ஞாயிறு, 28 நவம்பர், 2021

தீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகை மாதம் (1)

 #1

திருக்கார்த்திகை தீபம்

கார்த்திகைத் திங்களின் எல்லா நாட்களிலும் தீபங்கள் ஏற்றி வாசலில் வைப்பதும், திருக்கார்த்திகை அன்று வீட்டிலிருக்கும் விளக்குகள் எல்லாவற்றையும் ஏற்றி வழிபடுவதும் தொன்று தொட்டு வரும் வழக்கமாக இருந்து வருகிறது. 

ஒளிப்படக் கலையில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்த பின் விளக்குகளை விதம் விதமாகப் படமெடுப்பதில் உள்ள ஆர்வம் குறையாமல் உள்ளது:). கடந்த சில வருடங்களில், கார்த்திகைத் தீபங்களின் படங்களை இங்கு பகிர்ந்து வந்துள்ளேன்.  அப்பதிவுகளுக்கான இணைப்புகள் கடைசியில் உள்ளன ஆயினும், வாசிக்காதவர்களுக்காக.. சிறுவயது கார்த்திகைப் பண்டிகை நினைவுகளை இங்கே பகிர்ந்துள்ளேன். இந்த வருட தீபங்களின் தொகுப்பின் முதல் பாகமாக இந்தப் பதிவு :)!

#2

ஓம் மூவுலகும் நிறைந்தாய் போற்றி!


#3

ஓம் எத்திக்கும் துதி எந்தாய் போற்றி!


#4

ஓம் உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி!

ஞாயிறு, 14 நவம்பர், 2021

ஞாயிறு, 7 நவம்பர், 2021

தேவகி சிங்கமே தாலேலோ.. - ஆயர்பாடி மாளிகையில்.. கிருஷ்ணாவதாரம்.. (பாகம் 1)

 #1

ஆயர்ப்பாடி மாளிகையில்..

“சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரி வளையும் நாணும் அரைத் தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் 
செங்கண் கருமுகிலே தாலேலோ
தேவகி சிங்கமே தாலேலோ”
_பெரியாழ்வார் திருமொழி


#2
ஒருத்தி மகனாய்ப் பிறந்து..


#3
ஓரிரவில்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin