புதன், 29 ஜனவரி, 2020

பெங்களூர் கோட்டை

#1
பெங்களூர் கோட்டை

'திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனை'யிலிருந்து ஐந்து நிமிட நடையில் சென்றடையும் தூரத்தில், பெங்களூர் கிருஷ்ண ராஜேந்திர சாலையில் இருக்கிறது பெங்களூர் கோட்டையின் 'டெல்லி பாகிலு' (நுழைவாயில்). 

#2

பெங்களூரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முதன்மையானது. இதன் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

#3


#4

திங்கள், 27 ஜனவரி, 2020

இறக்கைகள் அர்த்தம் பெறட்டும் - ‘தி இந்து’ காமதேனு, ‘நிழற்சாலை’யில்..

26 ஜனவரி 2020, இதழில்..
இறக்கைகள் அர்த்தம் பெறட்டும்

கிளிகள் வேடிக்கையானவை
அதிக சத்தமிட்டு ஒன்றையொன்று
திட்டிக் கொள்ளும் அல்லது
அமைதியாகக் கொஞ்சிக் கொள்ளும்.
சன்னலில் நம் நிழலாடினால்
சட்டெனப் பறப்பவை

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

திருவள்ளுவர் தினக் கொண்டாட்டம் - பெங்களூரு ஹல்சூரு மணிமண்டபம்


ரண்டு வரிகள், மூன்று பிரிவுகள், ஒன்பது இயல்கள், நூற்றுமுப்பத்தி மூன்று அதிகாரங்கள், ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களைப் படைத்த திருவள்ளுவரைப் போற்றும் விதமாக ‘திருவள்ளுவர் தினம்’ ஒவ்வொரு வருடமும்  தை மாதத்தின் இரண்டாம் நாளன்று கொண்டாடப் படுகிறது. இந்த வருடமும் 16 ஜனவரி அன்று தமிழகத்திலும் தமிழர் வாழும் பிற இடங்களிலும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை மரியாதைகள் செய்யப்பட்டன.


நேற்று பெங்களூர் ஹல்சூரு ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் மணிமண்டபத்திற்குச் சென்றிருந்தேன். இரு தினங்களுக்கு முன் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் இங்கு வந்த வண்ணமாக உள்ளனர். நான் சென்றிருந்த போதும் ஒரு சிலர் மாலைகளைக் கொண்டு வந்து அணிவித்து, திருவள்ளுவரை வலம் வந்து வணங்கிச் சென்றனர். கம்பீரமாக அமர்ந்திருக்கும் திருவள்ளுவரை நானும் வணங்கி, படங்களும் எடுத்தேன்.

#2

இந்த இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலைக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே உள்ளது. உங்களில் பலருக்கும் தெரிந்த ஒன்றே.

வெள்ளி, 17 ஜனவரி, 2020

ஆகாசப் பறவைகள் - ‘தி இந்து’ காமதேனு பொங்கல் சிறப்பிதழில்..

‘தி இந்து’ குழுமத்திலிருந்து ஞாயிறு தோறும் வெளிவரும் காமதேனுவின் பொங்கல் சிறப்பிதழில்.. எனது கவிதை..

ஆகாசப் பறவைகள்

மைதியான அதிகாலைச் சூரியனின்
ஆரஞ்சுத் தீட்டல்களுக்கு நடுவில்
விரைகின்றன ஆகாயத்தில்  சத்தமின்றி.
உறங்கும் உலகத்திற்குக் கேட்பதில்லை
மென் சிறகுகளின்
மேலும் கீழுமான அசைவு.

புதன், 15 ஜனவரி, 2020

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!

#1
நண்பர்கள் அனைவருக்கும் 
தித்திக்கும் 
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!


ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

செவ்வாய், 14 ஜனவரி, 2020

க.அம்சப்ரியாவின் ‘கல்வி 100 சிந்தனைகள்' - மதிப்புரை.. ‘கல்கி’ பொங்கல் சிறப்பிதழில்..


கவிஞரும் தமிழ் ஆசிரியருமான க. அம்சப்ரியா அவர்களின் நூல் குறித்த மதிப்புரை இந்த வாரக் கல்கி பொங்கல் சிறப்பிதழில்..


நம்பிக்கை விதைகள்

மனிதர்கள் மனிதநேயத்துடன் மனிதர்களாக வாழ்வதற்கும், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அமைதிக்கும், ஆண் பெண் சமத்துவம் மற்றும் மதங்களையும் சாதிகளையும் தாண்டிய சகோதரத்துவம் நிலவவும் கல்வி எத்துணை அவசியமானதென்பதை அறிவோம். ஆசிரியர்களின் அக்கறை, பெற்றோரின் பொறுப்பு, மாணவர்களின் மனநிலை இவை மூன்றும் சரியான கோணத்தில் அணுகப்பட்டால் மட்டுமே கல்விக் கூடங்கள் சிறந்த குடிமகன்களை நாட்டுக்கு அளிக்க முடியும்.

தமிழாசிரியரும் கவிஞருமான க. அம்சப்ரியா, அத்தகையக் கல்வி எத்தகு அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை பெற்றோர், மாணவர், ஆசிரியர், புத்தகம், கல்வி, வகுப்பறை மற்றும் சமுதாயம் ஆகிய தலைப்புகளின் கீழ் சிந்தனை விதைகளாகத் தூவியிருக்கிறார், நிச்சயம் அவை பெரும் விருட்சங்களாக உயர்ந்து பரிமளிக்கும் என்கிற நம்பிக்கையுடன். 19 வருட தனது ஆசிரியப் பணியில் அவர் கண்டு உணர்ந்த அனுபவங்களின் வெளிப்பாடாக இச்சிந்தனைகள் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

பெரும்பாலும் பெற்றோர் இருவருமே பணிக்குச் செல்லும் இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அதை அர்த்தமுள்ளதாகச் செலவிட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார். அறிவுரைகளை விடவும் கனிவான பேச்சினால் மட்டுமே குழந்தைகளை நெருங்க முடியும் என்பதை மனதில் பதிய வைக்கிறார். 'குழந்தைகளின் பிடிவாதத்திற்கு அடிபணிகிற பெற்றோர்களால் ஆரோக்கியமான சூழலில் குழந்தைகளை வளர்ப்பது கடினம்' என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

மாணவர்களுக்கு மற்றுமொரு பெற்றோராய் இருந்து அக்கறையுடனும் பொறுப்புடனும் வழிநடத்தும் 'ஆசிரியரைப் புறக்கணிக்கும் சமுதாயம் தனது தலைமுறையை மட்டுமல்ல. அடுத்தடுத்த தலைமுறையையும் இழப்பிற்குள்ளாக்குகிறது.' என எச்சரிக்கிறார். திகைக்க வைக்கும் அளவில் மாணவர்கள் மத்தியிலும் குற்றங்கள் மலிந்து வரும் இந்நாளில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றினால் மட்டுமே மாணவர்கள் மனதில் இடம் பெற்று அவர்களை வழிநடத்துவதில் வெற்றி பெற முடியும் எனக் காட்டுகிறார்: 'எழுத்துகளாகவும் கருத்துகளாகவும் மாணவர் மனதில் நுழைபவரே ஆசிரியர்', 'ஒரு மாணவரை நல்வழிப்படுத்த ஆசிரியரின் கருணை மிக்க ஒரு சொல்', 'எத்தனை மாணவர்களைச் சமுதாயத்திற்கான பொறுப்புள்ளவர்களாக மாற்றினோம் என்பது ஆசிரியரின் வாழ்க்கை'! 

அதே நேரம் மாணவர்கள் ஆசிரியரை தம் வாழ்வின் வழிகாட்டியாக நம்பத் துவங்கினாலே வாழ்க்கை ஒளிமயமாகும் எனப் புரிய வைக்கிறார். புத்தகங்களை நேசிக்க, புத்தகங்கள் வழியே பயணித்துப் புதிய உலகைக் காணக் கற்றுத் தருகிறார். 

மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களால் பள்ளிக்குச் சேரும் புகழைக் குறிவைத்து இயங்கும் கல்வியாளர்களைச் சிந்திக்க வைக்கிறார்: 'கற்ற கல்வியைச் சோதிப்பதென்பது வினாத்தாள்களால் தீர்மானிக்கப்படுவதல்ல'.  நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை சரியா என விவாதித்து வரும் நிலையில் அதற்கான விளக்கங்களைத் தெளிவாக முன் வைத்திருக்கிறார்: 'கற்ற கல்வியைச் சோதிப்பதென்பது வினாத்தாள்களால் தீர்மானிக்கப்படுவதில்ல', 'மனிதர்களைப் பக்குவப்படுத்துவதே கல்வி'!

சிறந்த பெற்றோரை, மாணவரை, ஆசிரியரை அடையாளம் காட்டுவதோடு அவர்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்ள வைக்கிறார் ஆசிரியர். ஒரு கையேட்டின் வடிவில் அனைத்துத் தரப்பினரையும் சிந்திக்க வைக்கும் தொகுப்பாகச் சுடர் விடுகிறது ‘கல்வி 100 சிந்தனைகள்’.  ஒவ்வொரு சிந்தனைக்கும் மாணவச் செல்வங்கள் வரைந்த நூறு ஓவியங்களைப் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
*

[முழுமையான கட்டுரையைப் பகிர்ந்து உள்ளேன்.]

கல்வி 100 சிந்தனைகள் - க. அம்சப்ரியா;
பக்கங்கள்: 120; விலை: 110/- ; வெளியீடு மற்றும் கிடைக்குமிடம்: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பெரம்பூர், சென்னை - 11; தொலைபேசி எண்: 94446 40986

நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் அம்ருதா பதிப்பக அரங்கில் இந்நூலை வாங்கிப் பயனுறலாம்.


நன்றி கல்கி!
***

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

வெற்றியின் இரகசியம் - “முத்துச்சரம்” ஆயிரமாவது பதிவு

ஆயிரமாவது பதிவு

2008_ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கிய ‘முத்துச்சரம்’, பதினொன்றரை ஆண்டுகளாகச் சீராகப் பயணித்து ஆயிரமாவது பதிவைத் தொடுகிறது. முத்துச்சரமும் சரி, ஃப்ளிக்கர் ஒளிப்படப் பக்கமும் சரி, ஆரம்பித்தபோது நினைத்ததில்லை இத்தனைக் காலம் தொடர்ந்து இவற்றில் ஈடுபடுவேன் என்று. ஆனால் ஒரு ஒழுங்குடன் என் படைப்புகளைச் சேமித்து வர இவை உதவுகின்றன என்றால் அது மிகையாகாது.

வலைப்பூக்களின் காலம் முடிந்து விட்டது என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது.  பிற சமூக வலைத்தளங்களால் ஈர்க்கப்பட்டுப் பலரும் வலைப்பூக்களை விட்டு ஒதுங்கி விட்டது ஒரு புறமிருக்க, திரட்டிகளும் செயல்படாத நிலையில் பொதுவான இந்த எண்ணத்தைத் தவறென்றும் சொல்ல முடியாது. ஆனால் முன் போல வருகையாளர் எண்ணிக்கை இல்லாது போயினும் தனிப்பட்ட முறையில் நம் படைப்புகளைச் சேமித்து வர வலைப்பூ உதவுவதோடு நம் செயல்பாடுகளை நிறுத்தி விடக் கூடாதென்கிற முனைப்பையும் தருகிறதென்பதைத் தொடர்ந்து இங்கு செயல்படுகிறவர்கள் ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்:).

கவிதை, சிறுகதை, கட்டுரை, நூல் மதிப்புரை, மொழிபெயர்ப்பு இலக்கியம், வாழ்வியல் சிந்தனைகளின் தமிழாக்கம் போன்றவற்றோடு புகைப்படத் தொகுப்புகள், பயணப் பதிவுகள் எனத் தொடர்ந்து, எட்டு இலட்சத்து இருபத்தியாறாயிரத்து எழுநூறு +++ பக்கப் பார்வைகளைக் கடந்து கொண்டிருக்கிறது முத்துச்சரம். ஆரம்பக் காலத்தில் ஊக்கம் தந்த நண்பர்கள், தற்போது வரையிலும் உடன் வருகிறவர்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.


*
-------------------------
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (65) 
பறவை பார்ப்போம் - பாகம் (47)

#1
“எனது பலம், எனது தனித்திறம் மற்றும் 
நான் எதற்குத் தகுதியானவர் என்பது 
எனக்குத் தெரியும்.”
_ William Gallas


#2
“உன்னை நீ காத்திடு; 
உன் நம்பிக்கையில் நிமிர்ந்து நில்; 
தைரியமாக இரு; உறுதியாய் இரு.”
_(1 Corinthians 16:13)

திங்கள், 6 ஜனவரி, 2020

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

மகிழ்ச்சியின் அளவுகோல்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 64


#1
"சிறந்த உணர்வுகள் என்பவை 
வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை."


#2
"எந்த அளவுக்கு மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமென நீங்கள் தீர்மானிக்கிறீர்களோ
உண்மையிலேயே அந்த அளவுக்கு மகிழ்ச்சியாய் இருப்பீர்கள்."

#3
"நேசியுங்கள் 
செய்யும் எந்தச் செயலையும்."

புதன், 1 ஜனவரி, 2020

2019 கணக்கு வழக்கு + புத்தாண்டு வாழ்த்துகள் - தூறல்: 38

பிறந்து விட்டது 2020. வழக்கம் போலவே சென்ற ஆண்டைச் சற்றேத் திரும்பிப் பார்த்துக் கொள்கிறேன்:).

முத்துச்சரத்தில் சராசரியாக மாதம் ஆறு பதிவுகள்! 

மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாக உள்ளதோ இல்லையோ ஃப்ளிக்கரில் பதியும் படங்களை இங்கும் பகிரும் எண்ணத்துடன் வழங்கும் புகைப்படத் தொகுப்புகளான, தமிழாக்கத்துடன் கூடிய வாழ்வியல் சிந்தனைகள்  (17 பதிவுகள்); பறவை பார்ப்போம் கட்டுரைகள் (11 பதிவுகள்), இவ்விரண்டு தொகுப்புகளும் உள்ளடங்கிய ‘என் வீட்டுத் தோட்டத்தில்..’ (19 பதிவுகள்);

இயற்கையோடு பயணிப்பதாக அமைந்த ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ தொகுப்புகள் என் மனதுக்கு நிறைவானவை. விதம் விதமான கோணங்களில் பல வகைப் பறவைகளைப் படமாக்கிய பின் அவற்றோடு பதிவதற்காகச் சேகரித்த தகவல்கள் சுவாரஸ்யத்தையும் வியப்பையும் அளித்தன. 

த்திரிகை வெளியீடுகளாக,

கல்கி தீபாவளி மலரில், 

தொடர்ந்து ஒன்பதாவது வருடமாக எனது ஒளிப்படம்.. இந்த முறை முழுப்பக்க அளவில் :)



கல்கி தீபம் இதழில் மூன்று கட்டுரைகள் நான் எடுத்த படங்களோடு:


&


&


டெகன் ஹெரால்ட் ஞாயிறு பதிப்புகளில் இருமுறைகள்:

&

சென்ற வருடம் போல அல்லாமல் கவிதைகளைப் பொருத்தவரையில் திருப்தி அளித்த வருடம். ஏனெனில் வருட ஆரம்பத்தில் தமிழாக்கமும் சேர்த்து மாதம் ஒன்றேனும் எழுத வேண்டும் என நினைத்ததை ஓரளவு செயல்படுத்தியிருக்கிறேன்.

கல்கியில்..

தி இந்துவின் காமதேனு வாரயிதழில்..


&


அமெரிக்க மாத இதழான தென்றலில், இரண்டு கவிதைகள்:


மல்லிகை மகளில்,


‘சொல்வனம்’ இருநூறாவது இதழில்..


வளரி இதழில்..

மொழிபெயர்ப்பு இலக்கியங்களாக தமிழாக்கம் செய்த கவிதைகள்:

பதாகை மின்னிதழில்.. சார்ல்ஸ் காஸ்லே கவிதைகள்.. இரண்டு

சொல்வனம் மின்னிதழில்.. சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி கவிதை.. ஒன்று

கலீல் ஜிப்ரான் கவிதைகள்.. இரண்டு

மற்றும்
தாகூர் கவிதை.. ஒன்று


சென்ற வருடத்தில் எந்தக் கவிதைகளும் தமிழாக்கம் செய்திருக்கவில்லை. ஆனால் சென்ற ஜனவரி ஒன்றில் நான் எடுத்தப் புத்தாண்டு தீர்மானம் கவிதைகளில் கவனம் செலுத்த வைத்தது:).

கவிதைகளுக்கான அங்கீகாரமாக, FB வாசகசாலை கவிதை இரவில்.. என் கவிதைகள் வாசிக்கப்பட்டன..




நூல் மதிப்புரை:

கீற்று மின்னிதழில்..




சிறுகதைகள்:

ஒன்று கூட எழுதவில்லை :(. ஸ்ரீராம், மன்னிக்கவும். அவருடைய எங்கள் ப்ளாக் வலைப்பூவுக்குத் தருவதாகச் சொன்ன கதையை இன்னும் தரவில்லை. ஆனால் அவருக்கு நான் கீழ் வரும் செய்திக்காக என் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். 

2018_ல் ‘சீதை ராமனை மன்னித்தாள்.’  எனும் கருவுக்காக அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதிய ‘அவளும் நோக்கினாள்’ சிறுகதை,  எத்திராஜ் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியரான முனைவர் இரா பிரேமா அவர்கள் தொகுத்து, இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் ‘உடைபடும் மெளனங்கள்’ நூலில் இடம் பெறுகிறது.

எழுத்தாளர் ஆர். சூடாமணியில் ஆரம்பித்து இந்நாளைய எழுத்தாளர்கள் வரை 30 பெண் எழுத்தாளர்கள் எழுதிய பெண் மையக் கதைகளைக் கொண்டது இத்தொகுப்பு, பாரதி புத்தகாலயம் வெளியீடு.

நன்றி எங்கள் ப்ளாக்! நன்றி ஸ்ரீராம்:)!
முனைவர் இரா. பிரேமா அவர்களுக்கும் என் நன்றி. 


யணத் தொடர்களாக..

ஜம்ஜெட்பூர் - பதிவுகள் (4)

பேகல் மற்றும் அனந்தபுரம் கோயில்.. கேரளம் - பதிவுகள் (5)

முக்கூடல் ஆனித்திருவிழா - பதிவுகள் (2)

பசவனகுடி, ஹொஸ்கொட்டே ஏரி மற்றும் திப்பு சுல்தான் அரண்மனை, பெங்களூர் - பதிவுகள் (3)

ளிப்படங்களுக்கான அங்கீகாரமாக..,

கல்கி தீபாவளி மலர், டெகன் ஹெரால்ட் வெளியீடுகளுடன்..,

வல்லமை மின்னிதழில் படக் கவிதைப் போட்டிக்காக ஒன்பது மற்றும் பத்தாவது முறையாக இரு படங்கள் தேர்வாகியிருந்தன சென்ற ஆண்டில்:
&

ஃப்ளிக்கர் பக்கத்தில் பெரிய இடைவெளிகள் இன்றி, தங்கு தடையற்று தினமொரு படம் பதிந்து வந்திருக்கிறேன் :)! இரசித்து இரசித்துப் படமாக்கியவற்றில் அதிகம் பிடித்தவை எவை எனக் கேட்டால் பட்டியல் சற்றே நீண்டு போவதால் ஃப்ளிக்கரின் “எக்ஸ்ப்ளோர்” பக்கத்தில் சென்ற வருடம் தேர்வான 5 படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதில் நடராஜர் சிலையின் படம் ஒரு இலட்சத்திற்கும் மேலான பக்கப் பார்வைகளைப் பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.



நண்பர்கள் அனைவருக்கும்..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin