பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 மே, 2026

புனித ஃபிலோமினா தேவாலயம் - மைசூர்

ஆசியாவின் மிக உயரமான மற்றும் பெரிய தேவாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது மைசூரிலுள்ள புனித ஃபிலோமினா தேவாலயம் (St. Philomena’s Cathedral). 1936-ல், ஜெர்மனியில் உள்ள 'கொலோன்' தேவாலயத்தின்  'நியோ கோதிக்' எனும் கட்டிடக்கலை பாணியைத் தழுவிக் கட்டப்பட்டது.

இதன் முழுப் பெயர், புனித ஜோசப் மற்றும் புனித ஃபிலோமினா தேவாலயம். இது புனித செயின்ட் ஜோசப் தேவாலயம் என்றும் அறியப்படுகிறது. 

#2
புனித ஜோசஃப் குழந்தை ஏசுவுடன்:

#3


#4
புனித ஃபிலோமினா

புனித ஃபிலோமினா 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கிரேக்க இளவரசி. 

சனி, 14 மார்ச், 2026

தூறல்: 49 - ஒரு கணம் காக்கும் பொறுமை

ஃப்ளிக்கரில் பதிந்து, இங்கு பதியாதவை, எங்கும் பகிராதவை எனப் பல படங்கள் சேர்ந்து விட்டுள்ளன. அவ்வப்போது அவற்றை (random)  சார்பற்றப் பகுப்பாக, தூறல் பகிர்வாகத் தொகுத்திட எண்ணியுள்ளேன். 

பயணங்களில் எடுத்த படங்கள் சில..:

சென்ற மாதம் தூத்துக்குடி வழியாக நெல்லைக்குச் சென்றிருந்த போது ஜூலை 2025_ல் பிரதம மந்திரியால் திறக்கப்பட்டு, ஆகஸ்ட் 2025 முதல் இயங்கத் தொடங்கிய வாகைகுளம் புதிய விமான நிலையத்தில் இறங்கினோம். பழைய விமான நிலையத்தை விடப் பல மடங்கு பெரிதாகவும் கலா ரசனையுடனும் கட்டப்பட்டள்ளது. அங்கே எடுத்த படங்கள் சில:

#1


#2 
கடலும் வானும் வரவேற்கும் சுவர்சித்திரம்

[இன்னும் இருந்த பல கலைப் படைப்புகளைப் படமாக்க நேரம் இருக்கவில்லை.]

#3 
முத்து நகரத்திற்குப் பொருத்தமாக,

புதன், 11 மார்ச், 2026

பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி தகவல் மையம் - ரங்கனதிட்டு சரணாலயம் (2)

ர்நாடகாவின் மிகப் பெரிய பறவைகள் சரணாலயம் ரங்கனதிட்டு. 40 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு 3 கிமீ தொலைவில் மாண்டியா மாவட்டத்திலுள்ளது. காவேரி நதிக் கரையில் அமைந்த  இதன் ஆறு தீவுகளுக்கும் விதம் விதமான பறவைகள் தேடி வருவதையும், கூடு கட்டும் இடமாகக் கொண்டிருப்பதையும் கண்டறிந்த பறவையியலாளரான டாக்டர் சலீம் அலி, மைசூர் மன்னரிடம் பரிந்துரைத்ததன் பேரில் 1940_ஆம் ஆண்டு இந்த சரணாலயம் உருவானது என்பது குறித்து ‘பக்ஷி காசி - பாகம் 1_ல் குறிப்பிட்டிருந்தேன். அவரைக் கெளரவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதே  "டாக்டர் சலீம் அலி தகவல் மையம் ( Dr. Salim Ali Information Centre )".

#1

சரணாலய நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வரும் இத்தகவல் மையம் சரணாலத்தின் நுழைவாயில் பகுதியிலேயே அமைந்துள்ளது. 

ரங்கனதிட்டுவின் நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்பின் மீது இந்த மையம் ஆழமான மதிப்பை ஏற்படுத்துகிறது. பறவைகள் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது. குறிப்பாக டாக்டர் சலீம் அலியின் பங்கை முன்னிலைப்படுத்துகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

#2


#3


#4

சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்த மையத்தில்,  ரங்கனதிட்டு சரணாலயம் முழுமையாக அறிந்து கொள்ள, சுற்றிப் பார்க்க உதவும் வகையில் தெளிவான வரைபடம் உள்ளது. பறவைகளின் குரல்களைக் கேட்டு அறிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் மற்றும் ஆடியோ-விஷுவல் வசதிகள்  சேர்க்கப்பட்டுள்ளன. மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான ‘விநாடி வினாப் பலகை’ அமைக்கப்பட்டுள்ளது.

#5


பலவகைப் பறவை இனங்கள், அவற்றின் கூடுகட்டும் முறைகள் மற்றும் உடல் பண்புகள் பற்றிய விரிவான தகவல்களை இந்த மையம் வழங்குகிறது. 

#6 அலகு அமைப்புகள், இறகு வடிவங்கள் மற்றும் நிறங்கள், அவற்றின் பல்வேறு வகையான கால்கள் மற்றும் கால்களின் பயன்கள் குறித்தும் அறிந்து கொள்ள உதவுகிறது. 

ஒளியூட்டப்பட்டத் தகவல் பலகைகள்:

உரிய படங்களுடன், ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில், எளிதாக வாசிக்கும் வகையில் பெரிய எழுத்துக்களுடன், சுவாரஸ்யமான தகவல்களைத் தாங்கி நிற்கும் ஒளியூட்டப்பட்ட பலகைகள் இந்த மையத்தின் சிறப்பு. கூடுமானவரையில் மற்ற மின் விளக்குகளின் ஒளி அவற்றின் மேல் பிரதிபலிக்காமல் படமாக்கியுள்ளேன் ஆயினும், தமிழிலும் அத்தகவல்களைத் தந்துள்ளேன்.

#7 கர்நாடகாவின் “பக்ஷி காஷி”க்கு வரவேற்கிறோம்:

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

எல்லைகளுக்குள் சுருங்கிய சக்தி.. - மைசூர் விலங்கியல் பூங்கா

மைசூர் விலங்கியல் பூங்காவில் எடுத்தப் படங்களைத் தொகுப்பாக “வாழிடம் மாறி வசிக்கும் வனவிலங்குகள்” எனவும், தனித் தனி விலங்குகளின் படங்களைத் தகவல்களுடனுமாகப் பல பதிவுகள் பதிந்திருந்தேன். அந்த வரிசையில் தொடர்ந்து மேலும் ஃப்ளிக்கரில் பதிந்து வந்த படங்களின் தொகுப்பு.  

கழுத்தை உயர்த்தியும் தாழ்த்தியுமாக உலவிக் கொண்டிருந்த பல ஒட்டகச் சிவிங்கிகளை விடாது நானும் கழுத்தை உயர்த்தி, வளைத்து வளைத்து எடுத்த படங்கள் முதலில்:

#1  
உயரம் என்பது கர்வம் அல்ல,
அது உலகை அமைதியாகப் பார்க்கும் ஒரு பார்வை.


#2

இயற்கையின் சித்திரம்


#3

பசுமை வேட்டை

வியாழன், 5 பிப்ரவரி, 2026

தாமிரபரணி மண்ணின் மகுடம் | நெல்லையப்பர் திருக்கோயில் | 2026

2026:
[நெல்லையப்பர் கோபுரம்]

யுகங்கள் கடந்தும் கம்பீரம் குறையாத கோபுரங்களின் தரிசனம், சொர்ண புஷ்கரணியின் அமைதி, பிரகாரங்களிலும் மண்டபங்களிலும் சூரியக் கதிராக ஊடுருவி நிற்கும் இறையருள்! அண்மையில் எடுத்த 15,  +4 படங்களுடன் ஒரு பகிர்வு.


#2 காந்திமதி தாயார் கோபுரம்


#3 அம்மன் சன்னதி கொடிமரம் (துவஜஸ்தம்பம்)

புதன், 7 ஜனவரி, 2026

தர்பார் மண்டபங்கள்; கூரை ஓவியங்கள் - மைசூர் அம்பா விலாஸ் அரண்மனை

 

மைசூர் அரண்மனை பற்றிய விரிவான தகவல்களுடனும் 27 படங்களுடனும் ஆன எனது 2017_ஆண்டுப் பதிவு ஒன்று இங்கே: “அம்பா விலாஸ்”.

முன்னரெல்லாம் அரண்மனையை வெளியிலிருந்து படங்கள் எடுத்துக் கொள்ள மட்டுமே அனுமதி இருந்தது. உள்ளே செல்லும் முன் மீண்டும் நுழைவாயிலுக்குச் சென்று கேமரா, மொபைல் அனைத்தையும் லாக்கரில் ஒப்படைத்து விட்டே செல்ல வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் பலமுறைகள் சென்ற போதும் இதுதான் விதிமுறையாக இருந்ததால் ‘அதில் என்ன மாற்றம் வந்து விட்டிருக்கப் போகிறது’ என்று சற்றே அலட்சியமாக இருந்து விட்டேன் இந்த முறை. அரண்மனைக்குச் செல்வது பயணத் திட்டத்திலும் இருக்கவில்லை. ஆனால் உயிரியல் பூங்காவுக்குப் போய் விட்டுத் திரும்பும் வழியில் நேரம் இருந்ததால், அரண்மனைக்கு வெளியே மட்டும் சுற்றி விட்டு வரலாம் என்கிற முடிவுடன் சென்றேன். 

#2


#3


அந்தியில் மின்னிய அரண்மனையின் வெளித் தோற்றத்தை ஓரிரு படங்கள் எடுப்போம் என ஆரம்பித்த போதுதான் கவனித்தேன், முதல் தளத்தில் பலபேர் கையில் அலைபேசிகளுடன் செல்ஃபி எடுத்தபடி நின்றிருந்ததை. வியப்பாகி அங்கிருந்த காவலரிடம் கேட்ட போது, ‘உள்ளே ஃபோட்டோகிராஃபி அலவ்ட்’ என்றார். “ நீங்கள் போக வேண்டுமா? ஐந்தரை மணி வரையிலும்தான் அரண்மனைக்குள் நுழைய முடியும், ஆறு மணிக்கு வெளியேற்றி விடுவார்களே. வேகமாகப் போங்கள்” என்றார். இன்னும் 5 நிமிடங்களே இருக்க அரக்கப் பரக்க விரைந்து ஒருவாறாக நுழைந்து விட்டோம்.

#4

அரை மணி நேர அவகாசமே இருந்ததாலும், உள்ளே இருந்த கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே மக்களை அவசரப்படுத்தியபடி இருந்ததாலும், ஆற அமர படமாக்க முடியவில்லை. கிடைத்த நொடிகளில் ரசித்து எடுத்தவற்றின் அணிவகுப்பு கீழே.. 

ரண்மனையில் முதல் தளத்தில் அமைந்துள்ளன இரண்டு தர்பார் மண்டபங்கள். தெற்கு பார்க்க அமைந்திருப்பது மன்னர் பார்வையாளர்களைச் சந்திக்கும் பொது தர்பார் மண்டபம்.  

கிழக்குப் பார்க்க அமைந்திருப்பது மகராஜா தனிப்பட்ட விருந்தினர்களைச் சந்திக்கும் அம்பா விலாஸா எனப்படும், தனிப்பட்ட தர்பார் மண்டபம். 

னிப்பட்ட (private) தர்பார் மண்டபம் ‘அம்பா விலாஸா’ என அழைக்கப்படுவதுடன் அதன் பெயரே அரண்மனைக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

#5

இது இந்தோ-சரசெனிக் (Indo-Saracenic) கட்டடக்கலைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

செவ்வாய், 11 நவம்பர், 2025

இறகுகளின் வண்ணவிழா.. நீல-வெண் மயில்களும் பச்சைக் கிளிகளும்.. – மைசூர் கராஞ்சி இயற்கைப் பூங்கா (2)

#1
வானுயர்ந்த சோலையிலே..

#2
இயற்கையின் அமைதிக்குள் இறை உருவம்


இறகுகளின் வண்ணவிழா:

பறவைகளைக் கவனிப்பது ஒரு இனிய அனுபவம் எனில் எங்கு திரும்பினும் கண்ணைக் கவரும் வண்ண  இறக்கைகளுடனான பறவைகள் சூழ இருக்க எதைக் கவனிப்பது என்பது மேலும் இனிதான அனுபவம். நீல மயில்களும் வெள்ளை மயில்களும் தம் கம்பீரமான அசைவுகளால் சுற்றுப்புறத்தை அழகால் நிரப்பின என்றால், அலெக்ஸாண்ட்ரின் கிளிகள் தம் கீச்சொலிகளாலும், துடிப்பான பறத்தல்களாலும் பூங்காவை உயிர்ப்புடன் வைத்திருந்தன. வளைத்து வளைத்து எடுத்த படங்களை அவ்வப்போது ஃப்ளிக்கர் தளத்தில் தொடர்ந்து பகிர்ந்து முடித்து, இங்கு தொகுப்பாக அளிக்கிறேன்.

நீல-வெண் மயில்களும் பச்சைக் கிளிகளும்:

#3


#4

#5

#6


#7


#8


#9


#10

#11


#12

#13


#14

#15

#16

#17

#18


#19

*
பறவை பார்ப்போம் - பாகம்: 132
**
கராஞ்சி இயற்கைப் பூங்கா - பாகம் 1: இங்கே
***

புதன், 29 அக்டோபர், 2025

அழகான கேசவன் - மைசூர் சோமநாதபுர கோயில் - பாகம் 2

 

புனித நதியான காவேரியின் கரையோரத்தில் அமைந்துள்ள சென்ன கேசவா கோயில் குறித்த தகவல்கள் மற்றும் 18 படங்களுடன்  பகிர்ந்த பாகம் 1 இங்கே

#2

இக்கோயில் ஹொய்சாளப் பேரரசு மன்னர்களால், அவர்களது ஆட்சியின் கீழிருந்த பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட 1500 கோயில்களில் ஒன்று. அவர்களது கட்டிடக் கலையின் உச்சக்கட்ட வளர்ச்சியாக இந்தக் கோயில் பார்க்கப்படுகிறது. அதனாலேயே பல வழிகளில் தனித்துவமாக விளங்குகிறது.

செவ்வாய், 7 அக்டோபர், 2025

சென்னகேசவா கோயில் - சோமநாதபுரம், மைசூர் - பாகம் 1

 #1

சென்னகேசவர் கோயில் மைசூரிலிருந்து 38 கிமீ தொலைவில் உள்ள சோமநாதபுரத்தில், காவேரி நதிக்கரையோரம் அமைந்துள்ளது. வைணவ இந்து கோயிலாகிய இது, சென்னகேஷவா கோயில் மற்றும் கேசவா கோயில் என்றும் குறிப்பிடப்படுகிறது. சென்னகேசவ என்ற சொல் "அழகான கேசவன்" என்று பொருள்படும். இதுவே ஹொய்சாள அரசர்களால் கட்டப்பட்ட கடைசி பெரிய கோயிலாகும். ஹொய்சாள கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றும் ஆகும்.

#2


#3


#4

புதன், 17 செப்டம்பர், 2025

கோபுர தரிசனம் - திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயில்

 #1

சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ஸ்ரீ பார்த்தசாரதி கோவில், ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். 6_ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த வைணவக் கோவில் பார்த்தசாரதி வடிவிலான விஷ்ணு பகவானுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. ' பார்த்தசாரதி ' என்ற பெயருக்கு ' அர்ஜுனனின் தேரோட்டி' என்று பொருள்படும். 

மூலவரான பார்த்தசாரதி பெருமாள் சுமார் ஒன்பது அடி உயர சிலையாக மீசையுடன் தனித்துவமான வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.

சனி, 30 ஆகஸ்ட், 2025

கோபுர தரிசனம் - வடபழநி ஆண்டவர் கோயில்

#1

#2

#3

டபழனி முருகர் கோயில் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒன்றாகும். முருகரின் சிலை தமிழகத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பழனி கோயிலில் உள்ள சிலையைப் போலவே இருப்பதால், இது வடபழனி கோயில் என்று அழைக்கப்படலாயிற்று.

#4 தல வரலாறு:

செவ்வாய், 29 ஜூலை, 2025

பக்ஷி காசி - ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் (1)

 #1

கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ளது  ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் (Ranganathittu Bird Sanctuary). ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும், மைசூருக்கு வடக்கே 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கர்நாடகாவின் ‘பக்ஷி காசி’ என, பறவைகளைப் பாதுகாக்கும் புனிதமான இடம் எனும் பொருள்பட அழைக்கப்படுகிறது. 

#2  

#3


மாநிலத்தின் மிகப் பெரிய பறவைகள் காப்பகம் இதுவே.  சுமார் 40 ஏக்கர் (16 ஹெக்டேர்) பரப்பளவு கொண்டது. காவிரி ஆற்றின் கரையில் ஆறு தீவுகளைக் கொண்டுள்ளது.

1645 - 1648 ஆண்டுகளில் அப்போதைய மைசூர் மன்னர் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது இத்தீவுகள் உண்டானது. 

#4

பின்னாளில் பறவையியலாளர் சலீம் அலி, பல வகையான பறவைகள் இத்தீவுகளைத் தேடி வருவதையும், கூடு கட்டும் இடமாகக் கொண்டிருப்பதையும் கண்டறிந்து,

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin