ஞாயிறு, 31 டிசம்பர், 2023

2023 குறிப்பேடு - தூறல் 44

 2023 குறிப்பேட்டினைப் புரட்டிப் பார்க்கும் நேரம்:)!

தினமொரு படமெனத் தொடரும் எனது ஃப்ளிக்கர் பயணத்தில் 365 நாளும் என்பது எளிதல்ல என்பதை வருடாந்திர ஆல்பம் தொகுக்கத் தொடங்கியக் கடந்த இரு வருடங்கள் எனக்குப் புரிய வைத்தன.  கடந்த இரு வருடங்களிலும் எண்ணிக்கை 262 மற்றும் 251 ஆக  இருக்க, இவ்வருடத்தில் 300_யை தாண்ட வேண்டுமென எண்ணியிருந்தேன். ஆயினும் அதற்காகப் பிரத்தியேகமாக மெனக்கிடவில்லை. ஆனால் இன்று சரியாக எண்ணிக்கை 300-யைத் தொட்டிருப்பது இனிய ஆச்சரியம் :). 

இயற்கையின் ஆசிர்வாதத்தில் பறவைகள், பூக்கள் மற்றும் மனிதர்கள், குழந்தைகள், டேபிள் டாப் படங்கள் (கொலு மற்றும் கார்த்திகை தீப series அடங்கிய 2023 ஆல்பத்தின் இணைப்பு: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/albums/72177720305009769/ .

இந்த ஓராண்டில் மட்டும் எனது Flickr Photostream  பக்கப் பார்வைகள் 4,65,000 + என்பதுவும் தொடர்ந்து இயங்க உத்வேகத்தைத் தருகிறது. [சென்ற வருடப் புள்ளிவிவரம் இங்கே..


பொன்மொழிகளின் தமிழாக்கத்துடனான வாரந்திரப் படத் தொகுப்புகள் தவிர்த்து, அதிக எண்ணிக்கையில் பதிவுகள் இல்லாவிட்டாலும், பதிவுலகப் பொற்காலம் எப்பொழுதோ முடிந்து விட்டிருந்தாலும், 15 ஆண்டுகளைத் தாண்டிய ‘முத்துச்சரம்’ இந்த வருடத்தில் 10 லட்சம் பக்கப் பார்வைகளைத் தாண்டி (10,14,000 +) இன்னும் உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வகையிலும் மகிழ்ச்சியே.


எழுத்தைப் பொறுத்த மட்டில் சொல்வனம் இணைய இதழ், உதிரிகள் சிற்றிதழ் ஆகியவற்றில் 21 தமிழாக்கக் கவிதைகள் மற்றும் நவீன விருட்சம், புன்னகை சிற்றிதழ்கள், கீற்று, திண்ணை இணைய இதழ்களில் எனது கவிதைகள் வெளியாகின.

“முடிவுறுபவற்றைக் கொண்டாடுவோம் - அவை புதிய தொடங்கங்களுக்கு முன்னோடியாக இருப்பதால்.” 

இயன்றதைச் செய்து மன உற்சாகத்துடன் இருப்பதை இலக்காகக் கொண்டு 2014-குள் நுழைகிறேன்:).

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***

திங்கள், 25 டிசம்பர், 2023

வானம் எல்லையன்று

 #1

“தாங்கள் செய்யும் செயல் மேல் 
அர்ப்பணிப்பும் அதீத ஆர்வமும் இருக்குமானால், 
ஒவ்வொருவரும் தங்கள் சூழ்நிலைகளைத் தாண்டி 
மேலுழுந்து வர இயலும்.” 
_ Nelson Mandela.


#2
“மேகங்கள் உச்சியிலிருப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. 
எந்த சுமையையும் தம்மோடு எடுத்துச் செல்ல மறுப்பதாலேயே 
அவை மிக உயரத்தில் மிதக்கின்றன.” 
_ Jasleen Kaur Gumber


#3
“சிக்கிக் கொண்டதாக உணரும் தருணத்தில் 
வானத்தை நோக்குங்கள்.

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

செல்வத்துள் செல்வம்

  #1

“பலகீனமானவர்களால் எப்போதுமே மன்னிக்க இயலாது. 
மன்னிப்பு என்பது வல்லமை வாய்ந்தோரின் பண்பு.”
_ Mahatma Gandhi


#2
“அடிப்படை விதி: 
எவ்வளவுக்கு எவ்வளவு நன்றியுடன் இருக்கப் பழகுகிறீர்களோ
அவ்வளவுக்கு அவ்வளவு நன்றி தெரிவிக்க வேண்டியவை 
அதிகரித்தபடி இருக்கும்.
_ Norman Vincent Peale

#3
“மனநிறைவு ஒன்றே 
உண்மையான செல்வம்.”
 - Alfred Nobel

#4
“பணிவடக்கம் பலகீனமானவர்களது இயல்பன்று, 
தைரியமானவர்களின் இயல்பு.”
_ Walt Disney

#5
 “அதிகமாக உங்களை நேசிப்பீர்களேயானால், 
குறைவாக மற்றவர்களைப் பிரதிபலித்து, 
தனித்துவமானவராக உருவாகுவீர்கள்.”


#6
“மலர்கள் ஒருபோதும் எப்படி மலரப் போகிறோம் எனக் 
கவலை கொள்வதில்லை. 
அவை தம் இயல்பில் விரிந்து, ஒளியை நோக்கித் திரும்புவதே 
அவற்றை அழகாக்குகின்றன.” 
– Jim Carrey.

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 188

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

கார்த்திகை தீபங்கள்

 #1

தீபங்கள் ஏற்றிடும் 
திருக்கார்த்திகை மாதம்!

#2
வெல்லப் பொரி உருண்டை

#3
தீபம் ஜோதி பரப்பிரம்மம்

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

புதிய சவால்கள்

 #1

"ஒட்டு மொத்த வாழ்க்கையும் 
புதிய சவால்களை எதிர்கொள்வதிலேயே உள்ளது."

(செம்மீசைச் சின்னான்)

#2
"ஒவ்வொருவருக்கும் மாபெரும் பிரச்சனையாக இருப்பது 
அடுத்தவரது விவகாரங்களைப் பற்றிக் கவலைப்படுவது."

(குண்டுக் கரிச்சான்)

#3
“உங்கள் உண்மையான தகுதியை நீங்கள் அறிவீர்களானால்,

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin