Thursday, December 31, 2020

அள்ளித் தந்த பூமியும் சொல்லித் தந்த வானமும்.. 2020 - தூறல்: 39

லகத்தையே ஸ்தம்பிக்க வைத்து எல்லோருக்கும் நிறைய பாடங்களைச் சொல்லித் தந்து செல்கிறது 2020. நம் வாழ்நாளிலே இப்படியொரு ஆண்டை நாம் சந்தித்ததேயில்லை. அறிந்தவர், அறியாதவர், உறவுகள், நட்புகள் எனப் பலரும் பொருளாதாரம், உடல் நலம், நெருங்கியவர்களின் உயிரிழப்பு எனப் பல்வேறு பிரச்சனைகளிலும் துயரங்களிலும் மாட்டிக் கொண்ட காலக் கட்டம். இனி வரும் நாட்களிலேனும் இக்கட்டான இச்சூழல் மாறுமெனும் நம்பிக்கையோடு 2021_ல் அடி எடுத்து வைப்போமாக.

வலைப் படவும் கவனமாக இருக்கவும் அன்றாட வாழ்வில் நம் நேரத்தையும் முக்கியத்துவத்தையும் பிற விஷயங்கள் ஆக்ரமித்துக் கொண்டு விட்ட சூழலில் அதிகமாக வலைப்பதிவுகளில் (blog posts), ஈடுபாடு காட்ட முடியா விட்டாலும்  பத்திரிகை - மின்னிதழ்களில் சில கவிதைகள், நூல் மதிப்புரைகள், ஃப்ளிக்கரில் தொடர்ச்சியாக ஒளிப்படப் பதிவுகள் என எதைச் செய்ய முடிந்ததோ அதைச் செய்த வரையில் திருப்தியே.

வேகமாகப் பின்னோக்கி ஒரு பார்வை:

Wednesday, December 30, 2020

கவிதையான காட்சிகள் - வல்லமை 2020

ல்லமை மின்னிதழில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் படக் கவிதைப் போட்டிகளில் சென்ற ஆண்டு இறுதி வரையிலும் 10 முறைகள் எனது படங்கள் தேர்வாகியிருந்தன. இந்த ஆண்டில் மேலும் 16 படங்கள். 9 வயதான வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தில் https://www.flickr.com/groups/1922937@N20/ அதிக படங்களை நான் பகிர்ந்து வந்திருப்பதும் இந்த எண்ணிக்கைக்கு ஒரு விதத்தில் காரணம்:
காட்சிக் கவிதைகளாக ஆசிரியர் குழுவினரின் கருத்தைக் கவர்ந்த எனது படங்களின் தொகுப்பு இது, போட்டி அறிவிப்பு மற்றும் போட்டி முடிவுக்கான பதிவுகளின் இணைப்புகளுடன்..!

#1#2

#3

Thursday, December 24, 2020

முற்றுப் பெறா புதினம் - சொல்வனம் இதழ்: 236மெளனித்துக் கிடந்த
கரையின் மேல்
வந்து மோதுகின்றன
அலைகள்
அளப்பற்ற ஆற்றலுடன்.
ஒவ்வொரு மணற்துகள்களின்
ஊடாகவும்
தம் மூச்சினைச் செலுத்தி

Sunday, December 20, 2020

பகல் கனவு

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (87)

#1
“செயல்படுத்தாத தொலைநோக்குப் பார்வை 
பகல் கனவு. 
குறிக்கோள் அற்ற செயல்பாடு 
கொடுங்கனவு.”
[ஜப்பானியப் பழமொழி]

#2
 “இன்னும் சற்று நேரம் பற்றிக் கொள்ளுங்கள். 
அது உங்களை மேலும் உறுதியுடையவராக்கிடும்.”


#3
“எதற்காகவும் 
உங்கள் இலக்கை சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.
அதற்கான

Sunday, December 6, 2020

கனவுகளே சிறகுகள்!

   என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (86) 

பறவை பார்ப்போம் - பாகம்: (56)


#1
“மரத்தின் உச்சிக்குக் குறி வையுங்கள். 
ஒரு கிளையையேனும் கைப்பற்றிடலாம்!”

#2
“உங்கள் கனவுகள் 
உங்கள் சிறகுகளாய் இருக்கட்டும்!”


#3 
“ஒவ்வொரு நாளும் நடப்பதிலுள்ள நல்லதைப் பாருங்கள், 
ஒரு சில நாட்களில் சற்றுக் கடினமாகத் தேட வேண்டியிருந்தாலும் கூட.”

Sunday, November 29, 2020

Tuesday, November 24, 2020

தையல்சிட்டு ( Tailorbird ) - பறவை பார்ப்போம் - பாகம்: (55)

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (85) 

#1

ஆங்கிலப் பெயர்: Tailorbird

ஆங்கிலப் பெயர்: Tailorbird

நான்கே அங்குல உயரத்தில், நமது கைக்குள் அடங்கி விடக் கூடிய அளவில், பார்க்க அழகான தோற்றத்தைக் கொண்ட சின்னஞ்சிறு குருவி தையல்சிட்டு. தனியாகவோ ஜோடியாகவோ வயல்வெளிகளிலும் தோட்டங்களில் சுற்றித் திரியும். காடுகள், சிறு வனங்களிலும் பார்க்கலாம். 

குறிப்பிட்ட மாதங்களில் அவ்வப்போது நகர்புறத் தோட்டங்களுக்கு வருகை தரும் இவை, க்வீக் க்வீக் எனப் பாட ஆரம்பித்து வெவ்வேறு விதமாக ஒலியெழுப்பிப் பெரிய கச்சேரியே நடத்தி விடும்.  வெட்கப்பட்டு இலைகளுக்குள் மறைந்திருந்தாலும் இவற்றின் கச்சேரி இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்து விடும். [ஆள் நடமாட்டம் தெரியாத சமயத்தில் சுதந்திரமாகக் கிளைகளில் சூரியக் குளியல் எடுத்த பறவைகளை ஜன்னலுக்குப் பின்னால் மறைந்திருந்து எடுத்த படங்களே இவை!]

#2

Wednesday, November 18, 2020

சொர்க்கத்தின் ஒரு பகுதி..

குழந்தைகள் தினத்தையொட்டி பதிந்திட நினைத்து, நான்கு நாட்கள் தாமதமாக இன்று இப்பதிவு. சென்ற நவம்பர் முதல் இந்த நவம்பர் வரையிலுமாக என் ஃப்ளிக்கர் பக்கத்தில் பதிந்த மழலைச் செல்வங்களின் கருப்பு-வெள்ளைப் படங்களின் தொகுப்பு..


#1
பிள்ளைக் கனியமுதே..#2
“ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா.. 
உலகையே மாற்ற வல்லவை.” 
_ மலாலா யூசப்சையி

#3
“ஒரு தேர்வோ ஒரு மதிப்பெண்ணோ 
நமது மொத்த எதிர்காலத்தையும் தீர்மானிக்க

Sunday, November 1, 2020

நிலவுக்குக் குறி வைப்போம்!

  #1

“காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பார்கள், 

ஆனால் உண்மையில் நீங்கள்தாம் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.” 

_ Andy Warhol


#2

“ஒவ்வொரு நாளும் அடையும் சிறு முன்னேற்றம், 

ஓர் நாள் பெரும் பலன்களுக்கு வழி வகுக்கும்.”


#3

Sunday, October 18, 2020

கண்ணிற்கு அணிகலம்

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (84) 

#1

“வாழ்க்கை நகர்ந்தபடி உள்ளது, ஆகையால் நகருவோம் நாமும்! ”

_ Spencer Johnson


#2

“வாழ்க்கை என்பது நம்மை நாம் அறிந்து கொள்வதல்ல.

Sunday, October 11, 2020

புதிரும் தீர்வும்

  என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (83)  
#1
“நல்லிணக்கமும் 
சமமான நிலைப்பாடும் கொண்டிருக்கையில், 
வாழ்க்கை மலருகிறது.”
 _ Angie Karan Krezos

#2
"உங்களது வரையறையற்ற ஆற்றலுக்கு
எல்லை வகுக்காதீர்கள்!"


#3
“புதிரை விடவும்

Sunday, October 4, 2020

உறுதியான அஸ்திவாரம்

  என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (82)  

#1

"நீங்கள் பலகாலம் விரும்பிய வாழ்க்கையை உருவாக்கும் வேளையில் எதுவும் உங்களை தடுத்து நிறுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!"


#2

"வாழ்க்கை என்பது பிரச்சனைகளே இல்லாதிருப்பதன்று. வாழ்க்கை என்பது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது!"

_Tom Krause


#3

 "உச்சி என்பது இல்லை. அடைவதற்கு மேலும் உயரங்கள் உள்ளன!"

Monday, September 28, 2020

உங்கள் குரல்

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (81)  

பறவை பார்ப்போம் - பாகம் (54)

ஜூன் மாதத்தில் ‘திசை மாறிய பறவைகள்’ பதிவில் பெற்றோரைக் காணாத் தவித்த இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவையைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அதே பறவைதான் இது. அடுத்த ஓரிரு வாரங்களும் எங்கள் குடியிருப்பின் மரங்களில் அங்கும் இங்குமாகத் தனித்து அல்லாடிக் கொண்டிருந்த போது எடுத்த படங்கள். கால இடைவெளி விட்டு ஒவ்வொரு படமாக ஃப்ளிக்கரில் பதிந்த போது தோழி ஒருவர் கேட்டார் “அபூர்வமாய்க் காணக் கிடைக்கும் இருவாச்சிப் பறவை இப்போதெல்லாம் அடிக்கடி உங்கள் தோட்டத்திற்கு வருகிறதா?” என்று. ‘இல்லை’, ஒரே நேரத்தில் எடுத்தவற்றைதான் இடைவெளி விட்டுப் பகிர்வதாகச் சொன்னேன். பிறகு யோசித்துப் பார்க்கையில் சென்ற வருடமும் இந்த வருடமும் சரியாக ஜூன் மாதத்தில் இருவாச்சி ஜோடி எங்கள் குடியிருப்பின் கடைசி வீட்டுத் தோட்டத்து மரத்தில் கூடு கட்டி, குஞ்சுகள் வெளிவந்ததும் சில வாரங்களில் விட்டுவிட்டுப் போயிருப்பது கவனத்திற்கு வந்தது. இப்போது இந்தக் குஞ்சுப் பறவையும் சில காலம் இங்கே சுற்றித் திரிந்து காணாது போய் விட்டது. இனி இவற்றை அடுத்த ஜுன் மாதம் எதிர்பார்க்கலாமோ? 

விதம் விதமாக போஸ் கொடுத்த இருவாச்சியின் படங்களுடன் பொன்மொழிகளின் தமிழாக்கம்:

#1
பலன்களின் மேல் கவனத்தை வை, 
தடைகளின் மேல் அல்ல!


#2
“அழகென்பது உங்களை நீங்களே ஆராதிப்பது. 
உங்களை நீங்கள் விரும்பும் போதுதான்

Wednesday, September 16, 2020

அதோ அந்தப் பறவை போல... - கைக்கொண்டன ஹள்ளி ஏரி (பெங்களூர்)

#1

பெங்களூரின் கைக்கொண்டன(ர)ஹள்ளி ஏரிக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு வாரயிறுதி நாளில் சென்றிருந்த போது எடுத்த படங்கள்.. என்றைக்கு நோய்த்தொற்று அச்சம் நீங்கி இந்தப் பறவைகளைப் போல சுத்தமானக் காற்றைச் சுவாசித்து, சுதந்திரமாக வெளியில் சென்று வரப் போகிறோமோ, எனும் ஏக்கம் எழத்தான் செய்கிறது!

#2

இந்த ஏரியைப் பற்றி 6 ஆண்டுகளுக்கு முன், தொடராக 3 பதிவுகள் இட்டிருந்தேன். அதிலொரு பதிவில் எப்படி அப்பகுதி மக்கள் மாநகராட்சியுடன் கைகோர்த்து ஏரியைத் தூர் வாரி, புனரமைப்பு செய்து மக்களுக்கும், பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரனங்களுக்கும் பயனாகும்படி செய்தார்கள் என்பதைப் பற்றியும் விரிவாகச் சொல்லியிருந்தேன்:

ஆறு ஆண்டுகள் இடைவெளியில் பராமரிப்பு மோசமில்லை என்றாலும் அன்று பார்த்தது போல பசுமை சூழ்ந்த பூச்செடிகள், சீரான நடை பாதை ஆகியன இப்போது இல்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். ஆனால் ஏரியில் நீரும், பறவைகளின் வரவும் எப்போதும் போலவே உள்ளன. இது போன்ற பெரிய ஏரிகளிலுள்ள பறவைகளைப் படமாக்க 300mm ஜூம் வசதி போதுமானதாக இல்லை. இருந்தாலும் எடுத்த படங்களில் சில தொகுப்பாக இங்கே..

#3
காலை வெயிலில்
குளிர் காயும்
கூழைக்கடா

Sunday, September 13, 2020

மனந்தடு மாறேல்

லெபக்ஷி கோயிலுக்குச் சென்றிருந்த போது படமாக்கிய வானரர்களின் படங்களை இங்கே பகிர்ந்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக மீதிப் படங்களும்.. 

#1
"எந்த ஒரு வானரமும் வாழைப் பழத்தை அடைந்து விட முடியும்.
ஆனால் மனிதன் மட்டுமே வானத்து நட்சத்திரங்களை அடைய முடியும்."
#2
"உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றைக் குறித்துக் கவலை கொள்ளாதீர்கள்."

Sunday, September 6, 2020

சொற்திறன்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (80)
பறவை பார்ப்போம் - பாகம் (52)


#1
உங்களுக்குச் சவாலாக இருப்பவற்றைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்
மாறாக உங்கள் குறைபாடுகளுக்குச் சவால் விடுங்கள்!”
― Jerry Dunn

#2
பாட விரும்புகிறர்களுக்கு 
எப்போதும் ஒரு பாடல் கிடைத்து விடுகிறது!

#3
“உங்கள் மனதிலிருப்பதை 
நா சரியாக வெளிப்படுத்துமானால் 
நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர்.”

Thursday, September 3, 2020

உழுவோர் உழைப்பால் உலகோர் பிழைப்பார்

ர் முடக்கம் தொடங்கிய நாளிலிருந்து குடியிருப்பு வளாகத்தில் நடைப் பயிற்சி செய்பவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டது. முதலிரு மாதங்கள் பலரும் வெளியில் வரவே யோசித்தார்கள். அப்போது கை கொடுத்தது அவரவர் வீட்டு மொட்டை மாடிகள். இப்போது நட்புகளோடு சேர்ந்து முகக் கவசத்துடன் முன் போலவே நடைப் பயிற்சி செய்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ முகக் கவசத்துடன் நடைப் பயிற்சி செய்வது சீரான சுவாசத்திற்கு இடையூறாக இருப்பதாகவே தோன்றுகிறது. ஆகையால் மொட்டை மாடியிலேயே தொடருகிறேன். அப்படிச் செல்லும் வேளையில் பின்பக்கமிருக்கும் வயல் வெளியில் கடந்த 4,5 மாதங்களாக நடக்கும் உழவு வேலைகளைத் தொடர்ந்து கவனிக்க முடிந்தது.  அதன் மேல் சுவாரஸ்யமும் ஏற்பட்டது. பரந்து விரிந்த வானம், பஞ்சுப் பஞ்சாக மேகக் கூட்டம், பச்சை வயல், செம்மண் பூமி, அதில் உழவு, நடவு என அவ்வப்போது படமாக்கிய சிலபல காட்சிகளின் தொகுப்பு இங்கே. 

#1
“உங்கள் மனநிலை எப்படி இருப்பினும், 
இயற்கைக்கு அருகே எப்போதும் 
அமைதியாக உணர்வீர்கள்!”


#2
பரம்படித்த நிலம்
(மண் பரப்பில் உள்ள கட்டிகளை உடைத்து 
சீராக மண்ணைப் பரவச் செய்தல்)

#3
“உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?”

Sunday, August 30, 2020

உன்னுள் ஓடும் நதி

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (79)

#1
“அழகென்பது குறைகள் அற்றதன்று. 
அது உங்கள் குறைகளையும் தாண்டி மிளிர்வது.”

#2
“போட்டி இல்லையேல், 
வளர்ச்சி இல்லை.”
_Bela Karolyi

Wednesday, August 26, 2020

இருவாச்சி விருந்து - நவீன விருட்சம் 113_வது இதழில்..

இருவாச்சி விருந்துபூனை சாமர்த்தியமானது.
உயிர்த் தொகையைக் குறைப்பதில்
பெரும்பங்கு வகிப்பது.
பூனை வேகமாகப் பாயும் போது
இரையும் நொடியில் மாண்டு போகிறது.
பூனைக்கு அதிகமாய் பசியெடுக்கும் போது
இரைகளுக்கு இதயத் துடிப்பு அதிகரிக்கிறது.

Wednesday, August 19, 2020

181_வது உலக ஒளிப்பட தினம்

ஆகஸ்ட் 19, இன்று 181_வது உலக ஒளிப்படதினம். 
#1
லக ஒளிப்பட தினம் ஒளிப்படக்கலையின் வரலாற்றுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், நிகழ்காலத்தில் கலையைக் கொண்டாடவும், வருங்காலத்திற்கு ஒரு வழித்தடமாக அமையவும் 1839_ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் லூயி டகர் என்பவரின் கண்டுபிடிப்பான டகரியோடைப் எனும் ஒளிப்படக்கலைக்கான வழிமுறையை 9 ஜனவரி 1836 அன்று ஃப்ரெஞ்ச் அகடமி ஆஃப் சயின்ஸ் வெளியிட்டது. சில மாதங்கள் கழித்து பிரான்ஸ் அரசாங்கம் அந்தக் கண்டுபிடிப்பை உலகிற்கு இலவசப் பரிசாக வழங்கியது. அந்த நாளே கடந்த 181 வருடங்களாக உலக ஒளிப்பட தினமாக உலகெங்கிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ன்றைய தினத்திற்காக ஃப்ளிக்கர் தளத்தில் பதிந்த படங்கள்:

#2
“உங்களது மிக முக்கியமான ஒளிப்படக் கருவி 
உங்களது கண், இதயம் மற்றும் ஆன்மா!”

Sunday, August 16, 2020

ஒற்றை நூலிழை

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (78)
#1
"மழையின் துளிகள் 
மண்ணுக்கு மட்டுமல்ல 
மனதுக்கும் ஆறுதல்"
_ Moulima Chatterjee


#2
உங்கள் இதயம் சொல்லும் வழியில் செல்லாதிருக்க 
எந்த ஒரு காரணமும் இல்லை.

_Steve Jobs 

#3
"உண்மையில் எந்த வார்த்தைகளை விடவும் 
உரக்கப் பேசும் சக்தி வாய்ந்தது

Sunday, August 9, 2020

நீயொன்றும் மரமில்லை..

#1
புதுத் தளிர்களை எதிர் நோக்கி நிற்கும் மரங்கள் 
கற்பிக்கின்றன 
இறந்த காலத்தை எப்படிக் கடந்து வருவதென்பதை.. 

#2
“உறுதியான வேர்களைக் கொண்ட மரங்கள்
புயல்களைப் புன்னகையோடு எதிர்கொள்கின்றன!”

Wednesday, August 5, 2020

முதல் கனி.. கன மழை.. அதிசய மலர்..

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (77)
#1

நான்கு வருடங்களில் பல முறைகள் முயன்றும் 3,4 அடிகள் வளர்ந்து பின் சரியாக வராமல் போய்க் கொண்டிருந்தது தோட்டத்தில் பப்பாளி. இந்த முறை அருகருகே இரண்டு மரங்கள் ஆறடி உயரம் தாண்டி வளர்ந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு மரம் குடை போல விரிந்து பரந்து, காயும் கனியும் பூவுமாக. முதல் விளைச்சலின் முதல் கனி.. வெட்டிய பிறகு தெரிய வந்தது விதையற்ற வகை (Parthenocarpic) என்பது. சுவை அபாரம்!

#2ப்போது பெங்களூரின் சீதோஷணம் பிரமாதமாக உள்ளது, மழையும் சாரலும் குளிர்ந்த காற்றுமாக. 

Sunday, August 2, 2020

கனிகள்.. இயற்கையின் கற்கண்டுகள்..

ர் முடக்கமாகியுள்ள இந்த வேளையில் புகைப்படங்கள் எடுப்பதற்கென்றே அவ்வப்போது மேற்கொள்ளும் சிறு பயணங்கள் (ஃபோட்டோ வாக்) இப்போது சாத்தியப்படவில்லை. இயற்கையும், தோட்டமும், தேடி வரும் பறவைகளும் தொய்வின்றிப் புகைப்படத் தொகுப்புக்கு உதவி வருகின்றன என்றாலும் ஒரே விதமாகச் செல்ல வேண்டாமென நினைத்த போது கோடை சீசனில் கிடைத்த பழங்கள் கை கொடுத்தன. ‘டேபிள் டாப்’ புகைப்படங்களாக ஃப்ளிக்கரில் பகிர்ந்தவை உங்கள் பார்வைக்கு.. 


ரம்புட்டான்
#1

#2
நாவல் பழம்


#3
மங்குஸ்தான்

Sunday, July 26, 2020

நீரூற்று

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (76

#1`
“உங்கள் எண்ணங்கள் மேல் மண்ணைப் போட்டு மூடாதீர்கள்.
உங்கள் தொலை நோக்குப் பார்வையை நிஜம் ஆக்கிடுங்கள்.”
_Bob Marley#2
“அச்சத்தை விடவும் வலிமையானது, 
நம்பிக்கை!”

Friday, July 24, 2020

க. அம்சப்ரியாவின் ‘தனிமையில் அலையும் தனிமை’ - ஒரு பார்வை (கீற்று மின்னிதழில்..)

ரு மேகத்தைப் போலத் தனிமையில் அலைந்தேன்” வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் எழுதிய இந்த ஆங்கிலக் கவிதை புகழ் பெற்றதும், மிக விரும்பப் பட்டதும் ஆகும். தனித்த மேகம், மலைகள் மற்றும் பெருவெளிகளின் மேல், வானத்தில் மிதப்பதைப் போலத் தான் தனித்து நடப்பதாகச் சொல்லியிருப்பார். ஜான் கீட்ஸ் ‘தனிமைக்கு’ என்ற கவிதையில் மகிழ்ச்சியற்ற நகர வாழ்வைப் பற்றிக் குறிப்பிட்டு,

Sunday, July 19, 2020

கல்கியில் நான்

79 வருடப் பாரம்பரியத்துடன் இயங்கி வந்த கல்கி வாரயிதழ் தன் அச்சுப் பிரதியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருப்பது அதனைப் பல்லாண்டுகளாக வாசித்து வரும் வாசகர்களுக்கு மன வருத்தத்தைத் தந்துள்ளது.  கல்கியின் 41 இதழ்களில் எனது பங்களிப்பு இருந்திருப்பதை நன்றியுடன் இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்.

Tuesday, July 14, 2020

சூரியத் துளிகள் ( Yellow Alder ) - என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (75)

#1

ங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் இந்தச் செடியின் சின்னஞ்சிறு மஞ்சள் மலர்களைப் பலமுறைகள் பலவித கோணங்களில் எனது புகைப்படத் தொகுப்புகளில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். 
#2

இந்தச் செடியைப் பற்றிய சில ஆச்சரிமானத் தகவல்களையும் பகிர்ந்திட வேண்டுமென நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். சமீபத்தில் அவ்வப்போது அதற்காகப் புகைப்படங்களும் எடுத்து வைத்தேன்.

யெல்லோ ஆல்டர் (yellow alder) எனப்படும் இந்த மலர்ச்செடியின் தாவரவியல் பெயர் Turnera ulmifolia. இது Passifloraceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. புதராக விரிந்து வளரும் இச்செடி ஆண்டு முழுவதும் வாடாமல் வாழும் ( perennial ) வகையைச் சேர்ந்தது. இதற்கு ‘ஸன் ட்ராப்ஸ் (Sun Drops)’ எனும் பெயரும் உண்டு. அது ஏன் மிகப் பொருத்தமானப் பெயர் என்பதையும் பார்ப்போம்.

#3

இச்செடியின் சிறப்பு, 

Sunday, July 5, 2020

நிலாரசிகனின் 'கடலில் வசிக்கும் பறவை' - ஒரு பார்வை (கீற்று மின்னிதழில்..)

பரிமிதமான ஆற்றலைக் கொண்ட, எந்தவொரு திட்டமிடலும் இல்லாத கலை.” இது கவிதையின் பிரவாகத்தைப் பற்றியப் பேச்சு வருகையில் ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி தனது ‘ஸ்கைலார்க்’ (வானம்பாடி) கவிதையையே எடுத்துக்காட்டாகக் கொண்டு குறிப்பிட்டது. ஷெல்லியின் இக்கூற்று நிலாரசிகன் எனும் ராஜேஷ் வைரபாண்டியனின் “கடலில் வசிக்கும் பறவை” நூலில் இருக்கும் 60 கவிதைகளுக்கும் பொருந்தும். ஒருவர் தனது ஆன்மாவின் அடி ஆழத்தை உணர்ந்தால் மட்டுமே இத்தகுக் கவிதைகளை வடிக்க இயலும்.

Sunday, June 28, 2020

நாட்களை எண்ணாதே..

கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம். குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்’ என்றொரு பழமொழி உண்டு. அதே போல வாழைப்பழமும் அவற்றுக்கும் பிடித்தமானவை. சென்ற டிசம்பரில் லெபக்ஷி சென்று வந்த அனுபவத்தைப் படங்களுடன் 4 பாகங்களாகப் பகிர்ந்திருந்தேன்: https://tamilamudam.blogspot.com/search/label/Lepakshi இந்த வானரங்களின் படங்கள் அங்கே எடுத்தவை. ஃப்ளிக்கர் தளத்தில் பகிர்ந்தவை. இவை போக மேலும் சில வானரங்களை விதம் விதமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறேன்.  அவற்றை பிறிதொரு ஞாயிறு பார்க்கலாம். இந்தப் பதிவில் பெரிய குரங்கின் படமொன்றும் ஒரு மிக அழகிய குட்டிக் குரங்கின் 4 படங்களும்....


#1
"அழகு என்பது 
பரிசுத்தமான களங்கமற்ற 
ஆன்மாவினால் வெளிப்படுவது."
_  Vishal Arora


#2
"சாதாரண விஷயங்களை 
அசாதாரணக் கண்களால் காணுங்கள்."
_Vico Magistretti

Sunday, June 14, 2020

திசை மாறிய பறவைகள்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (74
பறவை பார்ப்போம் - பாகம் (51)
#1
“வளர்ச்சி வலி கொண்டது. மாற்றம் வலி கொண்டது. 
ஆனால் நமக்குச் சற்றும் சொந்தமில்லாத இடத்தில் 
மாட்டிக் கொள்வதைப் போன்ற வலி 
வேறெதுவும் இல்லை.”
_Mandy Hale

ந்த வார வாழ்வியல் சிந்தனைகளோடு பகிர்ந்திருக்கும் படங்களின் பின்னணியையும் சொல்லி விடுகிறேன். முதலிரண்டு படங்களும் சரியாக இருவாரங்களுக்கு முன் எடுத்தவை. அப்போதுதான் பெங்களூரில் தொடங்கியிருந்தது மழைசீஸன். இரவெல்லாம் பெருமழை. அத்தோடு காற்றும் பயங்கரமாக வீசி அடித்தது. மறுநாள் காலை..

Sunday, June 7, 2020

முதலும் முடிவும்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (73) 
#1
“நம்பிக்கை என்பது விழித்துக் கொள்கிற கனவு.”
_Aristotle


#2
“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது ஒரு பொருட்டேயில்லை.

Friday, June 5, 2020

இப்போது வானில்.. ஸ்ட்ராபெர்ரி நிலவு..

Exif: 1/125s, f/13,
 ISO 100
Focal length: 300mm
#HandHeld 

இன்று 5 ஜூன் 2020 சந்திரக் கிரகணம்:

இந்த ஆண்டின் இரண்டாவது பெனும்ப்ரல் சந்திரக் கிரகணம் இன்றிரவு.. இதோ இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  இது நிலவு தேய்ந்து மீண்டும் வளரும் பூரணச் சந்திரக் கிரகணம் இல்லை. பூரணக் கிரகணத்தின் போது சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றுமே ஒரே நேர்கோட்டில் வரும். அப்படி இல்லாமல் சூரியனின் கதிர்கள் பூமி மேல் விழுகையில், பூமியின் மங்கலான penumbra எனும் அரைநிழற் பகுதியை  நிலவு கடந்து செல்வதையே ஆங்கிலத்தில் Penumbral Lunar Eclipse என்கிறார்கள். நிலவின் தேய்வும் மிகமிகச் சிறிதாக நாம் சாதாரணமாப் பார்க்கையில் உணர முடியாதபடியே இருக்கும். டெலஸ்கோப் மூலமாகதான் தேய்வை உணர முடியும்.

இந்திய நேரப்படி, இன்றிரவு சுமார் 10.30 மணி முதல் நாளை  அதிகாலை 2.40 மணி வரை நீடிக்கும் சந்திர கிரகணம்  இரவு 12.40 மணியளவில் முழுமையான அளவை எட்டும் என்கிறார்கள். இந்த நேரத்தில் நாம் எப்போதும் பார்க்கும் வழக்கமான பிரகாசத்தோடு இருக்காதாம் முழுநிலவு.

ஸ்ட்ராபெர்ரி மூன்:

பொதுவாக ஜூன் மாத நிலவை ஸ்ட்ராபெர்ரி மூன் என்கிறார்கள். Honey Moon, the Mead Moon(தேனில் தயாரிக்கப்படும் பானம்), and Rose Moon போன்ற பெயர்களும் உண்டு. The Maine farmer's almanac_படி ஒவ்வொரு மாதத்தின் முழு நிலவுக்கும் ஒரு பெயர் வழங்கப் படுகிறது. 

முன்னரே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன், ஃபார்மர்ஸ் அல்மனாக் என்பது ஓரளவுக்கு நம்ம ஊர் பஞ்சாங்கம் போல.

Sunday, May 31, 2020

பெரிய நிழல்கள்

#1
“பயம், நாம் ஆற்றும் எதிர்வினை.
தைரியம், நாம் எடுக்கும் முடிவு!”

#2
“இந்த உலகில் தன்னை விடவும் உங்களை அதிகமாக நேசிப்பது நாய் மட்டுமே..”
_ Josh Billings

#3
“எதற்கெல்லாம் அஞ்சக் கூடாதென்பதை 
அறிந்திருப்பதே தைரியம்.” 
Plato

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin