ஞாயிறு, 29 மார்ச், 2020

ஆன்ம ஒளி

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (71) 
#1
"நம்பிக்கை என்பது 
அத்தனை இருளிலும் 
வெளிச்சத்தைப் பார்க்க முடிவது."
_ Desmond Tutu


#2
மெதுவாக.. 
ஆனால்
நிச்சயமாக..

செவ்வாய், 24 மார்ச், 2020

கதை சொல்லும் கற்சிற்பங்கள் - லெபக்ஷி, ஆந்திரா (4)

#1
வ்வொரு கல்லும் தனக்குள் ஒரு கதையை வைத்திருக்கும் ஆச்சரியங்கள் கொண்ட ஸ்தலம் லெபக்ஷி வீரபத்திரர் கோயில்.

நாட்டிய மண்டபத்தின் முதல் சுற்றிலுள்ள 12 தூண்களில் பிரம்மா, சிவன், பார்வதி, சூரியர் , சந்திரர், நடராஜர், தத்தாத்ரேயா(பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் உள்ளடக்கிய கடவுள்), சண்டேஸ்வரர், ரித்தேஷ்வர், வராகர், நந்தி மற்றும் நாட்டியத் தாரகை ரம்பை ஆகியோரின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

#2

ஞாயிறு, 15 மார்ச், 2020

செய்வன செய்

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (70) 
பறவை பார்ப்போம் - பாகம் (49)
#1
"வேலை செய்வதில் நமக்குக் கிடைக்கும் திருப்தியைப் போல் சிறந்தது  
வேறெதுவும் இல்லை."

#2
"இருபறவைகள் 
ஒரே பாடலை 
ஒருபோதும் பாடியதில்லை."

#3
"நான் சரியாக நடக்கும் போது 
எவரும் அதை நினைவில் வைப்பதில்லை. 

செவ்வாய், 10 மார்ச், 2020

பிரமாண்ட நந்தி.. உலகின் 2_வது பெரிய ஒற்றைக்கல் சிற்பம்.. - லெபக்ஷி, ஆந்திரா (3)

லெபக்ஷியில், வீரபத்திரர் கோயிலை அடுத்து, முக்கியமான மற்றுமோர் ஈர்ப்பு ஒரேக் கருங்கல்லில் செதுக்கப்பட்ட நந்தி.

#1


20 அடி உயரமும் 32 அடி நீளமும் கொண்டது. இந்த பிரமாண்டமான அளவுக்காக நுணுக்கமான வேலைப்பாடுகளில் எந்த சமரசம் செய்து கொள்ளாதது சிறப்பு.

#2

இந்த பிரமாண்டமான நந்தி, வீரபத்திரர் கோயிலுக்குச் சென்றடைவதற்கு அரைக் கிலோ மீட்டர் முன்னதாகவே சாலைக்கு வலப்பக்கத்திலிருக்கும் அழகிய பூங்காவின் நடுவே கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. 

#3

ஞாயிறு, 8 மார்ச், 2020

பெண்மொழி - உடைபடும் மெளனங்கள் - மகளிர் தின வாழ்த்துகள்!


த்திராஜ் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் இரா பிரேமா அவர்கள் தொகுத்துள்ள இந்நூலில் கடந்த அரைநூற்றாண்டில் பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட பெண்களின் வலியைப் பேசும் 30 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நான் எழுதிய ‘அவளும் நோக்கினாள்’ கதையும் இடம் பெற்றுள்ளது:

‘பாரதி புத்தகாலயம்’ வெளியீடான இந்நூலின் அணிந்துரையிலிருந்து முனைவர் இரா பிரேமாவின் வரிகள் சிலவற்றையும் மகளிர் தினமான இன்று இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

*ந்தத் தொகுதியில் உள்ள கதைகளை எழுதிய ஒவ்வொரு எழுத்தாளர்களுமே பெண்களின் வாழ்க்கையின் மீதும், சமூக இருத்தலின் மீதும், ஆழ்ந்த சிந்தனையும், கவலையும் பொறுப்புணர்வும் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இந்தக் கதைகளை ஒட்டு மொத்தமாக அலசி ஆராய்ந்த பொழுது,

ஞாயிறு, 1 மார்ச், 2020

உரத்துச் சொல்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (69) 

#1
“இது நான், 
இதோ இங்கே இருக்கிறேன்
நீங்கள் நினைத்தும் பார்த்திராதபடி
முன்னை விடவும் வலிமையாக..!”


#2
“உங்கள் வசதி வளையத்தை விட்டு 
வெளியே வரும்போதுதான் 
வாழ்க்கை ஆரம்பமாகிறது.”

#3
“சவால்கள் வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்குகின்றன. 
அவற்றை வெல்வது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin