திரை
நெடுநாட்களாக ஓடிக் கொண்டிருக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றின்
கடைசித் திரை, சில மனிதர்கள் அதை
ஒருநூறு முறைகளுக்கும் மேலாகப் பார்த்துவிட்டதாகச்
தொலைக்காட்சி செய்திகளில் நான் அதைப் பார்த்தேன், அந்தக் கடைசித் திரையை:
பூக்கள், ஆரவாரம், கண்ணீர், இடியோசையை ஒத்த ஆர்ப்பரிப்பு.
நான் இந்தத் தனிப்பட்ட இசை நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை
ஆனால் எனக்குத் தெரியும், ஒருவேளை நான் அதைப் பார்த்திருந்தால்
என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடிந்திருக்காது, அது என்னை
வெறுப்படையச் செய்திருக்கும்.
இந்த விஷயத்தில் என்னை நம்புங்கள், இந்த உலகம் அதன் மக்கள் மற்றும்
அதன் கலைநயமிக்க கேளிக்கைகள்
எனக்கு மிகச் சிறியதையே செய்துள்ளன, எனக்கு மட்டும்.
இருப்பினும், அவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ந்திருக்கட்டும்,
அது என் கதவிலிருந்து அவர்களைத் தள்ளி வைத்திருக்கும்,
அதற்காக, இடியோசையை ஒத்த என் தரப்பு
ஆர்ப்பரிப்பு.
*
மூலம்:
"curtain" By Charles Bukowski
**
[படம்: இணையத்திலிருந்து..]
26 ஜூன் 2022, சொல்வனம் இதழ்: 273_ல் வெளியாகியுள்ள 3 கவிதைகளில் ஒன்று. நன்றி சொல்வனம்!
**
***
என்ன சொல்ல வருகிறது கவிதை என்று சரியாகப் புரியவில்லை. மற்றவர்களின் (வெத்து) மகிழ்ச்சியில் எனக்குப் பங்கில்லை என்கிறாரா?
பதிலளிநீக்குஎனது புரிதலும் அதுவே. இவரது வாழ்க்கைக் குறிப்பை முந்தைய கவிதைப் பகிர்வுகளில் வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அது அவரது கவிதைகளைப் புரிந்து கொள்ள உதவும்.
நீக்குஅவரால் இயற்கையின் நர்த்தனத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லையோ இல்லை அவரதுகருத்துகள் பெரும்பாலும் கொஞ்சம் கம்யூனிசம் சார்ந்ததால்?
பதிலளிநீக்குகீதா
ஆம், ஏறத்தாழ சரியே. அவரது கவிதைகளில் வெளிப்படும் கசப்புணர்வுக்கு சமூகத்தின் மீதான அவரது அவநம்பிக்கையும் காரணமாகச் சொல்லப்படுகிறது. நன்றி கீதா.
நீக்கு