ஞாயிறு, 28 மார்ச், 2021
வெள்ளி, 26 மார்ச், 2021
கிணறு வற்றாத வரையில்.. - கண்ணமங்களா ஏரி, பெங்களூரு
#1
#2
பெங்களூரின் வொயில் ஃபீல்ட் பகுதியில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது கண்ணமங்களா ஏரி. சீகெஹள்ளி, தொட்டனஹள்ளி, கண்ணமங்களா ஆகிய மூன்று பஞ்சாயத்துகளின் கீழ் வரும் சுமார் 25000 மக்களுக்கு நீராதாரமாக இருந்து வருகிறது இந்த ஏரி.
#3
வியாழன், 18 மார்ச், 2021
கருஞ்சிட்டு (Indian robin )
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (97)
பறவை பார்ப்போம் - பாகம்: (63)
ஞாயிறு, 14 மார்ச், 2021
எட்டாத உயரம்
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (96)
பறவை பார்ப்போம் - பாகம்: (62)
#1
“நடப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்,
நடந்து முடிந்ததை விட்டு விடுங்கள்,
நடக்கவிருப்பதன் மேல் நம்பிக்கை வையுங்கள்.”
புதன், 10 மார்ச், 2021
இமயத்து விருந்தாளி.. இந்திய மாங்குயில் ( Indian golden oriole )
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (95)
பறவை பார்ப்போம் - பாகம்: (61)
#1
இமயத்தில் இருந்து என்னைத் தேடி வந்த விருந்தாளி இந்த ‘இந்திய மாங்குயில்’. ஒரு காலை நேரத்தில் பொன் மஞ்சள் நிறத்தில் இந்தப் பறவையைப் பார்த்ததும் பரவசமாகி விட்டேன். உற்சாகத்தில் படபடப்பாக கேமராவை எடுத்துக் கொண்டு விரைந்தால் வாராது வந்த அதிசயப் பறவை பதட்டமாகிப் பறந்து விடும் அபாயம் இருந்ததால் என்னை நானே நிதானப்படுத்திக் கொண்டு பதுங்கிப் பதுங்கி சன்னல் திரைச்சீலைக்குப் பின் ஒளிந்து நின்று படமாக்கினேன்:).
#2
குளிர் காலத்தில் இமயமலை மற்றும் ஆசியாவின் நடுப்பகுதிகளிலிருந்து நம் நாட்டிற்கு வலசை வரும் பறவைகளில் மாங்குயிலும் ஒன்று. இவை Partial migrants. அதாவது இந்த இனத்தின் எல்லாப் பறவைகளும் வலசை செல்வதில்லை. ஒரு சில மட்டுமே இடம் பெயர்ந்து செல்லும் வழக்கத்தைக் கொண்டிருக்கும்.
#3
வேறு பெயர்: மாம்பழக்குருவி
திங்கள், 8 மார்ச், 2021
மகளிர் தினம் 2021
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது ‘சர்வதேச மகளிர் தினம்’. பெரும்பாலான மக்கள் இதைப் பெண் உரிமைகளை வலியுறுத்தும் தினமாக நினைக்கின்றனர். ஆனால் இதன் வேர், உழைக்கும் மகளிரின் இயக்கமாகவே ஆரம்பமானது. 1911_ஆம் ஆண்டு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மார்க்ஸிய சித்தாந்தத்திலும் கம்யூனிஸ கொள்கையிலும் பற்று கொண்டவரும், வக்கீலும் ஆன ஜெர்மனியைச் சேர்ந்த க்ளாரா ஜெட்கின் இதைத் தொடங்கி வைத்தார். அப்போதிலிருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 மகளிர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
உலகெங்கிலும் பெண்கள் தம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் பயணத்தின் அடையாளமாக மகளிர் தினம் பார்க்கப்படுகிறது. எவ்வளவோ சாதிக்கப்பட்டிருந்தாலும் இப்பயணம் எவ்வளவு நீண்டது, இன்னும் எவ்வளவு செய்து முடிக்கப்பட வேண்டியுள்ளது என்பதற்கான நினைவூட்டலாகவும் இத்தினம் திகழ்கின்றது.
இந்த வருட மகளிர் தினத்திற்கான கரு, ‘சவால் விடுவோம்’ (#ChooseToChallenge)! சவால் விடப்படும் உலகம், எச்சரிக்கை உணர்வோடு இருப்பதோடு, சவால்களில் இருந்தே மாற்றங்களும் நிகழும் என்பதே இந்தக் கருவின் குறிக்கோளாகும். வரும் வருடம் மகளிர் தம்மைப் பின்னடைய வைப்பது எதுவாக இருப்பினும் அதை நோக்கிச் சவால் விட்டு வென்று காட்ட வேண்டும்.
போராட்டமான வாழ்க்கையை மன உறுதியுடன் எதிர்கொண்டு பயணிக்கும் மகளிரின் படங்கள் பத்தின் தொகுப்பு...
பெண் ஒரு முழுமையான வளையம். அவளுக்குள் இருக்கிறது உருவாக்கவும், பேணி வளர்க்கவும், உருமாற்றவும் முடிகின்ற ஆற்றல்.
#1
#2
#3
வியாழன், 4 மார்ச், 2021
சுகந்தொ பட்டாச்சார்யா கவிதைகள் - சொல்வனம் வங்காள இலக்கியச் சிறப்பிதழ் - பாகம் 2
வங்காள இலக்கியச் சிறப்பிதழின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள சொல்வனம் இதழ் 241_ல், நான் தமிழாக்கம் செய்த மற்றுமோர் கவிதையும் கவிஞரைப் பற்றிய குறிப்பும் ..!
நன்றி சொல்வனம்!
நற்சாட்சிப் பத்திரம்