ஞாயிறு, 26 ஜூன், 2022

ஞாயிறு, 19 ஜூன், 2022

நானும் நீயும் சமம் இல்லை.. - ஜோடிப் பறவைகள் ஆறு..

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 140
பறவை பார்ப்போம்.. - பாகம்: 87

#1
 “வாழ்க்கையை அனுபவிப்பது என்பது 
விடைகளைக் கண்டறிவதன்று, 
வினாக்களை வாழ்வது.”
_ Sue Margolis

#2
“நம்மிடம் எல்லாமும் இல்லாதிருக்கலாம், 
ஆனால் நாம் ஒன்றாக இருக்கையில் 
எல்லாமும் இருக்கிறது.”

#3 
“சீர்க்கேடுகள் உங்களைத் தொந்திரவு செய்யாதிருந்தால், 

செவ்வாய், 14 ஜூன், 2022

நெக்ஸஸ் ஆகிய ஃபோரம், ஓவியமான ஒளிப்படம், புன்னகை 80 - தூறல்: 42

மால்:


பெங்களூரின் ஃபோரம் மால்கள் இனி நெக்ஸஸ் மால்களாக இயங்கும் என சென்ற ஞாயிறு டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் வெளிவந்த 2 முழுப்பக்க அறிவிப்பை பெங்களூர்வாசிகள் கவனித்திருக்கக் கூடும்.

பெங்களூர் மக்களுக்கு அறிமுகமாகிய முதல் மால், 1999_ல் கோரமங்களாவில் ப்ரெஸ்டிஜ் க்ரூப் கட்டிய  ஃபோரம் மால்தான். 72000 சதுர அடிகளில், ஐந்த தளங்களுடன் முதல் மால் கலாச்சாரம், ஃபுட் கோர்ட், ஒரே இடத்தில் பத்துக்கும் மேலான பிவிஆர் திரைப்பட அரங்குகள் என அப்போது அவை புதுமையாகத் தோன்றியது. ஈர்க்கவும் செய்தது.

ஞாயிறு, 12 ஜூன், 2022

ஒரு முறைதான் பூக்கும்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 139 
பறவை பார்ப்போம்.. - பாகம்: 86
#1
"கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துங்கள்,
ஏனெனில் சில விஷயங்கள் ஒரேஒரு முறைதான் வாய்க்கும்."


#2
"எதிர்பார்ப்புகளை 
சாதிக்க வேண்டியவற்றின் மேல் அதிகமாகவும் 
மனிதர்களிடத்தில் குறைவாகவும் வையுங்கள்."

#3

ஞாயிறு, 5 ஜூன், 2022

கோடை மழையும்.. இருவாச்சிக் குடும்பமும்..

 #1

கடந்த 3 வருடங்களாக, சரியாக ஏப்ரல் மாத இறுதியில் எங்கள் குடியிருப்புக்கு வந்து விடுகின்றன ஒரு ஜோடி சாம்பல் இருவாச்சிப் பறவைகள். இங்கிருக்கும் அடர்ந்த மரங்கள் ஏதேனும் ஒன்றில் கூடு கட்டிக் குஞ்சு பொரித்து அது சற்றே வளரும் வரை இருந்து விட்டு ஜூன் மாத இறுதியில் பறந்து விடும் பெரிய பறவைகள். குஞ்சு அங்குமிங்குமாகப் பெற்றோரைத் தேடி ஓரிரு வாரங்கள் பெருங்குரல் எழுப்பிச் சுற்றியபடி இருந்து விட்டு, பின்னர் காணாமல் போய் விடுவது வழக்கம்.

#2இதோ, இந்த வருடமும். சரியாக ஏப்ரல் இறுதியில் அதிகாலைப் பொழுதில் திரைச் சீலையை விலக்கிய போது காணக் கிடைத்தன அடுத்தடுத்தக் கிளைகளில் அமைதியாக அமர்ந்திருந்த ஜோடி. “திரும்பவும் வந்து விட்டோம்” எனக் கண்ணால் அறிவித்தது ஜோடியில் ஒன்று!

#3பின் அடுத்தடுத்த நாட்களில் குஞ்சும் காணக் கிடைத்தது. 

#4

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin