புதன், 21 மார்ச், 2018

கடவுளின் ஆகச் சிறந்த படைப்பு - மக்களும் மழலைகளும்..(1)

#1


‘பெண்.. 
சக்தியின் அடையாளம்,
கடவுளின் ஆகச் சிறந்த படைப்பு,
அவளன்றி எப்படைப்பும் சாத்தியமில்லை!’


#2
ரோஜா என்றும் சூரியகாந்தியாக முடியாது, சூரியகாந்தி ரோஜாவாக முடியாது. எல்லாப் பூக்களும் பெண்களைப் போல அதனதன் வழியில் அழகானவையே. பெண்கள் தத்தமது தனித்தன்மையோடு திகழ, அவர்களை ஊக்கப்படுத்த விரும்புகிறேன்
_Miranda Kerr



#6
"தம் கனவுகளின் அழகில் நம்பிக்கை வைப்பவர்களுக்கே 
சொந்தமாகிறது எதிர்காலம் " 
- Eleanor Roosevelt.

#4
"அடக்கம் என்பது  தற்பெருமையை விடுத்து, 
அதே நேரம் கெளரவத்தைத் தக்க வைத்துக் கொள்வது."
_ Vanna Bonta

செவ்வாய், 13 மார்ச், 2018

கேட்காத பாடல்.. - வளரி - பெண் கவிஞர்கள் சிறப்பிதழில்..

களிர் தின மாதத்தையொட்டி, வளரி கவிதை சிற்றிதழின் பங்குனி இதழ், பெண் கவிஞர்கள் சிறப்பிதழாக வெளி வந்துள்ளது:
#

எனது ‘கேட்காத பாடல்’ கவிதையும்....

வெள்ளி, 9 மார்ச், 2018

காற்றோடு போனது.. - டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (1)

#1

ளராத நம்பிக்கையோடு வாழ்வில் நகருகின்ற சாமான்ய மனிதர்களை, மனதில் உறுதியோடு உழைக்கும் மக்களை படமாக்குவது எப்போதும் என் விருப்பத்துக்கு உரியதாக இருந்து வருகிறது. சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் மட்டுமின்றி, தேடிச் சென்றும் பல சமயங்களில் வாழ்வியல் சூழலோடு அவர்களைப் பதிந்து வந்துள்ளேன். அப்படியாக, இரு வருடங்களுக்கு முன் கொல்கத்தாவில் விக்டோரியா மஹாலுக்கு எதிரே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில்  படமாக்கிய இக்காட்சி சென்ற ஞாயிறு டெகன் ஹெரால்ட் நாளிதழின் ஞாயிறு பதிப்பில் ‘உழைக்கும் மனிதர்கள்’ எனும் தலைப்பின் கீழ் தேர்வான ஆறுபடங்களுள் ஒன்றாக வெளியாகியுள்ளது. 
#2
இந்தப் படம் ஃப்ளிக்கர் தளத்தில் பதிந்த போது "explore" பகுதியில்
வெளியாகி 3000+ பார்வைகளைப் பெற்ற ஒன்றும் ஆகும்.


#
வண்ணத்தில்.. 
வேறொரு கோணத்தில்..
கொல்கத்தாவின் அடையாளமான
மஞ்சள் டாக்ஸி பின்னணியில்..)

"அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை.. தினம் அல்லல் பட்டு அலைபவன் பொம்மை.."
நாங்கள் வீட்டில் வாங்குவது நாளிதழ் TOI. டெகன் ஹெரால்டில் மாதமிருமுறை வெளியாகும் அறிவிப்புகளை தோழி சுனந்தா அவ்வப்போது வாட்ஸ் அப்_பில் அனுப்புவார். அனுப்ப ஏற்றதான தலைப்புகள் இல்லாததால் தவிர்த்து வந்த நான் சென்ற முறை அவர் அனுப்பிய ‘வேலையில் மனிதர்கள்’ தலைப்பால் கவரப்பட்டு, நமக்கு மிகப் பிடித்த கருவாயிற்றே என முதன் முறையாக அனுப்பி வைத்த படம் தேர்வானதில் என்னை விட அவருக்கே மிகுந்த மகிழ்ச்சி.  நன்றி சுனந்தா. டெகன் ஹெரால்ட் நாளிதழுக்கும் நன்றி. உழைக்கும் மக்கள் வாழ்வு செழிக்க வேண்டும். மேலும் தேர்வான மற்ற படங்களை இங்கே காணலாம்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin