ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

நான் பார்த்த பூவை.. நீ பார்க்கவில்லை..

 Flickr தளத்தில் பகிர்ந்து வரும் மலர் படங்களிலிருந்து ஒரு பத்தின் தொகுப்பு:

#1 ஒரு செடியில் இரு மலர்கள்..

#2 தங்க மழை

#3 இயற்கையின் வண்ணங்களும் இரசிக்கும் சூரியனும்..

#4 கோழிக் கொண்டை

சனி, 26 ஏப்ரல், 2014

தூறல் 17- நாட்டின் தலையெழுத்து; ஈஜிபுரா; AID பெங்களூரு; ITHI கண்காட்சி; கல்கி கேலரி

2014 மார்ச் 15,16 ஆகிய தினங்களில் பெங்களூர் தளம் அரங்கில் நடைபெற்ற  AID ஒளிப்படக் கண்காட்சி குறித்த எனது முந்தைய பகிர்வுகள் இங்கும்.. இங்கும். போட்டியில் முதல் பரிசை வென்ற படம் இதுதான்:

#1

சேரி வாழ் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைச் சூழலைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுத்தது யாராக இருக்குமென்று நினைக்கிறீர்கள்?

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

எழுத்தாளர் பாவண்ணன் பார்வையில்.. ‘இலைகள் பழுக்காத உலகம்’ - 'குழந்தைமையின் கவித்துவம்' திண்ணை இதழில்..

மண்ணுலக வாழ்வை நீத்தவர்கள் வாழும் உலகத்தை இலைகள் பழுக்காத உலகம் என மதிப்பிடுகிறது ராமலக்ஷ்மியின் கவிமனம். இன்னொருவகையில் கலைஞனின் அக உலகத்தையும் இலைகள் பழுக்காத உலகம் என்றே சொல்லலாம். எல்லாத் தருணங்களிலும் எண்ணங்களோடு வாழ அந்த உலகத்தில் மட்டுமே சாத்தியப்படுகிறது. குழந்தைமையின் துடிப்போடு அவற்றை அடுக்கி அடுக்கிக் கலைத்து  எல்லையற்ற ஊக்கத்தையும் உவகையையும் அடைவதுகூட சாத்தியமாகிறது. தன் எண்ணங்களாலும்  கற்பனைகளாலும் தான் கண்டடைந்த அனுபவங்களாலும்  தன் அக உலகத்தை அடர்த்திமிக்கதாக கட்டமைத்துக்கொண்டிருக்கிறார் ராமலக்‌ஷ்மி. அந்த உலகத்தின் ஈர மண்ணைக் குழைத்தெடுத்து அவர் வடித்துவைத்திருக்கும் சிற்பங்களை ’இலைகள் பழுக்காத உலகம்’ தொகுதி வழியாகப் பார்க்கவைத்திருக்கிறார். சிற்பங்களை வடிப்பதில் அவருக்குள்ள முனைப்பும் ஆர்வமும் பாராட்டுக்குரியவை. செய்நேர்த்தியோடு காணப்படும் பல சிற்பங்கள் அவருடைய சொல்லாற்றலுக்குச் சாட்சியாக உள்ளன.

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

முரளிதரன் அழகர் - கல்கி கேலரியில்..

கடந்த நாலைந்து ஆண்டுகளாக முரளிதரன் அழகரின் ஃப்ளிக்கர் பக்கத்தைத் தொடர்ந்து வருகிறேன். ஒளிப்படக் கலை, ஓவியக் கலை இரண்டிலும் அசத்தி வருபவர். இன்று வெளியாகியுள்ள கல்கி இதழின், கேலரி பக்கத்திற்காக இரு துறைகளிலும் தனது திறனை வளர்த்துக் கொண்ட விதத்தையும், அனுபவங்களையும் அழகாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்:

பொக்கிஷத்தைக் காப்பதுதான் வேலை!  

வியாழன், 17 ஏப்ரல், 2014

தன்னந்தனியே.., அன்னபெல் லீ - எட்கர் ஆலன் போ கவிதைகள் (1,2)

தன்னந்தனியே..

குழந்தைப் பிராயத்திலிருந்து
மற்றவர்களைப் போல் நான் இருந்ததில்லை;
மற்றவர்கள் பார்த்தது போல் பார்த்ததில்லை;
எல்லோரையும் போல் என் உணர்வுகளை
வெளிக் கொண்டு வர முடிந்ததில்லை;

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

‘தென்றல்’ அமெரிக்க மாத இதழில்.. எனது இரண்டு நூல்களின் அறிமுகம்..

வட அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தமிழ் மாதப் பத்திரிகை “தென்றல்”.


ஏப்ரல் 2014 இதழில், திருமதி.பவள சங்கரி எனது நூல்களான அடைமழை (சிறுகதைத் தொகுப்பு); இலைகள் பழுக்காத உலகம் (கவிதைத் தொகுப்பு) ஆகியவற்றுக்கு அளித்திருக்கும் விமர்சனங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.
 பக்கம் 18..

வியாழன், 10 ஏப்ரல், 2014

தமிழ்ப் பறவை

#1
நீர் வண்ண ஓவியங்களில் அசத்தி வரும் பரணிராஜன் சத்தியமூர்த்திக்கு சொந்த ஊர் மதுரைக்குப் பக்கத்திலிருக்கும் உசிலம்பட்டி. ஓவிய ஆர்வம் துளிர் விட்டது சினிமாவினாலும், சினிமா கட்-அவுட்டுகளினாலும்தான் என்றது சுவாரஸ்யம். அவர் வரைந்த ஓவியங்களை இரசித்தபடியே அவரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்:)!

#2

சிறுவயதில் உசிலம்பட்டியில் இருந்து மாதமொருமுறை மதுரை செல்லும் போது, பெரியார் பஸ்ஸ்டாண்ட் பக்கம், 40-50 அடியில் காணக் கிடைத்த சினிமா கட்டவுட்களே ஓவியனாகும் ஆசையை இவருக்குள் விதைத்திருக்கிறது. ஆனாலும் அதற்கான பயிற்சி என்பது பள்ளி ஓவியப் போட்டிகளில் கலந்து கொள்கிற மட்டிலேயே நின்று போயிருந்திருக்கிறது. பொறியியல் படித்து முடிக்கும்வரை அதற்கென அதிக நேரம் செலவழிக்க முடியாது போனாலும்  பத்திரிக்கைகளில் வரும் மாருதி, ம.செ., ஜெ.., ராமு, அரஸ், ஷ்யாம் ஆகியோரின் ஓவியங்களை உள்வாங்கிக் கொண்டே இருந்திருக்கிறது இவரது ஓவிய ஆர்வம்.

#3
படிப்பை முடித்து பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்த பின்புதான், ஓவியக் கலையின் கதவு இவருக்குத் திறந்திருக்கிறது. பெங்களூரின் குளுமை, மக்களின் கலையார்வம் மேலும் தன்னைத் தூண்டியது எனத் தெரிவிக்கும் பரணி எப்படி தன்னைச் செதுக்கிக் கொண்டார் என்பதை விவரிக்கிறார்:

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

“அப்பாவும் மீன் போலத் தோன்றுவார்!” - கல்கி சித்திரைச் சிறப்பிதழில்.. புதுகை, சென்னை, பெங்களூர்.. ஓவியர் மூவர் அறிமுகம்

கலையைக் கொண்டாடும் முயற்சியாக கல்கி இதழ் ‘கல்கி கேலரி’ பகுதியில் திறமை வாய்ந்த ஓவியர்களையும் புகைப்படக் கலைஞர்களையும் உலகுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. சித்திரைச் சிறப்பிதழாக மலர்ந்திருக்கும் இந்த வாரக் கல்கியில் பெங்களூர் சித்திரச் சந்தையில் நான் சந்தித்த மூன்று ஓவியர்கள் குறித்த அறிமுகம்:

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

அடை மழை - திருமதி செல்வி ஷங்கரின் கருத்துக் கண்ணோட்டம்


அன்பின் ராமலக்ஷ்மி ,

அறிவது நலனே விழைவதும் அஃதே !

நூல்களில் கவிதையை முதலில் படிக்கலாமே என்று படித்தேன். சுருக்கமாய் இருக்கிறதே - தெளிவாகவும் சிறியதாகவும் இருக்கிறதே என்று வேக வேகமாகப் படித்து முடித்தேன்.

அடுத்தது - சிறுகதை தானே - இதை எல்லாம் படிக்கின்ற ஆர்வம் எல்லாம் எப்பொழுதோ போய்விட்டதென்று நினைத்துக் கொண்டு சில நாட்கள் தொடாமலேயே இருந்தேன்.

நூலின் பின்பக்க அட்டைப்படத்தினைப் பார்க்கும் போதெல்லாம் நம்ம புது வண்டு - பிரியா மாதிரியே இருக்கே - அவள் தான் இந்தக் கதை எல்லாம் எழுத வேண்டுமென்று எதிர்பார்த்து ஏமாந்தேன். சரியென்று மனதைத் தேற்றிக் கொண்டு நிச்சயம் படிக்க வேண்டுமென முடிவெடுத்தேன்.

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

காரியத்தில் உறுதி வேண்டும்

1. விட்டுவிட வேண்டாம். கடினமாக இருப்பது ஆரம்பம்தான்.
Never Give up

2. நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் எவ்வளவு மாறி விட்டது என வியக்கிறோம். அவற்றால் நாம் எவ்வளவு மாறிப் போய்விட்டோம் என்பதைக் கவனிக்கத் தவறுகிறோம்.

3. நமது பலம் நமக்கே தெரிவதில்லை, பலசாலியாக இருந்தே ஆகவேண்டிய தருணம் வரும் வரையில்.

புதன், 2 ஏப்ரல், 2014

நாம் என்ன செய்ய முடியும்? - சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை (4)

இருக்கிறது ஒரு சாந்தம் மனிதத்தின் சிறப்பில்
சில புரிதல்கள், சில நேரங்களில் செயல்களில் துணிச்சல்
மொத்தத்தில் அது ஒரு ஆற்றல்
அதிகம் காணப்படாத ஒன்றாக உலகத்தில்.
ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஒரு பெரிய விலங்கினை ஒத்ததாக
எந்த ஒன்றாலும் எழுப்ப முடியாததாக.
தூண்டப்படுகையில் விஸ்வரூபமெடுக்கின்றன
முரட்டுத்தனமும், சுயநலமும்,
நேர்மையற்ற தீர்ப்புகளும், கொலைகளும்.

நாம் என்ன செய்ய முடியும், இந்த மனிதத்தை?

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

கூடவே பயணிக்கும் கதை! - நன்றி கல்கி!

6 ஏப்ரல் 2014 இதழில்..,

எழுத்தாளரும் பள்ளித் தலைமை ஆசிரியருமான திருமதி. சீத்தா வெங்கடேஷ், அடை மழை சிறுகதைத் தொகுப்பிற்கு அளித்திருக்கும் நூல் விமர்சனம்...

கூடவே பயணிக்கும் கதை!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin