ஞாயிறு, 31 டிசம்பர், 2023

2023 குறிப்பேடு - தூறல் 44

 2023 குறிப்பேட்டினைப் புரட்டிப் பார்க்கும் நேரம்:)!

தினமொரு படமெனத் தொடரும் எனது ஃப்ளிக்கர் பயணத்தில் 365 நாளும் என்பது எளிதல்ல என்பதை வருடாந்திர ஆல்பம் தொகுக்கத் தொடங்கியக் கடந்த இரு வருடங்கள் எனக்குப் புரிய வைத்தன.  கடந்த இரு வருடங்களிலும் எண்ணிக்கை 262 மற்றும் 251 ஆக  இருக்க, இவ்வருடத்தில் 300_யை தாண்ட வேண்டுமென எண்ணியிருந்தேன். ஆயினும் அதற்காகப் பிரத்தியேகமாக மெனக்கிடவில்லை. ஆனால் இன்று சரியாக எண்ணிக்கை 300-யைத் தொட்டிருப்பது இனிய ஆச்சரியம் :). 

இயற்கையின் ஆசிர்வாதத்தில் பறவைகள், பூக்கள் மற்றும் மனிதர்கள், குழந்தைகள், டேபிள் டாப் படங்கள் (கொலு மற்றும் கார்த்திகை தீப series அடங்கிய 2023 ஆல்பத்தின் இணைப்பு: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/albums/72177720305009769/ .

இந்த ஓராண்டில் மட்டும் எனது Flickr Photostream  பக்கப் பார்வைகள் 4,65,000 + என்பதுவும் தொடர்ந்து இயங்க உத்வேகத்தைத் தருகிறது. [சென்ற வருடப் புள்ளிவிவரம் இங்கே..


பொன்மொழிகளின் தமிழாக்கத்துடனான வாரந்திரப் படத் தொகுப்புகள் தவிர்த்து, அதிக எண்ணிக்கையில் பதிவுகள் இல்லாவிட்டாலும், பதிவுலகப் பொற்காலம் எப்பொழுதோ முடிந்து விட்டிருந்தாலும், 15 ஆண்டுகளைத் தாண்டிய ‘முத்துச்சரம்’ இந்த வருடத்தில் 10 லட்சம் பக்கப் பார்வைகளைத் தாண்டி (10,14,000 +) இன்னும் உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வகையிலும் மகிழ்ச்சியே.


எழுத்தைப் பொறுத்த மட்டில் சொல்வனம் இணைய இதழ், உதிரிகள் சிற்றிதழ் ஆகியவற்றில் 21 தமிழாக்கக் கவிதைகள் மற்றும் நவீன விருட்சம், புன்னகை சிற்றிதழ்கள், கீற்று, திண்ணை இணைய இதழ்களில் எனது கவிதைகள் வெளியாகின.

“முடிவுறுபவற்றைக் கொண்டாடுவோம் - அவை புதிய தொடங்கங்களுக்கு முன்னோடியாக இருப்பதால்.” 

இயன்றதைச் செய்து மன உற்சாகத்துடன் இருப்பதை இலக்காகக் கொண்டு 2014-குள் நுழைகிறேன்:).

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***

திங்கள், 25 டிசம்பர், 2023

வானம் எல்லையன்று

 #1

“தாங்கள் செய்யும் செயல் மேல் 
அர்ப்பணிப்பும் அதீத ஆர்வமும் இருக்குமானால், 
ஒவ்வொருவரும் தங்கள் சூழ்நிலைகளைத் தாண்டி 
மேலுழுந்து வர இயலும்.” 
_ Nelson Mandela.


#2
“மேகங்கள் உச்சியிலிருப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. 
எந்த சுமையையும் தம்மோடு எடுத்துச் செல்ல மறுப்பதாலேயே 
அவை மிக உயரத்தில் மிதக்கின்றன.” 
_ Jasleen Kaur Gumber


#3
“சிக்கிக் கொண்டதாக உணரும் தருணத்தில் 
வானத்தை நோக்குங்கள்.

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

செல்வத்துள் செல்வம்

  #1

“பலகீனமானவர்களால் எப்போதுமே மன்னிக்க இயலாது. 
மன்னிப்பு என்பது வல்லமை வாய்ந்தோரின் பண்பு.”
_ Mahatma Gandhi


#2
“அடிப்படை விதி: 
எவ்வளவுக்கு எவ்வளவு நன்றியுடன் இருக்கப் பழகுகிறீர்களோ
அவ்வளவுக்கு அவ்வளவு நன்றி தெரிவிக்க வேண்டியவை 
அதிகரித்தபடி இருக்கும்.
_ Norman Vincent Peale

#3
“மனநிறைவு ஒன்றே 
உண்மையான செல்வம்.”
 - Alfred Nobel

#4
“பணிவடக்கம் பலகீனமானவர்களது இயல்பன்று, 
தைரியமானவர்களின் இயல்பு.”
_ Walt Disney

#5
 “அதிகமாக உங்களை நேசிப்பீர்களேயானால், 
குறைவாக மற்றவர்களைப் பிரதிபலித்து, 
தனித்துவமானவராக உருவாகுவீர்கள்.”


#6
“மலர்கள் ஒருபோதும் எப்படி மலரப் போகிறோம் எனக் 
கவலை கொள்வதில்லை. 
அவை தம் இயல்பில் விரிந்து, ஒளியை நோக்கித் திரும்புவதே 
அவற்றை அழகாக்குகின்றன.” 
– Jim Carrey.

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 188

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

கார்த்திகை தீபங்கள்

 #1

தீபங்கள் ஏற்றிடும் 
திருக்கார்த்திகை மாதம்!

#2
வெல்லப் பொரி உருண்டை

#3
தீபம் ஜோதி பரப்பிரம்மம்

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

புதிய சவால்கள்

 #1

"ஒட்டு மொத்த வாழ்க்கையும் 
புதிய சவால்களை எதிர்கொள்வதிலேயே உள்ளது."

(செம்மீசைச் சின்னான்)

#2
"ஒவ்வொருவருக்கும் மாபெரும் பிரச்சனையாக இருப்பது 
அடுத்தவரது விவகாரங்களைப் பற்றிக் கவலைப்படுவது."

(குண்டுக் கரிச்சான்)

#3
“உங்கள் உண்மையான தகுதியை நீங்கள் அறிவீர்களானால்,

ஞாயிறு, 19 நவம்பர், 2023

மகிமையும் எளிமையும்

 #1

"பூக்கள் சொல்வதில்லை, மலர்ந்து காட்டும்."
__ Stephanie Skeem


#2
"மகத்துவத்தின் வெளிப்பாடு எளிமை."
_Walt Whitman


#3
"எழுந்திடுங்கள், புதிதாகத் தொடங்கிடுங்கள்,

புதன், 15 நவம்பர், 2023

அறுபத்து ஆறு வயதில் என் அம்மா - கமலா தாஸ் கவிதை (7) - உதிரிகள் இதழில்..


  அறுபத்து ஆறு வயதில் என் அம்மா

சென்ற வெள்ளிக்கிழமை காலையில்,
என் பெற்றோர் இல்லத்திலிருந்து
கொச்சினுக்கு வண்டியில் செல்கிறேன்.
எனதருகே அமர்ந்திருக்கும்,
அம்மாவை நான் பார்க்கிறேன்,
அரைத் தூக்கத்தில், வாய் திறந்து, 
அவளது முகம் சாம்பல் நிறத்தில் உயிரற்றதாக, 
வலியுடன் உணருகிறேன் 
எவ்வளவு வயதானவளாகத் தெரிகிறாளோ
அவ்வளவு வயதாகி விட்டது அவளுக்கு, ஆயின் விரைவில்
அந்த நினைப்பைத் தள்ளி வைக்கிறேன்,

ஞாயிறு, 12 நவம்பர், 2023

தித்திக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

தித்திப்புகளின் தொகுப்புடன் 

நண்பர்கள் அனைவருக்கும் 

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் :) ! 

#1


#2


#3

ஞாயிறு, 5 நவம்பர், 2023

கனவு நனவாகும்

 #1

“எவரும் தமது அப்பாவித்தனத்தை இழப்பதில்லை. 
ஒன்று, 
அது எடுத்துக் கொள்ளப் படுகிறது 
அல்லது 
விரும்பிக் கொடுக்கப்பட்டு விடுகிறது.”
[தேன் சிட்டு]

#2
“மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலாததால்  
உங்கள் மதிப்பு ஒருபோதும் குறைந்து விடுவதில்லை.”
[இந்திய சாம்பல் இருவாச்சி]

#3
“ஒவ்வொன்றிலும் ஆச்சரியம் உள்ளது, 
இருட்டிலும் மெளனத்திலும் கூட, 

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

அக அழகு

 #1

“நீங்கள் நீங்களாக இருக்க முடிவெடுக்கும் கணத்தில் 
ஆரம்பமாகிறது அழகு.”

