செவ்வாய், 17 மே, 2016

கோடை தா(க்)கம் - கல்கி கேலரியில்..சூரியன் சுட்டெரித்தாலும், வியர்வை ஆறாக ஊற்றெடுத்தாலும் கோடையில் சும்மா இருப்பதில்லை புகைப்படக் கலைஞர்கள். சூரிய உதயம், அஸ்தமன வானம், லாண்ட்ஸ்கேப், இளங்காலை அல்லது பின் மாலை வெளிச்சத்தில் எடுக்க முடிகிற போர்ட்ரெயிட் படங்கள் இவற்றை எடுக்க உகந்த காலமென கோடைக்கான காத்திருப்புடனேதான் இருப்பார்கள். விடுமுறைப் பயணங்களும் பெரும்பாலும் கோடையிலேயே அமைந்து போகின்றன. எத்தனையோ விதப் படங்களை எடுக்கும் வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் அத்தனையையும் பின்னுக்குத் தள்ளி விட்டு கவனத்தை ஈர்க்கிறது தாங்க முடியாத வெப்பமும் தண்ணீருக்கான தவிப்பும்.  மனிதன் மட்டுமா? விலங்குகளும் பறவைகளும் கூட தாகத்துக்கு விதிவிலக்கல்ல. 

ஜாம்ஜெட்பூர் ஜூப்ளி பூங்கா மற்றும் மைசூர் ஜூ, பெங்களூர், தமிழகத்தில் திருச்செந்தூர், முக்கூடலில் கண்ட சில கோடைக் காட்சிகளையே நீங்கள் கல்கியில் பார்க்கிறீர்கள். 

நன்றி கல்கி!

கல்கியில் வெளியாகியுள்ள படங்கள் தனித் தனியாகவும், கூடவே சிலவும் இங்கே..! கோடைத் தாக்கம் குறித்தும் பார்ப்போம்.

#1


#2

ஞாயிறு, 1 மே, 2016

மே தினம் : “பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே..”

உண்ணும் உணவிலிருந்து பயணிக்கும் பாதை, அணியும் ஆடை என அனுபவிக்கும் அத்தனை பொருட்களுக்குப் பின்னாலும் எத்தனை பேரின் உழைப்பு உள்ளது! கடந்த ஒரு வருடத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் படமாக்கிய உழைப்பாளர்களின் படங்கள்:

டாடா நகர் இரயில் நிலையத்தில்...
#1

#2
#3

#4

கொல்கத்தாவில்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin