#1
கண்மூடித் திறக்கும் முன் மலருக்கு மலர் தாவி தேனை உறிஞ்சி விட்டு மின்னல் வேகத்தில் பறந்து விடும் சின்னஞ்சிறு பறவை தேன் சிட்டு. 10 செ.மீட்டருக்கும் குறைவான அளவிலானது. கூரான வளைந்த அலகைக் கொண்டது. முருங்கைப் பூக்களிலும் தேன் உண்ணுமாயினும் செம்பருத்தியே இதற்கு மிக இஷ்டம். தோட்டத்தில் அடுத்தடுத்து நான்கு வகை செம்பருத்தி மரங்கள் உள்ளன. சிகப்பு, இளஞ்சிகப்பு, அடுக்குச் செம்பருத்தி மற்றும் வெள்ளை. வெள்ளை செம்பருத்தி மரத்தில் ஒரே நேரத்தில் பத்து முதல் பதினைந்து வரை பூக்கள் பூக்கும். காற்றில்லாத வேளையிலும் மலர்கள் மேலும் கீழுமாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்தால், ‘இவன் வந்து விட்டான்’ என்று பொருள் :)!
#2
‘கொஞ்சம் இருப்பா.. மின்னல்..’ எனக் கெஞ்சிய படியே கேமராவில் இவனை சிறை பிடிக்கப் பலமுறை முயன்று, பலனளிக்காமலே போயிருக்கிறது. ‘சிட்டாகப் பறந்தான்.. பறந்தாள்..’ எனும் உவமைகள் எத்தனை சரியானது எனப் புரிந்தது.
#2
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/32950185392/ |
சென்ற வாரம் ஓசைப் படாமல் கதவருகே காத்திருந்து காட்சிப் படுத்திய, ஓரளவுக்கு வெற்றி கிட்டிய படங்கள்.. இங்கே..