வாசகரைத் தெரிவு செய்தல்
முதலில், நான் அவளைப் பெறுவேன் அழகானவளாக,
என் கவிதை மேல் மிகக் கவனமாக நடந்து வர,
கழுத்தின் மேலான கூந்தலில்
குளித்ததால் ஆன ஈரம் இன்னும் இருக்க. அவள் அணிந்திருப்பாள்
மழை அங்கியை, பழையதான ஒன்றை, அழுக்கானதை
சுத்தம் செய்பவருக்குத் தர பணம் இல்லாது.
புத்தகக் கடையில், தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டு
என் கவிதைகளைப் புரட்டுவாள், பின் மீண்டும் அது இருந்த இடத்தில்
அலமாரித் தட்டில் வைப்பாள். தனக்குத் தானே சொல்லிக் கொள்வாள்,
“இதற்காகக் கொடுக்கும் பணத்தில், நான் என் மழை அங்கியை
சுத்தம் செய்திடலாம்.” அவள் செய்திடுவாள்.
*
மூலம்:
"Selecting a Reader"
by
Ted Kooser
**
டெட் கூஸர்:
அமெரிக்கக் கவிஞரான டெட் கூஸர் (Theodore J. Kooser) 1939_ஆம் ஆண்டு ஏம்ஸ் நகரில் பிறந்தவர். 2005_ஆம் ஆண்டு கவிதைக்கான புலிட்சர் பரிசை வென்றவர். 1979_ல் தொடங்கி 2005_ஆம் ஆண்டு வரையிலுமாகப் பல விருதுகளையும், கெளரவங்களையும் பெற்றவர். தனது உரையாடல் பாணியிலான கவிதைக்காக அறியப்பட்டவர்.
ஏம்ஸ் அரசுப் பள்ளியில் பயின்றவர். உயர்நிலைப் பள்ளியில் எழுத்தின் மீதான கூஸரின் ஆர்வத்தை வளர்த்ததில் ஆசிரியர் மேரி மேக்னலிக்கு பங்கு இருந்திருக்கிறது. அவரது வாழ்வைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுத ஊக்கம் அளித்திருக்கிறார். கூஸர் தனது பதின்ம வயதில் மூன்று காரணங்களுக்காகப் பிரபலமான கவிஞராக வேண்டுமென முடிவெடுத்திருக்கிறார்: புகழ், அமரத்துவம், போஹேமிய நாட்டவரின் வாழ்க்கை முறையைப் பதிவு செய்வது ஆகியன.
1963_ஆம் ஆண்டு லோவா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலக் கல்வியில் இளங்கலைப் பட்டமும், 1967_ஆம் ஆண்டு நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் 35 ஆண்டுகள் பணியாற்றி அறுபதாவது வயதில் வைஸ் ப்ரெஸிடெண்டாக உயர்ந்து ஓய்வு பெற்றார். ஒவ்வொரு நாளும் காலையில் ஒன்றரை மணி நேரம் எழுத்துக்காக ஒதுக்கி, ஓய்வு பெறுகையில் ஏழு புத்தகங்களை வெளியிட்டிருந்தார் கூஸர்.
*
படங்கள்: நன்றியுடன்.. இணையத்திலிருந்து..
*
கவிதையும், கவிஞர் பற்றிய அறிமுகமும் நன்று. லேசான சுய எள்ளலுடன் கூடிய கவிதை. வர்ணனைகள் அல்லது உவமைகள் ஜாஸ்தி இருக்கும் போல!
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅமெரிக்க கவிஞர் டெட் கூஸர் பற்றி தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குகவிதை நன்றாக இருக்கிறது.
சொல்வந்த்தில் இடம் பெற்றதற்கு வாழ்த்துகள்.
சொல்வனத்தில்
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குகுளித்து விட்டு, மதியம் ஓய்வாக நேரம் ஒதுக்கி வாசிப்பை விரும்புபவர்; புற அழகைப் பற்றிய விமர்சனம் குறித்து கவலை இல்லை; அக அழகை மட்டும் விரும்புவர்; இப்படிப் பட்ட ஒரு வாசகர் தனது எழுத்தைப் பகடி செய்ய விரும்பும் கவிஞர் தம் மேதைமை, மிக அழகு. நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குகவிஞர் மறைமுகமாகத் தன்னையே கிண்டலடித்துச் சொல்லியிருப்பதை ரசித்தேன். மழை அங்கி அழுக்காக இருந்தாலும் வந்து கவிஞரின் வரிகளை வாசித்துவிட்டுச் தனக்குள் சொல்லிக் கொள்ளும் அந்த ரசிகையின் வரிகளாக!!!
பதிலளிநீக்குகீதா
சொல்வனத்தில் வந்ததற்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகீதா
கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கீதா.
நீக்குஎன் கமெண்ட. காணோமே..
பதிலளிநீக்குSpam_லிருந்து மீட்டு எடுத்தேன். தகவலுக்கு நன்றி:).
நீக்கு