வெள்ளி, 22 ஏப்ரல், 2016

பட்ட கடன் - சர்வதேச பூமி தினம் 2016

#1
மரங்களை நடுபவன் தனக்கு நிகராக மற்றவர்களை நேசிப்பவனாக இருக்கிறான்.
_Thomas Fuller

#2
நம் அனைவரையும் சந்திக்க வைப்பதும், பரஸ்பர நலனுக்காக அக்கறை காட்ட வைப்பதும், ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ளச் செய்வதும் சுற்றுச் சூழல் மட்டுமே.
—Lady Bird Johnson

#3
அத்தனை ஜீவராசிகளுக்கும் நண்பனாக இருப்பவனே நல்ல மனிதன்.
-காந்திஜி

வியாழன், 21 ஏப்ரல், 2016

ஆனந்தச் சிறுமி - குழந்தைகளால் குழந்தையாக மாறுவது..

ழுத்தாளர் பாவண்ணனின் ‘யானை சவாரி’ சிறுவர் பாடல் தொகுதியிலிருந்து மேலும் ஒரு பாடல், நான் எடுத்த படங்களுடன்.

ஆனந்தச் சிறுமி
கால்முளைத்த குட்டிப் பெண்ணை
தடுக்க முடியவில்லை
காலை முதல் இரவு வரைக்கும்
ஏகப்பட்ட தொல்லை

திண்ணைப் பக்கம் போவதுபோல
அடியெடுத்து வைக்கிறாள்
திசையை மாற்றி அடுத்த கணமே
அடுப்புப் பக்கம் நிற்கிறாள்

வியாழன், 7 ஏப்ரல், 2016

அச்சம் என்பது மடமையடா..

#1
‘கடந்து வரவேண்டிய சிலவற்றின் மதிப்பை பயம் நமக்கு ஞாபகப் படுத்துகிறது.’

#2
'அனைத்தையும் மறந்து ஓடிப் போ.. அல்லது .. தைரியத்துடன் எதிர்த்து எழுந்து நில்!'
_Zig Ziglar

#3
ஒன்றைப் பார்த்துப் பயப்படுவதைக் காட்டிலும், அது உனக்கு வேண்டும் என்பதில் உறுதியாய் இரு. _Bill Cosby


#4
தைரியம் என்பது உங்கள் பயங்களை எதிர்கொள்வது. முட்டாள்தனம், ஒன்றுமில்லாததற்கு எல்லாம் பயப்படுவது. _ Todd Bellemare.

#5
“வெற்றியை நோக்கிய உங்கள் பயணத்தில், பல நதிகளை நீங்கள் கடக்க வேண்டியிருப்பதை மறந்து விடாதீர்கள், ஆமாம்! அதுமட்டுமின்றி ஒவ்வொரு நதியும் உங்களை அச்சுறுத்த முயலுகிற முதலைகளால் நிரம்பியது. பயந்து விடாதீர்கள், தொடர்ந்து பயணியுங்கள், இலக்கை அடைவீர்கள்.”
― Israelmore Ayivor

#6
பயங்கள் நம்மை முடக்கி விடுவதில்லை. மாறாகத் தட்டி எழுப்புகின்றன.
Veronica Roth 

#7
‘எதற்கும் அஞ்சாமை’ என்பதல்ல முக்கியம். அது சாத்தியமுமல்ல. எப்படி நம் அச்சத்தைக் கட்டுப் படுத்துவது, எப்படி அதிலிருந்து விடுபடுவது எனக் கற்றுத் தேறுவதே முக்கியம். _ Veronica Roth

[பெங்களூர் சாங்கி ஏரியில் சுற்றிச் சுற்றி வந்த வாத்துக்களைச் சுழன்று சுழன்று எடுத்த சில படங்களுடன்.. சிந்தனை முத்துக்கள், எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.]
***



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin