ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

அன்பின் சக்தி

  #1

"ஒவ்வொரு எதிர்காலமும் 
வெகுதொலைவில் இல்லை."

#2
"இயற்கை அன்னையின் அழகை 
ஒளிப்படக் கருவியில் பதிவதைப் போலொரு 
திருப்தியும் உந்துதலும் வேறெதிலும் கிடைப்பதில்லை."
[19 ஆகஸ்ட், உலக ஒளிப்பட தினத்தன்று 
ஃப்ளிக்கர் தளத்தில் பதிந்த படம்.]

#3
“பொறுமையை இழப்பதென்பது போரிலே தோற்பது.”
_ மகாத்மா காந்தி

#4
வாழ்வின் மூன்று எளிய விதிமுறைகள்:
*நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதன் பின் செல்லவில்லை எனில் அதை ஒருபோதும் அடைய மாட்டீர்கள்!
*நீங்கள் கேள்வி எழுப்பவில்லையெனில், எப்போதும் உங்களுக்கான பதில் ‘இல்லை’ என்பதே.
*ஒரு அடி முன் எடுத்து வைக்கவில்லை எனில், இருந்த இடத்திலேயே எப்போதும் இருப்பீர்கள்!

#5
ஆக, வாழ்க்கை என்பது தானாக அது எழுதிக் கொள்வது, 
தன்னை தானே சரிசெய்து கொள்ள முயன்றிடுவது, 
அதில் எந்தத் தவறும் இல்லை.
_ Robert Pollard 

#6
"அன்பின் சக்தி, 
சக்தியின் மீதான பற்றை வெல்லும் போது 
உலகம் அமைதியைக் காணும்." 
_ Jimi Hendrix


*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 149

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin