ஞாயிறு, 31 ஜூலை, 2022

கவிதை ஓர் அறிமுகம் - பில்லி காலின்ஸ் - சொல்வனம் இதழ்: 275


கவிதை ஓர் அறிமுகம்

அவர்களிடம் கேட்டுக் கொண்டேன் கவிதையொன்றை எடுத்து
வண்ணப் படத்தைப் போல
வெளிச்சத்தில் தூக்கிப் பிடிக்குமாறு

அல்லது செவியை அதன் தேன்கூட்டில் அழுத்தும்படி.

நான் சொன்னேன் எலியொன்றைக் கவிதைக்குள் விடுமாறு,

ஞாயிறு, 24 ஜூலை, 2022

பகற்கனவு

 #1

"வழியைக் கண்டு பிடியுங்கள், 
அல்லது உருவாக்கிடுங்கள்!"

#2

"நீங்கள் தீர்மானிக்க வேண்டியதெல்லாம் 
அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதையே. 
உண்மையில் இது மிக எளிதானது."


#3
"உரக்கச் சொல்லப்பட்ட உடன் 
எல்லாமே சற்று மாறி விடுகின்றன."

வெள்ளி, 15 ஜூலை, 2022

பகடையை உருட்டு - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (20) - சொல்வனம் இதழ்: 273

  

பகடையை உருட்டு

நீங்கள் முயற்சி செய்வதாயின்
முழுமையாக முயன்றிடுங்கள்.
அல்லது, தொடங்கவே தொடங்காதீர்கள்.

செவ்வாய், 12 ஜூலை, 2022

திரை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (19) - சொல்வனம் இதழ்: 273

  


திரை

நெடுநாட்களாக ஓடிக் கொண்டிருக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றின்
கடைசித் திரை, சில மனிதர்கள் அதை 
ஒருநூறு முறைகளுக்கும் மேலாகப் பார்த்துவிட்டதாகச் 
சொல்லிக் கொள்கிறார்கள்.

ஞாயிறு, 10 ஜூலை, 2022

மன அமைதி

  #1

நம்ப விழைவதை விடவும், 
கண்டறிய விழைவதே 
நமக்குத் தேவையான ஒன்று.
_William Wordsworth

#2.
இயற்கை உலகின் அழகு, 
அதன் நுணுக்கங்களில் உள்ளது.
_ Natalie Angier

#3 
வாக்குறுதி அளிக்காதீர்கள்,

புதன், 6 ஜூலை, 2022

எழுத்து - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (18) - சொல்வனம் இதழ்: 273

 எழுத்து


நேகமாக
இது ஒன்று மட்டுமே
உள்ளது
உனக்கும்
சாத்தியமற்றவைக்கும்
இடையினில்.
மதுவோ
மங்கையின் அன்போ 
செல்வமோ
அதற்கு
ஈடாகாது.
எழுத்தை
தவிர்த்து

ஞாயிறு, 3 ஜூலை, 2022

உறவென்பது.. - இணைப் பறவைகள் ஏழு

  #1

“நாம் நமக்கே உரித்தான நிதர்சனத்தின் அழகுக்காக வாழ்வோம்.”
_ Charles Lamb


#2
"எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், 
ஆனால் குடும்பம் எனும் கட்டமைப்பை விட 
எதுவும் முக்கியமில்லை."


#3
"அவர்கள் அவர்களாக இருக்கட்டும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin