#1
"கவனச் சிதைவுகளைப் பட்டினி போடுங்கள்.
கவனக் குவிப்புக்கு உணவளியுங்கள்."
தேன் சிட்டு (Purple-rumped Sunbird)
#2
"காத்திருக்காதீர்கள்.
நீங்கள் நினைப்பதை விடவும்
வேகமாக செல்கிறது வாழ்க்கை."
வெண் கன்னக் குக்குறுவான் (White-cheeked Barbet)
#3
"ஒளி உங்கள் உள்ளத்தில் இருக்குமானால், வீட்டுக்கான வழியை நீங்கள் கண்டடைவீர்கள்."
தேன் சிட்டு (Purple-rumped Sunbird)
#4
"நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ
அதுவும் உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது."
இந்திய சாம்பல் இருவாச்சி ( Indian Grey Hornbill )
#5
"எந்தவொரு குறிப்பிடத்தக்க இலக்கையும் அடைய வேண்டுமெனில்,
உங்களது வசதி வட்டத்திலிருந்து நீங்கள் வெளியே வந்தாக வேண்டும்."
_ Hyrum W. Smith
தேன் சிட்டு (Purple-rumped Sunbird)
#6
"என்னிடத்தில் எந்த தனித் திறனும் இல்லை.
நான் கொண்டிருப்பதெல்லாம் பேரார்வம் மட்டுமே."
_ Albert Einstein.
காட்டுச் சிலம்பன் - Jungle Babbler
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 161
பறவை பார்ப்போம்.. - பாகம்: 96
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்,
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***