ஞாயிறு, 30 ஜூலை, 2017

தூறல்: 31 - ஒரு பாராட்டு; யாஷிகா டி; ஆல்பம்

ணைய உலகில் நாம் பகிரும் எதற்கும் பாராட்டோ, விமர்சனமோ எதுவாயினும் உடனுக்குடன் கருத்து கிடைத்து விடுகிறது. சமூக வலைத் தளங்களில் குறைந்தபட்ச அங்கீகாரமாக ஒரு விருப்பக் குறியேனும். ஆனால் அன்றைய நாட்களில் அப்படி அல்ல. நம் படைப்பை வாசித்து அக்கறையுடன் அது குறித்து ஆசிரியருக்கு ஒருவர் கடிதம் எழுத, அது பிரசுரமாகும் போதுதான் நமக்குத் தெரியவரும். அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதிதான். அப்படி இருக்கையில் ஒரு சிறந்த எழுத்தாளரிடமிருந்து கிடைத்த பாராட்டை ஒரு பொக்கிஷமாக இங்கே சேமித்துக் கொள்கிறேன். இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்....
1990_ஆம் ஆண்டு நண்பர் வட்டம் இலக்கிய இதழில் நான் எழுதியிருந்த கதை குறித்து அதற்கு அடுத்த இதழில் 'எழுத்தாளர் வல்லிக்கண்ணன் - goo.gl/o41MBh',  தனது கடிதத்தில்:

வியாழன், 27 ஜூலை, 2017

வெண்புருவ வாலாட்டி ( white-browed wagtail ) - பறவை பார்ப்போம் (பாகம் 15)


ஆங்கிலப் பெயர்: white-browed wagtail
நம் நாட்டில் ஏழுவகையான வாலாட்டிகள் காணப்படுகின்றன. அவற்றுள்
வெண்புருவ வாலாட்டி (white-browed wagtail) அல்லது வரிவாலாட்டிக் குருவி என்பது இந்தியாவின் ஒரே ஒரு, இடம் பெயரா, வாலாட்டிப் பறவை இனமாகும். இதன் உயிரியல் பெயர்

புதன், 19 ஜூலை, 2017

என்னால் முடியும்! - மஹாத்ரிய ர பொன்மொழிகள் 11

#1
“நீங்கள் விரும்புவது கிடைப்பதில்லை. 
எதற்கு நீங்கள் தகுதியானவரோ அதுவே கிடைக்கிறது.”


#2
“நம் முன்னோர்கள் கற்றுத் தந்ததை விட்டொழித்தால், 
நம்முடையன எதுவுமே மிஞ்சாது"

#3
“எந்த ஒரு ஈர்ப்புக்கும் ஒரு கவனச் சிதறலும் தேவையாக இருக்கிறது. 
சிறு இடைவேளைகள் இல்லாது போயின் நாம் உடைந்து போவோம்.”

#4
“ஒவ்வொருவரும் ஒவ்வொன்றுக்கும் ஒரு விளக்கம் வைத்திருப்பதோடு, தங்கள் சொல்லே இறுதியானதாக இருக்க விரும்புகிறார்கள்.” 

செவ்வாய், 18 ஜூலை, 2017

தூறல்: 30 - அஞ்சலி



சிறந்த ஒளிப்படக் கலைஞரும், இயற்கை ஆர்வலரும், பறவை நேசரும், எழுத்தாளருமான திரு கல்பட்டு நடராஜன் நரசிம்மன் அவர்கள் 11 ஜூலை 2017 அன்று தனது 88 ஆவது வயதில் இருதய அறுவை சிகிச்சையின் போது இறைவனடி சேர்ந்தார்.  இவர் அரசுப் பணிகளில் பல பதவிகள் வகித்து ஓய்வு பெற்றவர். பிறந்த ஊரை தன் பெயரோடு இணைத்துக்கொண்டவர்.

#
ஒளிப்பட மேதை
புகைப்படக் கலையில், 45 வருடங்களுக்கு முன்னர் இருந்த “கோடக் பேபி ப்ரௌனி’ கேமராவை உபயோகித்த அனுபவங்கள் பல கொண்டவர். ராயல் ஃபோட்டோக்ராஃபிக் சொஸைட்டி அமைப்பு இவரது புகைப்படத் திறனுக்காக அளித்த பட்டச் சான்றிதழ், அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரி கையால் குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்பட்டிருக்கிறது. இவரது 13 படங்கள் தேசிய அளவிலான கண்காட்சிகளில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றிருக்கின்றன. திருச்சியில் வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் தொடங்கி அதற்காக உழைத்தும் இருக்கிறார்.

அவரது புகைப்பட அனுபவங்களை PIT - தமிழில் புகைப்படக்கலை தளத்தில் “Legend Talks" எனும் கெளரவத்துடன் தொடராக, பாடப் பதிவுகளாக வெளி வந்தன. அவற்றை வாசிக்க கடைசிப் பாகமான இந்தப் பதிவுக்குச் சென்று அங்கிருந்தே முந்தைய பதிவுகளுக்குச் செல்லலாம்:

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்” என்ற தலைப்பின் கீழ் அவர் எழுதிய பல பதிவுகள் உட்பட அனைத்தையும் வாசிக்க அவரது தளத்திற்கு செல்லலாம்:

 இயற்கை மற்றும் பறவைகள் குறித்து இவர் எழுதியுள்ள தகவல்கள் யாவும் அனுபவப் பூர்வமானவை. அதை சுவாரஸ்யமாக அவர் சொல்லும் பாணி தனித்துவமானது!


சென்னையிலிருந்து பெங்களூரில் அப்போது கோரமங்களாவில் இருந்த அவரது மகளின் இல்லத்துக்கு வருகை தந்த சமயங்களில் பதிவுலக நண்பர்கள் ஷைலஜா நாராயணன், (ஜீவ்ஸ்) ஐயப்பன் கிருஷ்ணன், அண்ணா கண்ணன், பிரஸாத் வேணுகோபால் ஆகியோருடன் 3 முறைகள் சந்தித்திருக்கிறேன்.  இவரை நேர்காணல் செய்து எழுதிய கட்டுரை தினகரன் வசந்தம் வார இதழில் 2012 ஆம் ஆண்டு, 19 ஆகஸ்ட் உலக ஒளிப்பட தினத்தன்று வெளியானது:

                       http://tamilamudam.blogspot.in/2012/08/blog-post_19.html 

இதைத் தொடர்ந்து நேர்காணலை வாசித்த தூர்தர்ஷன் இயக்குநர் திரு ஸ்ரீனிவாசன் அவரைப் பொதிகை தொலைக்காட்சியின் ‘பொன்னான முதுமை’ நிகழ்ச்சிக்காகப் பேட்டி காணமுடிவு செய்து , பத்திரிகையின் மூலமாக என்னைத் தொடர்பு கொண்டு திரு. நடராஜன் அவர்களின் அலைபேசி எண்களை வாங்கி பேட்டி எடுக்கப்பட்டு அது இரண்டு பாகங்களாக பொதிகை தொலைக்காட்சியில் அதே வருடம் டிசம்பர் மாதத்தில் வெளியாயின. அது குறித்த எனது பகிர்வு இங்கே:

பொன்னான முதுமை’ என்பதற்கான ஒரு இலக்கணமாகவே வாழ்ந்தவர் திரு கல்பட்டார். கடந்த மாதம் வரைக்கும் சுறுசுறுப்பாக மின் குழுமங்களிலும், இணையப் பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வந்தார். அவரது நண்பர் திரு. டி.என்.ஏ. பெருமாள் குறித்த கட்டுரை மார்ச்-ஏப்ரல் “காடு” இதழில் வெளியாயிருக்கும் தகவலை சில வாரங்களுக்கு முன் நான் அவருக்குச் சொன்னதைத் தொடர்ந்து, மகிழ்ச்சியுடன் மடல் செய்ததோடு அலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசினார். தற்போது நான் பகிர்ந்து வரும் பறவைகள் குறித்த பதிவுகளைப் பாராட்டினார். அவரது பதிவுகளும் எனக்கு அவற்றை அடையாளம் காண உதவியாக இருப்பதைக் குறிப்பிட்டேன். வீட்டுக்கு வரும் பறவைகள் என்னென்ன என்பதை விசாரித்தார்.   அவற்றை நான் பட்டியலிட்ட போது Red wattled lapwing (ஆள்காட்டிப் பறவை) வருமா? அது கூவும் போது எப்படி இருக்கும் தெரியுமா? “டிட் யு டு இட்? Did you do it? என்றே கூவும்” என அதே போல உற்சாகமாகக் குரல் கொடுத்துக் காண்பித்தார். அந்த வயதிற்கு அத்தனை சக்தியோடும், சுறுசுறுப்பாகவும், நிறைந்த நினைவாற்றலோடும் இருக்கும் அவரைப் பாராட்ட வார்த்தைகள் இருக்கவில்லை. வணங்கினேன். (ஆச்சரியமாக, அடுத்த வாரத்தில் அந்தப் பறவையை தோட்டத்தில் கண்டேன். படமெடுக்கும் முன்னர் கிடுகிடுவென நடைபோட்டு எம்பிப் பறந்து விட்டது). மங்களூரில் மகள் வீட்டில் இருப்பதாகச் சொன்னவர் அடுத்த இரு தினங்களில் மகளுக்கு பெங்களூருக்கே மாற்றலாகி விட்டதென்றும், வந்ததும் தெரிவிப்பதாகவும், நண்பர்கள் யாவரும் சந்திக்கலாம் என்றும் சொல்லியிருந்தார். ஆனால் அவர் மறைந்த செய்தியே கிடைத்தது :( .

திருமதி. சாந்தா நடராஜன் அவர்களோடு இன்று பேசினேன். பெங்களூர் வந்த சில நாட்களில் இதய வலி அதிகமாகவும் இதயத்தில் செயற்கை வால்வு பொருத்த அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடானதாகவும், மிகத் தைரியமாக இருந்தார் என்றும், எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனளிக்காது போயிற்று என்றும் வருத்தினார். அவருக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கிடைக்கப் பிரார்த்தனைகள். திரு கல்பட்டு நடராஜன் அவர்களுக்கு அஞ்சலிகள்! அவரது படங்களும் அனுபவங்களும் வரும் சந்ததிகளுக்குப் பாடமாகும். அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

*****
 தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (11):

ன்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஃப்ளிக்கர் தளத்தில் படங்கள் பதிய ஆரம்பித்த புதிதில், பெயர் தெரியாத பறவைகளை “Cute Bird" "Little Bird" என்றெல்லாம் பதிந்து வந்திருக்கிறேன். அது போலவே பூக்களையும். திரு. கல்பட்டு நடராஜன் அவர்களை முதன் முறை நான் சந்திக்கச் சென்ற போது, நான் போகும் முன்னரே என் ஃப்ளிக்கர் பக்கம் முழுவதையும் பார்த்து விட்டு கருத்து சொல்லத் தயாராகக் காத்திருந்தார். முதலில் பாராட்டுகளைத் தெரிவித்து விட்டு, பின்னர் “இது போலப் பொத்தாம் பொதுவாகப் பூக்களையும், பறவைகளைக் குறிப்பிடக் கூடாது. அவற்றின் பெயர் என்ன, முடிந்தால் அவற்றைப் பற்றிய தகவல்களையும் சேகரித்துக் கூடவே பதிய வேண்டும்” என அன்போடு வலியுறுத்தினார். அப்போதிலிருந்தே கூடுமானவரை பூக்களின் பறவைகளின் பெயர்களை சரியாக அறிந்து பதிந்து வந்தேன். பின்னர் அதுவே “தெரிஞ்சுக்கலாம் வாங்க” எனும் பகுப்பின் கீழ் விரிவான தனிப்பதிவுகளாக மாறின. இன்று தினமலரின் மாணவர் பதிப்பான பட்டம் இதழிலும் வெளியாகி வருகின்றன. ஆர்வத்தை சரியான பாதையில் செலுத்த ஆலோசனை வழங்கிய அவருக்கு என் நன்றி.

 அந்த வரிசையில் முத்துச்சரத்தில் முன்னர் நான் பகிர்ந்த இரட்டைவால் குருவி பற்றி, 22 ஜூன் 2017 தினமலர் பட்டத்தில் வெளியான எனது பதினோராவது கட்டுரை:



நன்றி தினமலர் பட்டம்!

****
படத்துளிகள்:

இந்த தூறலின் படத்துளிகளாக திரு. கல்பட்டு நடராஜன் அவர்கள் எடுத்த கருப்பு வெள்ளைப் படங்கள் சில, உங்கள் பார்வைக்கு:

#
Did you do it? ஆள்காட்டிப் பறவை

#
பூநாரை பஞ்சுப் பொதிபோன்ற குஞ்சுகளுடன்..

#
தினகரன் வசந்தம் பேட்டியில் குறிப்பிட்டிருக்கும்
எட்டுவார முயற்சியில் படம் எடுத்த ஆந்தை!

கிராமப்புறக் காட்சிகள்
#

#

#
*****

சனி, 15 ஜூலை, 2017

எந்த மனிதனாலும் அடைக்க முடியாத கதவுகள்

#1
வாழ்க்கை கடினமானது.
ஏன், அதை எதிர்கொள்ளும் நீங்களும் கூடதான்!

#2
"புன்னகை புரியுங்கள், ஏனெனில் அது எளிதானது.. இனிதானது.."


#3
“இடர்கள் கொண்டதே வாழ்க்கை - அதனால் என்ன?”
_Malcolm Bradbury

ஞாயிறு, 2 ஜூலை, 2017

புதுப் புது வாய்ப்புகள்

என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 18)

#1
“விட்டு விடும் எண்ணம் தோன்றுகையில்தான்
இன்னும் கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டும்..!”

#2
‘உங்கள் இலக்கை விட்டுத் திசை திருப்பச் செய்யும் 
எவற்றின் மீதும் கவனத்தை இழக்காதீர்கள்!


#3
‘சின்ன விஷயங்களாக இருக்கலாம். 
ஆனால் அவையே அதி முக்கியமானவையாகவும் இருக்கின்றன.’

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin