ஞாயிறு, 29 ஜூலை, 2018

கடினமான பரீட்சை

#1
‘அமைதியாக, சாந்தமாக,
எப்போதும் நீங்கள்
உங்கள் கட்டுப்பாட்டில் இருங்கள்!’
_Paramahansa Yogananda


#2
‘சராசரியாக இருக்காதீர்கள். 
எவ்வளவு உயரத்தில் முடியுமோ 
அவ்வளவு உயரத்தில் பறக்கட்டும் 
உங்கள் உள்ளம்!’
_Aiden Wilson Tozer


#3
“சரியான நேரத்திற்காகப் பொறுமையாகக் காத்திருப்பதே, 
வாழ்க்கை நமக்கு வைக்கும் பரீட்சைகளில் கடினமான ஒன்று"

செவ்வாய், 24 ஜூலை, 2018

பூச்சி பிடிப்பான் (Green bee-eater) - பறவை பார்ப்போம் (பாகம் 26)

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 31)
பூச்சி பிடிப்பான் என அறியப்படும் Green bee-eater பூச்சிகளைப் பிடித்து உண்டு வாழும் குடும்பத்தைச் சேர்ந்த, மரக்கிளைகளைப் பற்றி அமரும் பாஸரைன் வகைப் பறவை.

#1
ஆங்கிலப் பெயர்: Green bee-eater

பிற பூச்சி பிடிப்பான்களைப் போல பச்சை நிறப் பூச்சிப் பிடிப்பான்களும் பளீர் வண்ணத்தில், மெல்லிய உருவத்தைக் கொண்டிருக்கும். சுமார் 9 அங்குல நீள உடலும் கூடுதலாக 2 அங்குல நீளமுடைய வால்களையும் கொண்டவை. இரு பாலினங்களுக்கிடையே வித்தியாசம் காண முடியாத படி, ஒரே மாதியாகத் தோற்றமளிக்கும். இறகுகள் முழுக்கவும் கண்ணைக் கவரும் பச்சை நிறத்தில் ஆங்காங்கே நீலத் தீட்டலுடன் இருக்கும். கன்னம், தொண்டைப் பகுதிகள் நீல நிறத்தில் இருக்கும். அழுத்தமான கருப்புக் கோடு கண்ணுக்கும் முன்னும் பின்னுமாக ஓடும். கருவிழிகள் சிகப்பாகவும், அலகு கருப்பாகவும், கால்கள் ஆழ் சாம்பல் வண்ணத்திலும் இருக்கும். மூன்று விரல்கள் அடிப்பாகத்தில் சேரும் வகையான இதன் கால்கள் சற்றே பலகீனமானவையே.

#2
உயிரியல் பெயர்Merops orientalis

இவற்றின் இனப்பெருக்கக் காலம் மார்ச் முதல் ஜூன் வரையிலும். மற்ற பூச்சி பிடிப்பான்களைப் போலன்றி பச்சைநிறப் பூச்சி பிடிப்பான்கள்  மணல் வெளியில் சுரங்கம் தோண்டி தனிமையில் கூடமைக்கும்.

#3

ஞாயிறு, 22 ஜூலை, 2018

வெற்றியின் அளவுகோல்

#1
‘வெற்றி என்பது முடிவல்ல.
 தோல்வி என்பது அழிவுமல்ல.
 துணிவுடன் தொடர்வதே முக்கியம்.’
 _ Winston Churchill


#2
‘எந்தவொரு கருணை கொண்ட செயலும், அது எத்தனை சிறிதாயினும்,  வீணாவதில்லை, எப்போதும்.’ 
_ ஈசாப்

 #3
“வானமே எல்லையின் தொடக்கம் என்பதை எப்போதும் நம்புகிறேன்” 
_MC Hammer

செவ்வாய், 17 ஜூலை, 2018

ஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்!

த்து ஆண்டுகள்.  மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென..

#


மொத்தப் பார்வைகள்: 
இருபத்தியொரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்++. 
சராசரியாக படம் ஒன்றுக்கு 700 பார்வைகள்
#


இது சாதனையல்ல.. மகிழ்ச்சி. எண்ணிக்கை பெரிதல்ல.. எண்ணியபடி செயலாற்றி வருவதில் ஒருவித மன திருப்தி.

மூவாயிரமாவது படம்.  
3000 நார்களால் பின்னிய கூடு. 
#

ஞாயிறு, 15 ஜூலை, 2018

கடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)

#1
கடலோரம் வாங்கிய காற்று..

#2
கால் பந்தாட்டம்.. அலையோரம் களியாட்டம்.. 

#3
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை..

புதன், 11 ஜூலை, 2018

பாரம்பரிய முகமூடிகளும் சில குறியீடுகளும் - ஸ்ரீலங்கா (8)

லங்கையில் முகமூடிகளின் பயன்பாடு என்பது மிகப் பழமை வாய்ந்த சரித்திரத்தைக் கொண்டது.

#1

1800 ஆம் ஆண்டுகளில் அவை நாட்டுப்புற நாட்டியங்களில் பல்வேறு கதாபாத்திரங்களைச் சித்தரிக்கவும், பேய் நடனங்களுக்காகவும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

#2

முகமூடி நடனங்களும் அவற்றின் தயாரிப்புப் பாரம்பரியமும் கேரளா மற்றும் மலபாரிலிருந்து இலங்கைக்குப் பரவியதாகக் கருதப்பட்டாலும், தற்போதைய இலங்கைக் கைவினைக் கலைஞர்கள் அதில் அதீத தேர்ச்சி பெற்றிருப்பதோடு நுட்பமான வடிவமைப்பு மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்தித் தனித்துவமான அழகியலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

#3

ஞாயிறு, 8 ஜூலை, 2018

மெய்வருத்தம் பாரார் - இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (4)

லக்கு. It's a Goal.

இது கால்பந்தாட்டக் காலம் அல்லவா? அதனால்தானோ என்னவோ இப்படி ஒரு தலைப்பு.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு. பறவைகளும் அல்ல அதற்கு விதிவிலக்கு.

இரு வாரங்களுக்கு முன் டெகன் ஹெரால்ட் அறிவித்திருந்த இந்தத் தலைப்புக்குத் தேர்வான ஐந்து படங்களுள் ஒன்றாக.. இந்தப் படம்..

#1
”மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்... 
கருமமே கண்ணாயினார்.”
-குமரகுருபரர் (நீதிநெறி விளக்கம் 52)
[இதுவே ஃப்ளிக்கர் தளத்தில் இப்படத்தைப் பதிந்த போது 
நான் கொடுத்திருந்த தலைப்பு :) ]
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/36457169403/

இன்று 8 ஜூலை 2018,  டெகன் ஹெரால்ட் நாளிதழின் ஞாயிறு பதிப்பான சன்டே ஹெரால்டில்.. பக்கம் 35_ல்..

திங்கள், 2 ஜூலை, 2018

சயன புத்தர் - களனி விகாரை (II) - ஸ்ரீலங்கா (7)

யன நிலையில் இருக்கும் பிரமாண்டமான புத்தர் சிலைக்காகப் புகழ் பெற்றது களனி புத்த விகாரை.

#1

கோட்டை காலத்தில் வளமாக இருந்த கோவிலின் பெரும்பாலான நிலம் போர்ச்சுக்கீசியர்களால் பின்னர் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் டச்சுக் காரார்கள் ஆட்சியின் போது புதிய நிலங்கள் கோவிலிருக்கு வழங்கப்பட்டன. மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கா ஆதரவில் மீண்டும் கோவில் எழுப்பப் பட்டது.

#2

இருபதாம் நூற்றாண்டின் முன் பாதியில் ஹெலனா விஜயவர்த்தனா கோவிலை அழகாகப் புதுப்பித்திருக்கிறார்.

#3

சித்திரங்கள் நிறைந்த கூடங்களைத் தாண்டி உள்ளே சென்றதும் நுழைவாயிலைப் பார்த்து அமைந்த உயரமான தோரண வளைவுக்குள் அருள்பாலித்திருக்கிறார் தியான புத்தர். இமய மலை போன்ற பின்னணியும், சூழ்ந்திருக்கும் அமைதியும் மனதைக் கவருகிறது.

#4

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin