ஞாயிறு, 29 மே, 2022

அஞ்சாமை

 #1

"காத்திருக்கத் தகுதி வாய்ந்தவற்றிற்காக 
நீங்கள் காத்திருக்கவே வேண்டும்."
_ Craig Bruce


#2
"இயற்கையிடத்து இருக்கின்றது மானுடருக்கான அருமருந்து."
 _ Jess Starwood


#3
"வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வது என்பது 
மற்றவர்கள் பார்க்காததைப் பார்ப்பது."
 _ Mark Cuban


#4
"உங்கள் வலிமை 
உங்கள் அமைதியில்."


#5
"அனைத்திலும் நிறைந்திருங்கள். 
அனைத்திற்காகவும் நன்றியுடையவர்களாய் இருங்கள்."
_ Maya Angelou


#6
"உங்கள் அச்சத்தைக் காட்டிலும் 
உங்கள் நம்பிக்கை பெரிதாக இருக்கட்டும்."
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 137

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

9 கருத்துகள்:

  1. பூக்களின் படங்கள் அனைத்தும் மிக அழகு. ரசித்துப் பார்த்தேன்.

    கூடவே பொன்மொழிகளும் மிக அருமை. 4 வதும், கடைசிப் பொன்மொழியும் எனக்கு இன்றைக்கு மிகவும் தேவையாக இருக்கிறது. பிரார்த்தனைக்கு இறைவன் இதை என் கண்ணில் காட்டி பதில் சொல்வது போன்று இருக்கிறது. மிக்க நன்றி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. ஆம், நம் அனைவருக்குமே தேவையாக உள்ளன.

      நீக்கு
  2. அனைத்து மலர் படங்களும் மிக அருமை, அழகு.
    அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
    அச்சத்தை போக்கி நம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும். எனக்கு ஏற்ற பொன்மொழி. எப்போதும் இறைவனுக்கும் மற்ற அனைத்துக்கும் நாம் நன்றி சொல்லி கொண்டே இருக்க வேண்டும்.
    முருங்கைப்பூ அழகு.

    பதிலளிநீக்கு
  3. படங்களும், வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. பூக்களின் படங்களும் அதற்கான வரிகளும் சிறப்பு. மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. பூக்களும் பொன்மொழிகளும் நன்று.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin