ஞாயிறு, 30 ஜூன், 2013

பெங்களூர் சித்திரச் சந்தை 2013 - பத்தாவது பதிப்பு (பாகம் 1)

ஐந்து மாதங்களாயிற்று. ஜனவரி 2013, இதே போன்றதொரு மாதத்தின் கடைசி ஞாயிறன்று கோலாகலமாக நடந்து முடிந்தது பெங்களூரின் “சித்திரச் சந்தை 2013 - பத்தாவது பதிப்பு” இலட்சக்கணக்கானப் பார்வையாளர்களையும் ஆயிரக் கணக்கானப் பங்கேற்பாளர்களையும் பெற்று.
#1

அனைவருக்கும் கலை” என்பதைக்  குறிக்கோளாகக் கொண்டு, கலைஞர்களுக்கும் இரசிகர்கர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் பாலமாக அமைந்து, கடந்த பத்து ஆண்டுகளாகக்  கர்நாடகா சித்ரகலா பரிக்ஷத் (CKP) நடத்தி வரும் திருவிழா இது. அசோகா ஓட்டலும், சித்ரகலா வளாகமும் அடுத்தடுத்து இருக்கிற குமர க்ருபா சாலையும் அதன் பக்கச் சாலைகளும் அன்றைய தினம் போக்குவரத்து தடுக்கப்பட்டு கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது, எப்போதும் போல.  [“சித்திரச் சந்தை 2012” பகிர்வு இங்கே.] சென்ற வருடம் 1260 ஸ்டால்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வருடமும் கூடிக் கொண்டே போகும் வரவேற்பினாலும், பங்கேற்க ஓவியர்கள் காட்டி வரும் ஆர்வத்தினாலும் இந்த முறை எண்ணிக்கை 1500 ஆக அதிகரிக்கப் பட்டிருந்தது.

#2

இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக,
கர்நாடகாவின் முக்கிய ஓவியர்கள், ஓவிய ஆசிரியர்கள் நூறு பேரின் ஓவியங்களுடன் வளாகத்தின் உள்ளே “பேராசிரியர். எம்.எஸ். நஞ்சுண்ட ராவ் நினைவு’ ஓவிய ஆசிரியர்கள் கண்காட்சி” முந்தைய தினமான ஜனவரி 26 முதல் 3 நாட்களுக்கு நடைபெற்றது. பேராசிரியர் பெயர் பெற்ற ஓவிய ஆசிரியர் மட்டுமல்ல, இந்தக் கலைக்கல்லூரியை நிறுவியரும்.


#3 சித்ரகலா பரிக்ஷத்
இன்னொரு சிறப்பம்சமாக,

ஞாயிறு, 23 ஜூன், 2013

கண்டேன் நிலவை.. - SUPER MOON 2013

இந்த வருடத்தின்  அனைத்து முழுநிலாக்களிலும் 14% பெரிதாகவும் 30% அதிக பிரகாசத்துடனும் தோன்றி இதோ இப்போது வானிலே ஜொலித்துக் கொண்டிருக்கும் அழகு நிலா. மேகங்களுக்குள் ஒளிந்தபடி கண்ணாமூச்சிக் காட்டிக் கொண்டிருக்கும் நிலா:)!

நாள் முழுவதுமே இன்று மேகமூட்டம்தான். அதிலும் மாலையில் இராட்சதக் கருமேகங்கள் பெரிது பெரிதாகத் திரண்டு கொண்டிருந்தன.

வெள்ளி, 21 ஜூன், 2013

தேவ கானம் – மட்சுவோ பாஷோ ஜப்பானிய துளிப்பாக்கள் (பத்து)


1.
குருவியே, விட்டுவிடேன்
பூக்களோடு ஆடிப்பாடும்
சிறு ஈயை.

2.
மாலைக் குருவிகள்
உத்திரத்தில் எலிகள்
தேவ கானம்.

திங்கள், 17 ஜூன், 2013

‘சூழல் மாசடைதல்’ ( Pollution - June PiT ) - ‘பெங்களூரு’ ஐடி நகரத்தின் இன்னொரு பக்கம்

டுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லப் போகிற உலகம் எப்படியானதாக இருக்கப் போகிறது? இந்தக் கேள்விக்கான பதில் அச்சத்தையே தருகிறது. விளைவுகளை நமது காலத்திலேயே சந்திக்க ஆரம்பித்து விட்டோம். தலையாய இப்பிரச்சனை குறித்த விழிப்புணர்வு வேண்டித் தலைப்பைத் தந்திருக்கிறார் இம்மாத PiT போட்டிக்கான நடுவர் நவ்ஃபல்.

தலைப்பு: சூழல் மாசடைதல்

சுத்தமான தண்ணீரும், காற்றும் எத்தனை அவசியம் என்பதை உணராமல் தன்னை ஐடி நகரமாக முன்னிலைப்படுத்துவதிலேயே அக்கறை காட்டி வந்த அரசு சென்ற வருடத்தில் பெங்களூரில் அகற்றப்படாமல் குன்றுகளாய்க் குவிந்த குப்பைப் பிரச்சனை  சர்வதேசச் செய்தியில் அடிபட்டபோதுதான் அவசரமாக விழித்துக் கொண்டு ஆணைகள் பிறப்பித்தது. அது குறித்த என் பகிர்வு இங்கே: மாதிரி நகரம் ஆகிறதா பெங்களூர்?  இதற்கான விடை இப்போது வரை எதிர்மறையாகதான் உள்ளது.

#1
அலை குளத்தில்
கோபுர நிழல்.
அருகே..
”Cleanliness is next to Godliness” எனும் தலைப்போடு
Bangalore AID கண்காட்சியில் இடம் பெற்ற படம்.
கிட்டத்தட்ட ஒரு கோடியை நெருங்கும் ஜனத்தொகை தினம் வெளியேற்றும் 4000 டன் குப்பையைக் கழித்துக் கொட்ட புதிய நிலக்குழிகளைதான் தேடுகிறார்களே தவிர திட்டமிட்டபடி அவற்றை மாற்று சக்தியாக்கப் போதுமான ஆலைகளை அமைப்பதில் நாட்டம் காட்டவில்லை. 15-20% குப்பைகள் மட்டுமே மாற்று சக்தியாக்கப்படுவதாய் தெரிகிறது. ஏற்கனவே இருக்கும் நிலக்குழிகளைச் சுற்றியிருக்கும் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதுதான் சென்ற வருடம் பிரச்சனை வெடித்தது.  மாநகராட்சி பொதுமக்கள் ஒத்துழைப்பதில்லை எனக் குற்றம் சாட்டுகிறது. பதிலுக்கு மக்கள் போதுமான பணியாளர்களும் இல்லை, தேவையான கருவிகளும் இல்லை என மாநகராட்சியைச் சாடுகிறது. பெரும் அளவில் குப்பைகளை வெளியேற்றுகிறவர்கள் கூட அதற்கான ஆலைகள் நிறுவ அக்கறை எடுக்கவில்லை.

பெங்களூரின் முக்கிய இடமாகக் கருதப்படும் ஹல்சூர் ஏரியில் கிடைத்த சில காட்சிகள் (படங்கள் 1 முதல் 6 வரை):

வெள்ளி, 14 ஜூன், 2013

லும்பினி கார்டன்ஸ் - நாகவரா ஏரி, பெங்களூரு


#1

ஹெப்பால் ஃப்ளை ஓவரில் எலஹங்கா செல்லும் திசைக்கு வலப்பக்கமாகத் திரும்பும் ரிங் ரோடில், மன்யாட்டா டெக் பார்க் தாண்டியதும் உள்ள நாகவரா ஏரியைக் கடந்து செல்ல நேரும் போதெல்லாம் நிற்கிற வாகனங்களின் எண்ணிக்கை என்னதான் இருக்கிறது இங்கே என எண்ண வைக்கும். அல்சூர், சாங்கி டேங்க் பூங்கா போன்றவற்றை வாகனங்களிலிருந்தே பார்க்க முடியும்.  மாறாக உயரமான சுற்றுச் சுவர்களோடு எழும்பி நிற்கிறது ஏரியைச் சுற்றி அமைந்த லும்பினி கார்டன்ஸ்.

‘லும்பினி’, புத்தர் சித்தார்த்தாக 29 வயது வரை வாழ்ந்த இடம். இராணி மாயாதேவி அவரை பிரசவித்தததும் அங்குதான் என நம்பப்படுகிற லும்பினி இப்போது புத்த மதத்தினர் புனித யாத்திரை செல்லும் ஸ்தலம் என்பதும் குறிப்பிடத் தக்கது. நேபாலின் ரூபன்தேஹி மாவட்டத்தில் இருக்கிற லும்பினியின் பெயரில்அமைந்த பூங்காவில், புத்தர் சிலைக்கு அருகே போக அனுமதி இருக்கவில்லை நான் சென்றிருந்த போது. ஏனென்று பிறகு பார்ப்போம்.

#2 மேக மூட்டமாய் இருந்த ஒரு நண்பகல் வேளை
சென்ற ஜூலை மாதம் சென்றிருந்தேன். ஆம், வருடம் ஒன்றாகப் போகிறது:)! எடுத்த படங்கள் சிலவற்றுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாமே எனத் தோன்றியது.

வியாழன், 13 ஜூன், 2013

அச்சங்கள் - நவீன விருட்சத்தில்..



தோளில் வலையுடன் காடு மேடுகளில்
தேடித் திரிகிறான் கவிதையை,
ஒரு வேடனைப் போல.

காற்றைக் கிழித்தபடி
கிளியொன்று தன் குஞ்சுகளுக்காகக்
கவ்விப் பறந்த சோளக் கதிரிலிருந்து
நிலத்தில் உதிர்ந்த சிலமணிகளை,
ஆசையுடன் கொத்தப் போன
சாம்பல்நிறப் புறா மேல்
சாதுரியமாய் வலையை வீசுகிறான்.

செவ்வாய், 11 ஜூன், 2013

வல்லமை தாராயோ..


1. தானாக நிகழ்வதுதான். ஆனாலும் உருவாக்கலாம் எதிர்காலத்தை.

2. தற்காலிகமாகவே நிறுத்தி வைக்க முடியும் மற்றவர்களால் நம்மை. அதை நிரந்தரமாக்குவது நாமே.

ஞாயிறு, 9 ஜூன், 2013

தூறல்: 13 - காமிக்ஸ் இரசிகர்களா நீங்கள்..; குங்குமம் தோழி; கல்கி சிறுகதைப் போட்டி 2013; WTC பெங்களூரு

            இரும்புக்கை மாயாவி; ரிப் கெர்பி-டெஸ்மாண்ட்; மாண்ட்ரேக்-லொதார்-ஓஜோ, நர்தா-கர்மா; வேதாளம்-டயானா, குதிரை கேசரி-நாய் வாலி பொன்னிற முடிச் சிறுவன் ரெக்ஸ் இவர்களெல்லாம் யாரென்றே தெரியாதா? அப்போது உங்களுக்கானதல்ல சில தினங்களுக்கு முன் பெங்களூர் கோரமங்களா இன்டோர் ஸ்டேடியத்தில் கோலாகலமாய் நடந்து முடிந்து “காமிக் கான் 2013, பெங்களூர்”.

புதன், 5 ஜூன், 2013

புகழ் ஒரு குதிரை.. பதவி ஒரு குதிரை..- ஒரு சிற்பம்.. பல கோணம்..

ஒரே சிற்பம்தான். ஆனால் ஒரே படத்தில் அதன் அழகையும் அமைப்பையும் இரசித்து விட முடியாது. பல கோணங்களில், வாழ்வியல் வரிகளோடு பார்த்த பிறகு எந்த நாட்டில், எந்த ஊரில், எந்த இடத்தில் இருக்கிறது என எவரேனும் சொல்ல முடிகிறதா பார்க்கலாம்.

#1
புகழ் ஒரு குதிரை 
பதவி ஒரு குதிரை

 #2
அடக்கி அடைந்திடும் துடிப்புடன்
துரத்தியபடி மனிதர்


திங்கள், 3 ஜூன், 2013

மேகங்களும் அலைகளும் - தாகூர் கவிதை (2)


ம்மா, மேகத்தில் வாழுகிறவர்கள்
என்னை அழைத்துச் சொன்னார்கள்-
”கண்விழிக்கும் பொழுதிலிருந்து
நாள் முடியும் வரையிலும் விளையாடுவோம்.
பொன் எழில் வைகறையோடும்,
வெள்ளி நிலவோடும் விளையாடுவோம்.”
“உங்களோடு நான் எப்படி வந்து சேர்ந்திட?” எனக் கேட்டேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin