தூறல் பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூறல் பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஜூன், 2026

தூறல்: 50 - உங்களுக்கே உரிய வேகம்

 ஓவியமான ஒளிப்படம்; 'பண்புடன்' போட்டி; பெங்களூர் நகர் உலா 

னது ஒளிப்படத்தை அடிப்படையாகக் கொண்டு ஓவியர் சண்முகநாதன் கருப்பையா (சதங்கா என்ற பெயரில் வலைப்பூவில் எழுதி வந்தவர்) உருவாக்கிய கலைப்படைப்பு:

எனது படம்:

எனது கேமரா பதிந்த காட்சியை, அவரது திறமை மறக்க முடியாத ஒன்றாக மனதில் நிறுத்தி விட்டது. அவருக்கு எனது அன்பும் நன்றியும்! 

நினைவுகளின் மீட்டலாக,

இதற்கு முன்னர் 2015_ஆம் ஆண்டு சதங்கா வரைந்து பரிசளித்த திருநாகேஸ்வரம் புஷ்கரணி படம் “இங்கே”: 

இதே போல் ஓவியர் யோகேஷ் காண்ட் நான் எடுத்த பூக்களின் படத்தை வாட்டர் கலர் ஓவியமாக்கிய பகிர்வு (2022) “இங்கே”.

*

ண்புடன் மின்னிதழ் தனது முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அறிவித்திருக்கும் போட்டியைப் பற்றி உங்களில் பலர் ஏற்கனவே அறிந்திருக்கக் கூடும். எனினும் தவறவிட்டவர்களுக்குப் பயனாகும் என அறிவிப்பை இங்கே பகிருகிறேன்:

#


படைப்புகளை வேர்ட் ஃபைலாக யூனிகோட் எழுத்துருவில் அனுப்ப வேண்டும். 

*

நகர் உலா

எம்.ஜி. ரோட் 

 மெட்ரோ ஸ்டேஷன்:

“ஒவ்வொரு ரயில் நிலையமும் முன்னோக்கி நகரும் கலையை கற்றுத் தருகிறது.”

# 1

சனி, 14 மார்ச், 2026

தூறல்: 49 - ஒரு கணம் காக்கும் பொறுமை

ஃப்ளிக்கரில் பதிந்து, இங்கு பதியாதவை, எங்கும் பகிராதவை எனப் பல படங்கள் சேர்ந்து விட்டுள்ளன. அவ்வப்போது அவற்றை (random)  சார்பற்றப் பகுப்பாக, தூறல் பகிர்வாகத் தொகுத்திட எண்ணியுள்ளேன். 

பயணங்களில் எடுத்த படங்கள் சில..:

சென்ற மாதம் தூத்துக்குடி வழியாக நெல்லைக்குச் சென்றிருந்த போது ஜூலை 2025_ல் பிரதம மந்திரியால் திறக்கப்பட்டு, ஆகஸ்ட் 2025 முதல் இயங்கத் தொடங்கிய வாகைகுளம் புதிய விமான நிலையத்தில் இறங்கினோம். பழைய விமான நிலையத்தை விடப் பல மடங்கு பெரிதாகவும் கலா ரசனையுடனும் கட்டப்பட்டள்ளது. அங்கே எடுத்த படங்கள் சில:

#1


#2 
கடலும் வானும் வரவேற்கும் சுவர்சித்திரம்

[இன்னும் இருந்த பல கலைப் படைப்புகளைப் படமாக்க நேரம் இருக்கவில்லை.]

#3 
முத்து நகரத்திற்குப் பொருத்தமாக,

புதன், 31 டிசம்பர், 2025

குறிப்பேடு 2025 - தூறல்: 48

 #

னது ஃப்ளிக்கர் பட ஓடை (My Flickr Photostream) :

ஃப்ளிக்கர் தளத்தில் டிசம்பர் 30 வரையிலும் 435 படங்கள் பதிவேற்றம் ஆகி, அன்றன்றையப் படங்களுடன், பழைய படங்களுக்கும் ஆல்பங்களுக்குமான வருகைகளும் சேர்க்கப்பட்டு 2025_ல் 921995 பக்கப் பார்வைகளைப் பெற்றுள்ளதாகக் காட்டுகிறது ஃப்ளிக்கர் புள்ளி விவரம். 

2025_ஆம் ஆண்டுப் படங்கள் தொகுக்கப்பட்ட தனி ஆல்பத்தின் இணைப்பு இங்கே: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/albums/72177720322899258/ 

17 ஆண்டு ஃப்ளிக்கர் பயணத்தில், இந்த ஆண்டின் இறுதியில் எழுபத்து எட்டு இலட்சத்து இருபதாயிரம் பக்கப் பார்வைகளுடன், 5510 படங்கள் நிறைவு செய்துள்ளேன். 

சென்ற வருடத்தைய புள்ளி விவரம் இங்கே.

தொழில் நுட்பப் பிரச்சனையால் ஏப்ரல் தவிர்த்து மாதாமாதம் ஃப்ளிக்கர் தளம் மின்னஞ்சலில் அனுப்பி வைத்த புள்ளி விவரங்கள் எனது சேமிப்புக்காகவும் இங்கே:

#ஜனவரி


#பிப்ரவரி

#மார்ச்


#மே

#ஜூன்


#ஜூலை


#ஆகஸ்ட்

#செப்டம்பர்

#அக்டோபர்


#நவம்பர்

#டிசம்பர்


ரண்டு கேலரிகளில் "Cover Photo"_வாக கெளரவிக்கப்பட்ட படங்கள்:

#ஆகஸ்டில்..

#செப்டம்பரில்..

மார்ச் மாதத்தில், எழுத்தாளரும், ‘நமது மண்வாசம்’ மாத இதழின் ஆசிரியருமான ப. திருமலை அவர்களின் 60_ஆவது நூலின் முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்.. இங்கே

வருகிற ஆண்டிலும், பொங்கல் வெளியீடாக, 3-வது முறையாக, அவரது நூலின் முகப்பு அட்டையாக எனது ஒளிப்படம் இடம் பெற உள்ளது என்பது கூடுதல் தகவல்!

டைவெளியின்றி, ஆர்வம் குன்றாமல் இப்பயணம் தொடர்வது மனதுக்கு நிறைவாகவே உள்ளது.

இந்தப் பயணத்துக்கு உறுதுணையாக மற்றுமோர் கருவி புதிதாக உடன் இணைகிறது. எப்போதும் இரு கேமராக்கள் தேவைப்படுகிற சூழலில் 2010_ல் வாங்கிய Nikon D5000 (cropped sensor) கேமரா 14 ஆண்டு காலம் திறம்பட உழைத்த பின், சென்ற வருடம் தன் சேவையை நிறுத்திக் கொண்டது. இடையே 2017_ல் வாங்கிய Nikon D750 (Full frame) கேமராவுடன் தற்போது புதிதாக இணைகிறது Nikon Z5 II Mirrorless Full frame கேமரா. மிரர்லெஸ் தொழில்நுட்பத்தையும் அறிந்து ஆராய்ந்து அனுபவிக்க வேண்டும் இல்லையா:)? அதில் எடுக்கும் படங்களுடனும் 2026_ன் ஒளிப்பட பயணம் தொடரும்.

முத்துச்சரம்:

2025_ஆம் ஆண்டில் மாதம் சராசரியாக 5 பதிவுகள் தர முடிந்திருப்பதே ஆச்சரியம் :). சமீப வருடங்களாக அதிக அளவில் தந்து கொண்டிருந்த ஞாயிறு-வாழ்வியல் சிந்தனைகள் படத் தொகுப்பு இந்த முறை 13 பதிவுகளே. ஹைதராபாத், இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் மைசூர் பயணப் பதிவுகள், உயிரியல் பூங்காவில் படமாக்கிய விலங்குகள்-பறவைகளின் படங்கள் தகவல்களுடன், சென்னையில் கோயில்கள் மற்றும் போர்ட்ரெயிட் படத் தொகுப்புகள் சில, தகவல்களுடனான ‘பறவை பார்ப்போம்’ பதிவுகள் ஆகியனவும் வரிசையில் சேருகின்றன.

'சொல்வனம்' இதழில் மொழிபெயர்ப்புப் பதிவுகள் - 3

கவிதைகள்: 'கீற்று' (1); 'நவீன விருட்சம்' (2); 'புன்னகை' (1) ; 

'பண்புடன்' இதழில் கவிதைகள் (3), குறுங்கவிதை தொகுப்புகள் (3)

அதிகமாக பதிவுகள் தராத நிலையிலும் இந்த வருடம் வழக்கமான பதிவுகளை விடவும் பழைய பதிவுகளுக்கு அதிகமான பக்கப் பார்வைகள் இருந்தன. முத்துச்சரம் பத்து இலட்சம் பக்கப் பார்வைகளைக் கடந்ததும் இந்த வருடமே. ஒரு கணக்குக்காக இந்த வருட இறுதியின் புள்ளி விவரத்தையும் சேமிக்கிறேன்:

**

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

***

வியாழன், 6 மார்ச், 2025

ஒளிப்பட சவால்.. கடைசி வாரம்; எனது நூல்கள் குறித்து.. - தூறல்: 47

 "சென்ற பதிவின்தொடர்ச்சியாக, தனது இருபத்தியோராவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக ஃப்ளிக்கர் தளம் அறிவித்த 21 நாள் ஒளிப்பட சவாலின் கடைசி வாரத் தலைப்புகளும் நான் சமர்ப்பித்தப் படங்களும் தொகுப்பாக இங்கே:

#நாள் 15: மகிழ்ச்சி


#நாள் 16: விசித்திரம்

#நாள் 17: குடும்பம்


#நாள் 18: உத்வேகம்

#நாள் 19: அன்பு

பார்வையற்ற இணைக்கு 
உணவளிக்கும் துணை

#நாள் 20: சமூகம்


#நாள் 21: பிரமிப்பு

இந்த சவாலில் உற்சாகமாகப் பல ஆயிரம் பேர்கள் கலந்து கொண்டிருந்தனர். வாழ்த்துகள் ஃப்ளிக்கர்!

***

ஃப்ளிக்கர் தளத்தில் ஜனவரி மாதத்தில் எனது பதிவுகளுக்கான புள்ளி விவரங்கள்: சேமிப்பிற்காக இங்கே:


நன்றி ஃப்ளிக்கர்!

***

மகளிர் சிறப்பிதழாக மலர்ந்துள்ள இந்த மாத மண்வாசனை இதழில் கவிதை ஒன்றுக்கு  பயன்படுத்தப்பட்டிருந்த, 2011_ஆம் ஆண்டில் நான் எடுத்த படம்:

வயதான காலத்தில் சுயமாக நிற்க விரும்பி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இந்த மூதாட்டியின் படம் முன்னர் தினமலர், குமுதம் பெண்கள் மலர், குங்குமம் தோழி ஆகிய இதழ்களிலும் இடம் பெற்றிருந்தன. 

***

னது நூல்கள் குறித்து எழுத்தாளரும், கவிஞருமான திருமதி தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய விமர்சனங்கள் “இங்கும்” , “இங்கும்” உள்ளன. தனது யுடியூப் சேனலிலும் இந்நூல்கள் குறித்துத் தன் கருத்துகளைப் பதிந்துள்ளார்.

#அடைமழை


#இலைகள் பழுக்காத உலகம்

இலைகள் பழுக்காத உலகம் l ராமலெக்ஷ்மிராஜன் l தேனம்மைலெக்ஷ்மணன்

அன்பும் நன்றியும் தேனம்மை!

***

கவித்துளியாக ஒரு படத்துளி:

***

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

கோயில் யானைகள்; முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம் - தூறல் : 46

 முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்:

எழுத்தாளரும் பத்திரிகையாளரும் ‘நமது மண்வாசம்’ மாத இதழின் ஆசிரியருமான ப. திருமலை அவர்களின் 60_ஆவது நூலின் முகப்பு அட்டையாக இடம் பெற்றுள்ளது நான் எடுத்த இந்த ஒளிப்படம்.

இத்துடன் பத்தாவது முறையாக பத்திரிகை மற்றும் நூல் அட்டை முகப்பில்  இடம் பெறுகிறது நான் எடுத்த ஒளிப்படம்.

புதன், 1 ஜனவரி, 2025

ஃப்ளிக்கர் 5000 - 2024 குறிப்பேடு - தூறல்: 45

இந்த வருடம் சராசரியாக வாரம் ஒரு பதிவு.. 

வாழ்வியல் சிந்தனைகளுடனான ஞாயிறு படத் தொகுப்புகள் 30; மொழிபெயர்ப்பு கவிதைகள் 5; நூல் மதிப்புரை 1; பயணங்கள் குறித்த பதிவுகள்.. என.

2008_ல் ஆரம்பித்த ஃப்ளிக்கர் தளத்தின் பட ஓடை (photostream) 5000 படங்களைக் கடந்தது இவ்வருடம் நவம்பர் மாதத்தில்.. 

5000 படங்களைக் கடந்து விட்டதை சில தினங்கள் கழித்தே கவனித்தேன். பலரின் பாராட்டுகளைப் பெற்றுத் தந்த திருமலை நாயக்கர் மகாலின் இந்தப் படமே அந்த இடத்தைப் பிடித்திருந்தது.

டிசம்பர் முதல் வாரத்தில் “எனது ஃப்ளிக்கர் வருடம் 2024” என ஃப்ளிக்கர் தளம் அனுப்பி வைத்தத் தகவல் குறிப்பு:

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

2023 குறிப்பேடு - தூறல் 44

 2023 குறிப்பேட்டினைப் புரட்டிப் பார்க்கும் நேரம்:)!

தினமொரு படமெனத் தொடரும் எனது ஃப்ளிக்கர் பயணத்தில் 365 நாளும் என்பது எளிதல்ல என்பதை வருடாந்திர ஆல்பம் தொகுக்கத் தொடங்கியக் கடந்த இரு வருடங்கள் எனக்குப் புரிய வைத்தன.  கடந்த இரு வருடங்களிலும் எண்ணிக்கை 262 மற்றும் 251 ஆக  இருக்க, இவ்வருடத்தில் 300_யை தாண்ட வேண்டுமென எண்ணியிருந்தேன். ஆயினும் அதற்காகப் பிரத்தியேகமாக மெனக்கிடவில்லை. ஆனால் இன்று சரியாக எண்ணிக்கை 300-யைத் தொட்டிருப்பது இனிய ஆச்சரியம் :). 

இயற்கையின் ஆசிர்வாதத்தில் பறவைகள், பூக்கள் மற்றும் மனிதர்கள், குழந்தைகள், டேபிள் டாப் படங்கள் (கொலு மற்றும் கார்த்திகை தீப series அடங்கிய 2023 ஆல்பத்தின் இணைப்பு: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/albums/72177720305009769/ .

இந்த ஓராண்டில் மட்டும் எனது Flickr Photostream  பக்கப் பார்வைகள் 4,65,000 + என்பதுவும் தொடர்ந்து இயங்க உத்வேகத்தைத் தருகிறது. [சென்ற வருடப் புள்ளிவிவரம் இங்கே..


பொன்மொழிகளின் தமிழாக்கத்துடனான வாரந்திரப் படத் தொகுப்புகள் தவிர்த்து, அதிக எண்ணிக்கையில் பதிவுகள் இல்லாவிட்டாலும், பதிவுலகப் பொற்காலம் எப்பொழுதோ முடிந்து விட்டிருந்தாலும், 15 ஆண்டுகளைத் தாண்டிய ‘முத்துச்சரம்’ இந்த வருடத்தில் 10 லட்சம் பக்கப் பார்வைகளைத் தாண்டி (10,14,000 +) இன்னும் உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வகையிலும் மகிழ்ச்சியே.


எழுத்தைப் பொறுத்த மட்டில் சொல்வனம் இணைய இதழ், உதிரிகள் சிற்றிதழ் ஆகியவற்றில் 21 தமிழாக்கக் கவிதைகள் மற்றும் நவீன விருட்சம், புன்னகை சிற்றிதழ்கள், கீற்று, திண்ணை இணைய இதழ்களில் எனது கவிதைகள் வெளியாகின.

“முடிவுறுபவற்றைக் கொண்டாடுவோம் - அவை புதிய தொடங்கங்களுக்கு முன்னோடியாக இருப்பதால்.” 

இயன்றதைச் செய்து மன உற்சாகத்துடன் இருப்பதை இலக்காகக் கொண்டு 2014-குள் நுழைகிறேன்:).

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***

வியாழன், 16 பிப்ரவரி, 2023

‘வகவம்’ இலங்கை காலாண்டிதழ் ; என் ஃப்ளிக்கர் ஆண்டு 2022 - தூறல்: 44

 லங்கையில் வசிக்கும் எழுத்தாளரும் கவிஞருமான மேமன் கவி (அவர் குறித்து இங்கே அறியலாம்: விக்கிப்பீடியா) சென்ற ஆண்டு தொடங்கியுள்ள புதிய காலாண்டிதழ் வகவம். 

பாப்லோ நெருடா பற்றி நான் எழுதி சொல்வனத்தில் வெளியான கட்டுரை மற்றும் கவிதைகளின் தமிழாக்கத்தை வாசித்து விட்டு,

வியாழன், 5 ஜனவரி, 2023

யாவும் நலமே - தூறல்: 43

 அனைவருக்கும் தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இங்கே பதிவுகள் தந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது. காணவில்லை எனத் தேடி நலம் விசாரித்த நட்புகளுக்கும், சென்ற வாரம் என் பிறந்தநாளை நினைவு வைத்திருந்து வாழ்த்தியவர்களுக்கும் அன்பு கலந்த நன்றி. ஒரு சிறு விபத்துக்குப் பிறகு மீண்டு வந்து கொண்டிருக்கிறேன்.

செவ்வாய், 14 ஜூன், 2022

நெக்ஸஸ் ஆகிய ஃபோரம், ஓவியமான ஒளிப்படம், புன்னகை 80 - தூறல்: 42

மால்:


பெங்களூரின் ஃபோரம் மால்கள் இனி நெக்ஸஸ் மால்களாக இயங்கும் என சென்ற ஞாயிறு டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் வெளிவந்த 2 முழுப்பக்க அறிவிப்பை பெங்களூர்வாசிகள் கவனித்திருக்கக் கூடும்.

பெங்களூர் மக்களுக்கு அறிமுகமாகிய முதல் மால், 1999_ல் கோரமங்களாவில் ப்ரெஸ்டிஜ் க்ரூப் கட்டிய  ஃபோரம் மால்தான். 72000 சதுர அடிகளில், ஐந்த தளங்களுடன் முதல் மால் கலாச்சாரம், ஃபுட் கோர்ட், ஒரே இடத்தில் பத்துக்கும் மேலான பிவிஆர் திரைப்பட அரங்குகள் என அப்போது அவை புதுமையாகத் தோன்றியது. ஈர்க்கவும் செய்தது.

வெள்ளி, 31 டிசம்பர், 2021

2021 - தூறல்: 41



வேகமாக விடை பெற்ற 2021_யைத் திரும்பிப் பார்க்கிறேன்.

னது ஃப்ளிக்கர் பக்கத்தில் “ Uploads of 2021 ” எனத் தனி ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருந்ததால், அது 365 நாட்களில் 261 நாட்கள் நான் படங்கள் பதிந்து வந்திருக்கிறேன் எனக் கணக்குக் காட்டுகிறது :)! 

#

வழக்கமான இயற்கை மற்றும் பறவைகள் படங்களோடு, கொலுப் பொம்மைத் தொடரும், கார்த்திகை தீபத் தொடரும் நான் ரசித்துப் பதிந்தவை.

பிப்ரவரி மாதத்தில் ஃப்ளிக்கர் பக்கம் 50 இலட்சம் பக்கப் பார்வைகளைக் கடந்தது ஒரு மைல் கல்.  

புதன், 26 மே, 2021

ஃப்ளிக்கர் நாலாயிரம்.. சூரிய ஒளிவட்டம்.. - தூறல்: 40

டைவிடாது ஒன்றில் குறையாத ஆர்வத்துடன் ஈடுபடுவதும், அதைத் தொடர முடிவதும் கொடுப்பினை. நாலாயிரம் என்பது ஒரு இலக்கம், அவ்வளவே. நிச்சயமாக எண்ணிக்கை என்றும் இலக்கு அல்ல. 2008_ஆம் ஆண்டு ஆரம்பித்த ஃப்ளிக்கர் கணக்கின் ஒளிப்பட ஓடையில்  51,75,000++ பக்கப் பார்வைகளைப் பெற்று  4000 படங்களைப் பதிந்து முடித்துக் கடந்து கொண்டிருக்கிறேன். சுற்றியுள்ள உலகம் பெரும் சோர்வைத் தந்திருக்கும் இவ்வேளையில் மனதிற்கு சிறு வெளிச்சம் தருகின்றது கடந்து வந்த இப்பாதை.

எனக்கான சேமிப்பாகவும்
உங்களுடனான பகிர்வாகவும்..:)!

நாலாயிரமாவது படமாகப் பதிந்த சூரிய ஒளிவட்டம். நேற்று முன் தினம் 24 மே அன்று,

வியாழன், 31 டிசம்பர், 2020

அள்ளித் தந்த பூமியும் சொல்லித் தந்த வானமும்.. 2020 - தூறல்: 39

லகத்தையே ஸ்தம்பிக்க வைத்து எல்லோருக்கும் நிறைய பாடங்களைச் சொல்லித் தந்து செல்கிறது 2020. நம் வாழ்நாளிலே இப்படியொரு ஆண்டை நாம் சந்தித்ததேயில்லை. அறிந்தவர், அறியாதவர், உறவுகள், நட்புகள் எனப் பலரும் பொருளாதாரம், உடல் நலம், நெருங்கியவர்களின் உயிரிழப்பு எனப் பல்வேறு பிரச்சனைகளிலும் துயரங்களிலும் மாட்டிக் கொண்ட காலக் கட்டம். இனி வரும் நாட்களிலேனும் இக்கட்டான இச்சூழல் மாறுமெனும் நம்பிக்கையோடு 2021_ல் அடி எடுத்து வைப்போமாக.

வலைப் படவும் கவனமாக இருக்கவும் அன்றாட வாழ்வில் நம் நேரத்தையும் முக்கியத்துவத்தையும் பிற விஷயங்கள் ஆக்ரமித்துக் கொண்டு விட்ட சூழலில் அதிகமாக வலைப்பதிவுகளில் (blog posts), ஈடுபாடு காட்ட முடியா விட்டாலும்  பத்திரிகை - மின்னிதழ்களில் சில கவிதைகள், நூல் மதிப்புரைகள், ஃப்ளிக்கரில் தொடர்ச்சியாக ஒளிப்படப் பதிவுகள் என எதைச் செய்ய முடிந்ததோ அதைச் செய்த வரையில் திருப்தியே.

வேகமாகப் பின்னோக்கி ஒரு பார்வை:

புதன், 1 ஜனவரி, 2020

2019 கணக்கு வழக்கு + புத்தாண்டு வாழ்த்துகள் - தூறல்: 38

பிறந்து விட்டது 2020. வழக்கம் போலவே சென்ற ஆண்டைச் சற்றேத் திரும்பிப் பார்த்துக் கொள்கிறேன்:).

முத்துச்சரத்தில் சராசரியாக மாதம் ஆறு பதிவுகள்! 

மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாக உள்ளதோ இல்லையோ ஃப்ளிக்கரில் பதியும் படங்களை இங்கும் பகிரும் எண்ணத்துடன் வழங்கும் புகைப்படத் தொகுப்புகளான, தமிழாக்கத்துடன் கூடிய வாழ்வியல் சிந்தனைகள்  (17 பதிவுகள்); பறவை பார்ப்போம் கட்டுரைகள் (11 பதிவுகள்), இவ்விரண்டு தொகுப்புகளும் உள்ளடங்கிய ‘என் வீட்டுத் தோட்டத்தில்..’ (19 பதிவுகள்);

இயற்கையோடு பயணிப்பதாக அமைந்த ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ தொகுப்புகள் என் மனதுக்கு நிறைவானவை. விதம் விதமான கோணங்களில் பல வகைப் பறவைகளைப் படமாக்கிய பின் அவற்றோடு பதிவதற்காகச் சேகரித்த தகவல்கள் சுவாரஸ்யத்தையும் வியப்பையும் அளித்தன. 

த்திரிகை வெளியீடுகளாக,

கல்கி தீபாவளி மலரில், 

தொடர்ந்து ஒன்பதாவது வருடமாக எனது ஒளிப்படம்.. இந்த முறை முழுப்பக்க அளவில் :)



கல்கி தீபம் இதழில் மூன்று கட்டுரைகள் நான் எடுத்த படங்களோடு:


&


&


டெகன் ஹெரால்ட் ஞாயிறு பதிப்புகளில் இருமுறைகள்:

&

சென்ற வருடம் போல அல்லாமல் கவிதைகளைப் பொருத்தவரையில் திருப்தி அளித்த வருடம். ஏனெனில் வருட ஆரம்பத்தில் தமிழாக்கமும் சேர்த்து மாதம் ஒன்றேனும் எழுத வேண்டும் என நினைத்ததை ஓரளவு செயல்படுத்தியிருக்கிறேன்.

கல்கியில்..

தி இந்துவின் காமதேனு வாரயிதழில்..


&


அமெரிக்க மாத இதழான தென்றலில், இரண்டு கவிதைகள்:


மல்லிகை மகளில்,


‘சொல்வனம்’ இருநூறாவது இதழில்..


வளரி இதழில்..

மொழிபெயர்ப்பு இலக்கியங்களாக தமிழாக்கம் செய்த கவிதைகள்:

பதாகை மின்னிதழில்.. சார்ல்ஸ் காஸ்லே கவிதைகள்.. இரண்டு

சொல்வனம் மின்னிதழில்.. சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி கவிதை.. ஒன்று

கலீல் ஜிப்ரான் கவிதைகள்.. இரண்டு

மற்றும்
தாகூர் கவிதை.. ஒன்று


சென்ற வருடத்தில் எந்தக் கவிதைகளும் தமிழாக்கம் செய்திருக்கவில்லை. ஆனால் சென்ற ஜனவரி ஒன்றில் நான் எடுத்தப் புத்தாண்டு தீர்மானம் கவிதைகளில் கவனம் செலுத்த வைத்தது:).

கவிதைகளுக்கான அங்கீகாரமாக, FB வாசகசாலை கவிதை இரவில்.. என் கவிதைகள் வாசிக்கப்பட்டன..




நூல் மதிப்புரை:

கீற்று மின்னிதழில்..




சிறுகதைகள்:

ஒன்று கூட எழுதவில்லை :(. ஸ்ரீராம், மன்னிக்கவும். அவருடைய எங்கள் ப்ளாக் வலைப்பூவுக்குத் தருவதாகச் சொன்ன கதையை இன்னும் தரவில்லை. ஆனால் அவருக்கு நான் கீழ் வரும் செய்திக்காக என் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். 

2018_ல் ‘சீதை ராமனை மன்னித்தாள்.’  எனும் கருவுக்காக அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதிய ‘அவளும் நோக்கினாள்’ சிறுகதை,  எத்திராஜ் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியரான முனைவர் இரா பிரேமா அவர்கள் தொகுத்து, இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் ‘உடைபடும் மெளனங்கள்’ நூலில் இடம் பெறுகிறது.

எழுத்தாளர் ஆர். சூடாமணியில் ஆரம்பித்து இந்நாளைய எழுத்தாளர்கள் வரை 30 பெண் எழுத்தாளர்கள் எழுதிய பெண் மையக் கதைகளைக் கொண்டது இத்தொகுப்பு, பாரதி புத்தகாலயம் வெளியீடு.

நன்றி எங்கள் ப்ளாக்! நன்றி ஸ்ரீராம்:)!
முனைவர் இரா. பிரேமா அவர்களுக்கும் என் நன்றி. 


யணத் தொடர்களாக..

ஜம்ஜெட்பூர் - பதிவுகள் (4)

பேகல் மற்றும் அனந்தபுரம் கோயில்.. கேரளம் - பதிவுகள் (5)

முக்கூடல் ஆனித்திருவிழா - பதிவுகள் (2)

பசவனகுடி, ஹொஸ்கொட்டே ஏரி மற்றும் திப்பு சுல்தான் அரண்மனை, பெங்களூர் - பதிவுகள் (3)

ளிப்படங்களுக்கான அங்கீகாரமாக..,

கல்கி தீபாவளி மலர், டெகன் ஹெரால்ட் வெளியீடுகளுடன்..,

வல்லமை மின்னிதழில் படக் கவிதைப் போட்டிக்காக ஒன்பது மற்றும் பத்தாவது முறையாக இரு படங்கள் தேர்வாகியிருந்தன சென்ற ஆண்டில்:
&

ஃப்ளிக்கர் பக்கத்தில் பெரிய இடைவெளிகள் இன்றி, தங்கு தடையற்று தினமொரு படம் பதிந்து வந்திருக்கிறேன் :)! இரசித்து இரசித்துப் படமாக்கியவற்றில் அதிகம் பிடித்தவை எவை எனக் கேட்டால் பட்டியல் சற்றே நீண்டு போவதால் ஃப்ளிக்கரின் “எக்ஸ்ப்ளோர்” பக்கத்தில் சென்ற வருடம் தேர்வான 5 படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதில் நடராஜர் சிலையின் படம் ஒரு இலட்சத்திற்கும் மேலான பக்கப் பார்வைகளைப் பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.



நண்பர்கள் அனைவருக்கும்..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin