Wednesday, July 31, 2013

அன்பின் வழியது

1. இருக்கின்றன இறக்கைகள் ஏற்கனவே. செய்ய வேண்டியதெல்லாம் சிறகை விரிப்பதும், பறப்பதுமே.

2. இன்றின் இனிமையை நேற்றின் கசப்புகள் குலைத்திடாமல் பார்த்துக் கொள்வோம்.

Sunday, July 28, 2013

பார்த்த கண்ணு மூடாதாம்

வாங்க வலம் வரலாம்.. மலர் வனத்தை..

#1 கண் மலர்ந்த காகிதப்பூ

2. போகன்விலா


Petunia: 

Thursday, July 25, 2013

காவியமா.. ஓவியமா.. - நெல்லை மாரியப்பன் தூரிகை செய்கிற மாயம் - பெங்களூர் சித்திரச்சந்தை 2013 (பாகம் 4)

பெண் குழந்தைகளைப் போற்றும் விதமாகவும், மறந்தும், மறைந்தும் கொண்டிருக்கும் கிராமத்து அடையாளங்களை மீட்டெடுக்கும் விதமாகவுமே தன் அனைத்துச் சித்திரங்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்கிற ஓவியக் கலைஞர் மாரியப்பனுக்கு மகளும் நண்பர்களின் குழந்தைகளுமே மாடல்கள். சென்ற சித்திரச்சந்தையில் அசத்தியது போலவே இவ்வருடமும் அசத்தியிருந்தார் ஐந்து அற்புதமான உயிரோவியங்களுடன். இச்சித்திரங்களில் ஒளி அமைப்புக்கு அவர் எடுத்துக் கொண்டிருந்த கவனம் என்னை வெகுவாகு ஈர்த்தது.

#1 ஒளியிலே தெரிவது..
தேவதையா..?
 #2 பூங்குழலி

Saturday, July 20, 2013

உப்புத் தாத்தாவும் காந்தித் தாத்தாவும்.. - “உழைக்கும் முதியோர்” - ‘தி ஹிந்து’ அகில இந்தியப் புகைப்படப் போட்டி

லால்பாகில்.. (2011)
முரப்பநாடு ஆற்றங்கரையோரம் (2010)

கருங்குளம் குன்றில் சுக்கு வென்னீர் விற்பவர் (2010)
தி இந்து நாளிதழின் ஷட்டர்பக் அறிவித்திருக்கும் அகில இந்திய அளவிலான இம்மாதப் போட்டி ‘உழைக்கும்  முதியோர்’.

வயிற்றுக்காக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் சிலர்; உடம்பில் தெம்பில்லாவிட்டாலும் மன பலத்துடன் வாழும் வரை தன் காலில் நிற்கவேண்டும் என்கிற உறுதியோடு சிலர்; தள்ளாத வயதிலும் குடும்பத்துக்கான தம் பங்களிப்பைக் கொடுத்தாக வேண்டிய சூழலில் சிலர் எனக் காரணங்கள் வெவ்வேறாக இருப்பினும் நாடெங்கிலும் இவர்களது எண்ணிக்கை அதிகரித்தபடியேதான் இருக்கிறது.

இது குறித்த ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவரும் நோக்கத்துடன் பிர்க்பெக் பல்கலைக் கழகம், லண்டன் மற்றும்  மனித உரிமை காப்புறுதி ஆய்வு மையம், சென்னை ஆகியவற்றோடு கை கோர்த்து ‘தி ஹிந்து’  இப்போட்டியை அறிவித்திருக்கிறது.  இந்நிலையில் மாற்றம் கொண்டு வர இந்த ஆய்வு உதவும் என நம்புகிறது.

பரிசு விவரங்கள்:

Thursday, July 18, 2013

பிளாஸ்டிக் தவிர்ப்போம் - "பை.. பைகள்.." - ஜூலை PiT

பை, பைகள் இதுதான் இம்மாதப் போட்டித் தலைப்பு. படங்களை அனுப்ப முழுதாக இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன என்பதை நினைவூட்டிட இந்தப் பகிர்வு, எட்டு மாதிரிப் படங்களுடன்.

#1
இசையும் கலையும்
இல்லாவிடில்
இனிக்குமா வாழ்வு?

Tuesday, July 16, 2013

வண்ணத்தில் பிரதிபலிக்கும் வாழ்வு - கல்கி கேலரியில்..

ஓவியர் செல்வியின் பேட்டி, நான் எடுத்த அவரது ஓவியங்களின் படங்களுடன் சென்ற வாரக் கல்கி கேலரியில்..

Sunday, July 14, 2013

காஃபி பெயின்டிங் - “ஓம்” விநாயகர் - பெங்களூர் சித்திரச் சந்தை 2013 (பாகம் 3)

"ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும், 
ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும், 
ஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ" 

காஃபி பவுடரைக் கொண்டு, ‘ஓம்’ எனும் எழுத்தோடு, விதம் விதமாக அருள்பாலிக்கும் விநாயகர் சித்திரங்களைத் தீட்டி பலர் கவனத்தை ஈர்த்திருந்தார் சித்திரச் சந்தையில் ஓவியர் செல்வி.

#1 ஏக தந்தர்
ஏக எனில் மாயை; தந்தன் எனில் மறைந்திருப்பவன். மாயைக்கு ஆட்படாமல் விலகி நிற்பவன் இவன். ஏகம் என்றால் ஒன்று என்றும் ஒரு பொருள் உண்டு. வியாசர் சொல்லச் சொல்ல, மகாபாரதத்தை, தன் தந்தம் ஒன்றை உடைத்து எழுதியதால், எஞ்சிய ஒரு தந்தத்துடன் விளங்குபவர் என்றும் கொள்ளலாம். 
#2 பால கணபதி

Friday, July 12, 2013

Frangipani - அரும்பிலிருந்து அழகு மலராக..

Frangipani, Temple Tree எனப் பரவலாக அறியப்படும்   Plumeria,  ஏழெட்டு வகைகளில் குறுஞ்செடிகள், சிறு மரங்களில் பூக்கிறது. தமிழில் அரளி, நாவில்லா அரளி, அலரி, பாதிரிப்பூ, நாகவல்லிப்பூ போன்ற பெயர்களால் அறியப்படுகிறது. (முதலில் தலைப்பிட்டிருந்தபடி ‘சம்பங்கி’ அல்ல. Tuberose மலரே தமிழில் சம்பங்கி.) தேன் அற்ற இம்மலர்கள் இரவில் மணம் பரப்புகின்றன விட்டில் மற்றும் அந்துப் பூச்சிகளை ஈர்க்க.  தேனைத் தேடித் தேடி ஒவ்வொரு மலராக அமரும் பூச்சிகள் மகரந்தத்தைக் கடத்துகின்றன ஏமாந்தபடியே.

நடுவில் மஞ்சளும் இதழோரங்கள் வெண்மையிலுமாக இருக்கும் இம்மலர் அரும்பு விடுவதோ ஆழ் பழுப்பு வண்ணத்தில்..

#1 இளம் அரும்புகள்

#2 முறுக்கிப் பிழிந்த துவாலையாக.. வெண்மொட்டுகள்

Wednesday, July 10, 2013

காற்றின் திசை

1. குமிழ் விட்டுக் கொதிக்கும் நீரில் பிரதிபலிப்பைக் காண முடியாது. கோபம் உண்மையை உணர விடாது. அமைதியில் பிறக்கும் தெளிவு.


2. நமது படகும் நதியில்தான். பிறர் தாழ்வில், தடுமாற்றத்தில் இகழ்ச்சி, மகிழ்ச்சி ஏன்?

Sunday, July 7, 2013

சிங்கம் 2 - ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டாம்ல..

சிங்கத்தின் ஒரு கர்ஜனை, ஒரு உறுமல் எப்படி சுற்றியிருக்கிற அத்தனை பேரையும் கதிகலங்க வைத்து விடுகிறது என்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது. காட்டுல உலாத்தினாலும் நாட்டுல வசிச்சாலும் சிங்கம் சிங்கம்தான்.

Wednesday, July 3, 2013

மீன்கள் நீந்தும் ஓவியங்கள் - பெங்களூர் சித்திரச்சந்தை 2013 (பாகம் 2)

ஒவ்வொரு ஓவியருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கிறது என்பதை அறிவோம். வித்தியாசமான பாணியால் இந்த ஓவியர் நம் கவனத்தைப் பெறுகிறார்.  சமுத்திரத்திலும் ஆற்றிலும், ஏரியிலும் குளத்திலும் இவர் குழைத்தெடுத்தத் தூரிகையில் ஒட்டிக் கொண்டு வந்து உற்சாகமாய் நீந்துகின்றன இவர் தீட்டிய ஓவியங்களில் நூற்றுக்கணக்கில் மீன்கள்.

# 1
முதல் பார்வையில் முக்காடிட்ட பெண்ணோ எனத் தோன்றினாலும்.. உற்றுப் பாருங்கள் புரியும்..

Tuesday, July 2, 2013

ஒரு நிழற்படம் - ஷிர்லி டெளல்ஸன் ஆங்கிலக் கவிதை - அதீதத்தில்..


அந்த நிழற்படம் காண்பித்தது எப்படி இருந்ததென
மாமன் மகள்கள் இருவரின் அலைகளுடனான விளையாட்டை.
ஆளுக்கொன்றாகப் பற்றிக் கொண்டிருந்தார்கள்
என் அம்மாவின் கைகளை,
அவர்களில் பெரிய சிறுமியான அவளுக்கு
இருக்கலாம் ஒரு பனிரெண்டு வயது.
மூன்று பேரும் அசையாது நின்றிருந்தார்கள்
தங்கள் நீண்ட கூந்தலின் வழியே சிரித்தபடி,
மாமாவின் நிழற்படக் கருவி முன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin