருவாக்க எத்தனை வெற்றிக் கதைகளைக் கேட்டபடியே இருப்பீர்கள்?"

#4
"சில சமயங்களில் நீங்கள் செய்யக் கூடிய மிகத் தைரியமான செயல்,  
உண்மையிலேயே விட்டு விடலாம் என உணரும் போது, 
தொடர்ந்து செல்வது."

#5
"முயற்சி முக்கியம், 
ஆனால் எந்த இடத்தில் முயன்றிட வேண்டும் என்பதை அறிந்திருப்பது 
அனைத்தை விடவும் முக்கியம்!"

#6
“அடைய முடிகிற தூரத்திலேயே 
உங்களுக்குத் தேவையான அனைத்தும் உள்ளன, 
யார் அதை அடையப் போகிறீர்கள் என்பதே கேள்வி.” 
_ Jim Rohn

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 133
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

8 கருத்துகள்:

 1. அணிலின் சாகஸம் அருமை.
  அனைத்தும் அழகு, அருமை.

  பதிலளிநீக்கு
 2. ஆ! படங்கள் எல்லாம் கொள்ளை அழகு! அணில், ஓணான், எல்லாம். அந்த ஒல்லிப் பச்சைப் பூச்சி நானும் எடுத்து வைத்திருக்கிறேன். அது இலையில் ஏறும் அழகே அழகு.

  வரிகளும் அருமை. படங்களை மிகவும் ரசித்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 3. படங்களும் வாசகங்களும் சிறப்பு. அனைத்தும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin