உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்து எல்லோருக்கும் நிறைய பாடங்களைச் சொல்லித் தந்து செல்கிறது 2020. நம் வாழ்நாளிலே இப்படியொரு ஆண்டை நாம் சந்தித்ததேயில்லை. அறிந்தவர், அறியாதவர், உறவுகள், நட்புகள் எனப் பலரும் பொருளாதாரம், உடல் நலம், நெருங்கியவர்களின் உயிரிழப்பு எனப் பல்வேறு பிரச்சனைகளிலும் துயரங்களிலும் மாட்டிக் கொண்ட காலக் கட்டம். இனி வரும் நாட்களிலேனும் இக்கட்டான இச்சூழல் மாறுமெனும் நம்பிக்கையோடு 2021_ல் அடி எடுத்து வைப்போமாக.
கவலைப் படவும் கவனமாக இருக்கவும் அன்றாட வாழ்வில் நம் நேரத்தையும் முக்கியத்துவத்தையும் பிற விஷயங்கள் ஆக்ரமித்துக் கொண்டு விட்ட சூழலில் அதிகமாக வலைப்பதிவுகளில் (blog posts), ஈடுபாடு காட்ட முடியா விட்டாலும் பத்திரிகை - மின்னிதழ்களில் சில கவிதைகள், நூல் மதிப்புரைகள், ஃப்ளிக்கரில் தொடர்ச்சியாக ஒளிப்படப் பதிவுகள் என எதைச் செய்ய முடிந்ததோ அதைச் செய்த வரையில் திருப்தியே.
வேகமாகப் பின்னோக்கி ஒரு பார்வை: