புகைப்படப் பகிர்வுக்காகவே இயங்கும் தளங்களில் முதன்மையாக விளங்கி வரும் Flickr-ல் இன்றோடு எனது Photostream ஆயிரம் படங்களை நிறைவு செய்து 1,33,700 + மொத்தப் பக்கப் பார்வைகளைப் பெற்று தொடருகிற பயணத்துக்குக் காரணாமாய், ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி:)!
# காலைப் பனியில் ரோஜா
# ஆயிரமாவது படம்!!
இங்கும் அங்கும்
முத்துச்சரம் ஆரம்பித்த மாதத்திலிருந்தே PiT போட்டிகளுக்கென தொகுப்பாகப் படங்களை பகிரும் பழக்கம் ஆரம்பித்தது. ஒன்றரை வருடங்கள் கழித்து 2009-ல் ஆரம்பித்த ஃப்ளிக்கர் பக்கத்தில் இங்கிருக்கும் அத்தனை படங்களும் உள்ளன என சொல்ல முடியாது. அங்கே பகிர்ந்த அனைத்தும் இங்கு உள்ளன என்றும் சொல்ல முடியாது. எப்படியானாலும் புகைப்படங்களுக்கே ஆன பிரத்தியேகமான தளத்தில் ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு என்ற விகிதத்தில் பகிர்ந்த படங்கள் ஆயிரத்தைத் தொட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
‘எண்ணிக்கை முக்கியமா?’
இல்லைதான் என்றாலும்