#2
"சரியான கோணத்தில் பார்ப்பீர்களானால், 
உங்களுக்குத் தெரிய வரும்,

திங்கள், 23 அக்டோபர், 2023

ஆயுத பூஜை வாழ்த்துகள்! - நவராத்திரி பொம்மைக் கொலு 2023- (பாகம் 2)

நான் பார்த்த கொலுக்கள் நான்கின் தொகுப்பு:

தங்கை வீட்டுக் கொலு

#1


#2
குடும்ப அமைதியின் அடையாளமாகத் தம்பதியர் அணிவகுப்பு:

#3 இந்த வருடப் புதுவரவாக,
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஆண்டாள்

மேலும் சில மகாபாரதக் கதாபாத்திரங்கள்:

#4 
பரந்தாமன்


#5 
பார்த்திபன்

#6 
கடோத்கஜன்

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

மகாபாரதம் - நவராத்திரி பொம்மைக் கொலு 2023 - (பாகம் 1)

 #1 

கீதா உபதேசம்

வழமை போல இந்த வருடமும் நான் கண்டு களித்த கொலுக்கள் மற்றும் அவற்றில் அணிவகுத்திருந்த பொம்மைகளை இரு பாகங்களாகக் காட்சிப் படுத்தவிருக்கிறேன். தங்கை வீட்டுக் கொலுவில் இந்த வருடப் புது வரவாக மகாபாரதக் கதையை மிகச் சிறப்பாகக் காட்சிப் படுத்தியிருந்தார். ஞாயிறு பதிவாக, முதல் பாகத்தில் சில மகாபாரதக் காட்சிகள்:
#2
“எச்சரிக்கையுடன் இருப்பவர்களே வெல்ல வேண்டுமென்பது 
இயற்கையின் விதி.”


#3
“நான் அழகின் அடையாளம் அல்ல. 

புதன், 11 அக்டோபர், 2023

சொற்கள் - கமலா தாஸ் கவிதை (6) - உதிரிகள் இதழில்..

சொற்கள்

முழுதாக என்னைச் சுற்றிலும் சொற்கள், 
மற்றும் சொற்கள் மற்றும் சொற்கள்,
இலைகளைப் போல் என் மீது வளருகின்றன, 
அவை உள்ளிருந்து மெதுவாக வளர்வதை 
நிறுத்திக் கொள்வதாகத் தெரியவில்லை... ஆனால்
எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன், 
சொற்கள் தொல்லையானவை,
அவற்றிடத்தில் எச்சரிக்கையாக இருங்கள், 
அவை பல விஷயங்களாக இருக்கலாம், 

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

சூரியனின் வாக்குறுதி

  #1

"மழைக்கான உத்திரவாதம் எப்பொழுதும் 
சூரியனின் வாக்குறுதியுடன் வருகிறது, 
வானிலைக்கும் வாழ்க்கைக்கும்."

#2
"நம்புவதற்கு அரிய எதுவோ, எங்கோ 
காத்திருக்கிறது அறிய வர.."
_ Carl Sagan

#3
"பேச்சானது வெள்ளி,

வெள்ளி, 6 அக்டோபர், 2023

கனவுகள் - நவீன விருட்சம் 123_ஆம் இதழில்..

 கனவுகள்


னவுகள்..

அழகானவை
ஆயின் 
அனுபவிக்க வாய்க்காதவை

அச்சுறுத்துபவை
ஆயின் 
ஆபத்தற்றவை

காயப்படுத்துபவை

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

வெகுமதி

 #1

"உங்களை உங்களுக்கு நிரூபியுங்கள், 
மற்றவர்களுக்கு அல்ல."
(இரட்டைவால் குருவி)

#2
"பொழுது விடிந்ததும் விட்டு விடுவதற்கு அல்ல கனவுகள்.

வியாழன், 28 செப்டம்பர், 2023

ஓர் அறிமுகம் - கமலா தாஸ் கவிதை (5) - உதிரிகள் காலாண்டிதழில்..

ஓர் அறிமுகம்

எனக்கு அரசியல் தெரியாது ஆனால்
அதிகாரத்தில் இருப்பவர்களின் பெயர்கள் தெரியும், 
நேருவில் தொடங்கி அவற்றை ஒப்பிக்க முடியும் 
வாரத்தின் நாட்களை, அல்லது மாதங்களை ஒப்பிப்பது போல
நான் ஒரு இந்தியர், மிகப் பழுப்பு நிறத்தில், மலபாரில் பிறந்தவள்,
நான் பேசுவது மூன்று மொழிகளில், எழுதுவது இரண்டில்,
கனாக் காண்பது ஒன்றில்.
அவர்கள் சொன்னார்கள், ஆங்கிலத்தில் எழுதாதே, 
ஆங்கிலம் உனது தாய்மொழி இல்லை என்று.
ஏன் என்னைத் தனியாக விட மாட்டேன் என்கிறீர்கள்,

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

உலகம் உங்களுடன்..

 #1

'எதிர்காலத்தை உருவாக்கக் 
கனவைப் போல் ஆகச் சிறந்தது 
வேறெதுவுமில்லை.' 
_ Victor Hugo

#2 
‘ஒவ்வொரு மலரும் 
அதற்குரிய நேரத்தில் மலரும்.’
_Ken Petti
பிரம்மக் கமலம்
[18 ஆகஸ்ட் நடுஇரவில் மலர்ந்தவை.  அதே நாளில் பல்வேறு இடங்களில் மலர்ந்திருந்ததைப் பலரும் பகிர்ந்திருந்தார்கள். மகா மொக்கு.. மதிய நேரத்தில் படமாக்கியது.]


#3
'நீங்கள் உங்களைத் தனிமைப் படுத்திக் கொள்வதால் 
தனித்து விடப்படுவதில்லை, 
ஏனெனில் உலகமே உங்களுடன் இருக்கிறது.' 
_ Ken Poirot

#4 
'நீங்கள் விரும்புவது உங்களுக்குக் கிடைத்து விடாது. 
நீங்கள் எதற்காக உழைக்கிறீர்களோ 
அதுவே கிடைக்கும்.'


#5
“ஆன்மாவுக்கு எப்போதும் தெரியும் 
தன்னை எப்படி ஆற்றுப் படுத்திக் கொள்வதென. 
மனதை எப்படி அமைதிப் படுத்துவதென்பதே 
சவால்.” 
_ Caroline Myss

#6
"சிலநேரங்களில் விழிகளுக்குப் புலப்படாதவற்றை 
இதயம் கண்டு கொள்கிறது."
 _ H. Jackson Brown

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 181

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***


ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

விழித்திரு

  #1

“உங்கள் குரலுக்கு உண்டு வலிமை.”
[வெண் தொண்டைக் குக்குறுவான்]

#2 
“அமைதியாக இருக்கையில் எச்சரிக்கையாக இருத்தலும், 

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

பதில்களால் நிரம்பிய மெளனம்

 #1

“எதுவும் உங்கள் மன நிம்மதியைக் குலைத்துவிடாதபடி 
மிக உறுதியாக இருப்பதாக 
உங்களுக்கு நீங்களே உறுதிமொழி கொடுங்கள்.”
_ Christian Larson.


#2

"மெளனம் வெறுமையானதன்று, முழுக்க முழுக்க விடைகளைக் கொண்டது."


#3
"நினைவுகள் அழிவதில்லை, 
ஆனால்

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

கரும்பருந்து ( Black kite ) - பறவை பார்ப்போம்

 #1

ஆங்கிலப் பெயர்: Black Kite; உயிரியல் பெயர்: Milvus migrans;
வேறு பெயர்: ஊர்ப்பருந்து

கரும்பருந்து, நடுத்தர அளவிலான, அக்சிபிட்ரிடே (Accipitridae) எனப்படும் பாறு குடும்பத்தைச் சேர்ந்த, கொன்றுண்ணிப் பறவை (bird of prey).  பாறு குடும்ப வகையில் அதிகமான தொகையில் வாழும் பறவைகளாக அறியப்பட்டாலும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் அவற்றின் எண்ணிக்கையில் சரிவும், ஏற்ற இறக்கமும் இருந்துள்ளன. தற்போது உலக அளவில் சுமார் 60 இலட்சம் கரும்பருந்துகள் வாழ்வதாகக் கணக்கிடப் பட்டுள்ளன. 

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்..’

#1

"சீக்கிரம் செல்லும் பறவைக்கே 
கிடைக்கின்றது புழு."
[குண்டுக் கரிச்சான்]

#2
"முயன்று பார்க்கவில்லையெனில், 
நீங்கள் தெரிந்து கொள்ளப் போவதில்லை." 
_ John Barrow
[காட்டுச் சிலம்பன்]

#3
“நீங்கள் செல்லும் பாதை மிகக் கடினமாக இருப்பது,

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin