ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

அவிச்ச கடல.. இந்திய சாலையோர உணவு.. - டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (7)

#1
அவிச்ச கடல..
ஆவி பறக்க.. ஆரோக்கியம் பெருக.. 


வேர்க்கடலையைப் பிடிக்காதவர்கள் உண்டா? வறுத்த கடலை, அவித்த கடலை, அதுவும் தோலோடு அவித்த வறுத்த கடலைகளை ஒன்றொன்றாக உடைத்துச் சாப்பிடுவது சுவாரஸ்யமான டைம் பாஸ். கடற்கரையாகட்டும், மக்கள் கூடும் பூங்காங்கள், பொருட்காட்சிகள், பொது இடங்களிலாகட்டும் கடலை விற்பவர்கள் இல்லாதிருக்க மாட்டார்கள். இந்தப் படம் பெங்களூர் குமரக்ருபா சாலையில், சித்திரச் சந்தை கண்காட்சியில் எடுத்த படம்.

ஓரிரு வாரங்களுக்கு முன் டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழ் ‘என் படம்’ பகுதிக்கு அறிவித்திருந்த தலைப்பு,  “இந்திய சாலையோர உணவு”. சட்டெனக் கைகொடுத்தது... எப்போதோ எடுத்துப் பகிர்ந்திருந்த “அவிச்ச கடல” படம் :)! தேர்வான 5 படங்களில் ஒன்றாக.. இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழின் ஞாயிறு பதிப்பில்..

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

மாற்றம் ஒன்றே மாறாதது

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (59)

#1
"தடை எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, 
அதை வென்று வருகையில் அவ்வளவு பெரிதாக இருக்கும் கீர்த்தியும்."
- Moliere.


#2
“ஊக்கமுடையவர்களுக்குச் சொந்தமானது உலகம்.”
_Ralph Waldo Emerson.


#3
"இறக்கைகள் ஏற்கனவே உள்ளன.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

பசவங்குடி பசவண்ணா.. - கல்கி தீபம் இதழில்..

20 செப்டம்பர் கல்கி தீபம் இதழில்..



சமீபத்தில் பெங்களூர் பசவங்குடி பசவண்ணா ஆலயத்திற்குச் சென்று வந்து படங்களுடன் நான் பகிர்ந்திருந்த கட்டுரை...

புதன், 18 செப்டம்பர், 2019

கணக்கு நோட்டின் கடைசிப் பக்கம் - ‘தென்றல்’ அமெரிக்கத் தமிழ் மாத இதழில்..

தென்றல் அமெரிக்கப் பத்திரிகையின் இந்த மாத இதழில் நான் எடுத்த படத்தோடு வெளியாகியுள்ள மற்றுமோர் கவிதை...

கணக்கு நோட்டின் கடைசிப் பக்கம்
 

பரந்த பள்ளி மைதானத்தின்
கிழக்கு மூலை
கல் பெஞ்சில்
தனித்து அமர்ந்திருக்கிறாள்
மவுனமாக.

பதின்ம வயதுக்கே உரிய
உற்சாகத்துடன்
வகுப்புத் தோழமைகள்
எழுப்பிக் கொண்டிருந்த கூச்சல்
அவளுக்குச் சம்பந்தமே இல்லாத
உலகமாக.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

சொல்வதற்குக் கதைகள் இருக்கட்டும்..

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (58)
#1
"உங்கள் சொகுசு வளையத்தின் முடிவில் ஆரம்பமாகிறது வாழ்க்கை."



#2
""உரக்கச் சொல்லப்படும் போது 
எல்லா விஷயங்களும் 
சற்றே மாறுபடுகின்றன." 
_Hermann Hesse



#3
"வாழ்க்கை நாமே சிறந்தவர்களாக இருக்க வேண்டுவதில்லை,

வியாழன், 12 செப்டம்பர், 2019

துருவங்கள் - ‘தென்றல்’ அமெரிக்க மாத இதழில்..

தென்றல் அமெரிக்கப் பத்திரிகையின் 2019 செப்டம்பர் மாத இதழில் நான் எடுத்த படங்களோடு வெளியாகியுள்ள இரு கவிதைகளில் ஒன்று..

துருவங்கள்

நெருப்பாய் அவனும்
நீராய் அவளும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin