ஞாயிறு, 1 மே, 2022

சுய மரியாதை

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 135
பறவை பார்ப்போம்.. - பாகம் 83

#1
 “உங்களைக் குறித்த மற்றவர்களின் கருத்தைக் கொண்டு 
உங்கள் எல்லையை வரையறுக்காதீர்கள்.”

#2
“எப்போதும் எல்லாவற்றையும் தனிப்பட்ட முறையில் 
எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.  
மற்றவர்கள் உங்களைப் பற்றிக் கூறுவது 
அவர்களைப் பற்றிய பிரதிபலிப்பே அன்றி, 
உங்களைப் பற்றியதல்ல.”


#3
“உங்கள் பயங்களை நம்பாதீர்கள். 
அவற்றுக்கு உங்கள் பலம் தெரியாது.”
__ Athena Singh

#4
"நீங்கள் சோம்பி இருந்தால், தனித்திருக்காதீர்கள்; 
தனித்திருந்தால் சோம்பி இருக்காதீர்கள்!"
_Samuel Johnson

#5
“பரவாயில்லாமல் இருப்பது பரவாயில்லை,
முயற்சியை நீங்கள் கைவிடாத வரையில்.

#6
“சில நேரங்களில் அது ஆணவம் அல்ல, 
சுய மரியாதை!”
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

12 கருத்துகள்:

 1. வரிகளும் படங்களும் அருமை. நான்காவது படம் இன்னும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஸ்ரீராம். உங்கள் கருத்தைப் பார்த்து விட்டு அதற்கு முதலிடம் கொடுத்து விட்டேன்:). அதையே மனோம்மாவும் பாராட்டியுள்ளார்.

   நீக்கு
 2. பறவைகள் படங்கள் எல்லாம் அருமை. அவை கூறும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

  பதிலளிநீக்கு
 3. படங்களும் படங்களுக்கான வரிகளும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 4. அனைத்து புகைப்படங்களும் அழகு! முதல் படம் மிகவும் நுணுக்கமான அழகுடன் திகழ்கிறது!

  பதிலளிநீக்கு
 5. சிந்தனைகளும் படங்களும் நன்று.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin