ஞாயிறு, 8 மே, 2022

இலக்கு

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 136
பறவை பார்ப்போம்.. - பாகம் 84
#1
“நம்பிக்கையுடன் இருங்கள், ஆனால் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். 
முன்னேற்றத் திசையைப் பார்த்திருங்கள், ஆனால் காத்திருக்காதீர்கள்.”


#2
 “வையத்துள் உங்களுக்கான இடத்தை நீங்கள் கண்டடைவதில்லை, 
அதனைச் செதுக்குகின்றீர்கள்!”


#3
“பெரும்பாலான உங்கள் கேள்விகளுக்கு உள்ளம் பதில் அளிக்கும், 
பதிலுக்காக அமைதியாக நீங்கள் 
காத்திருக்கக் கற்றுக் கொள்வீர்களேயானால்!
_  William S. Burroughs

#4
“இலக்கை அடைய 
இலக்கை விடவும் உயரத்தில் குறி வைக்கிறோம்.”
_ Ralph Waldo Emerson
#5
“உங்களை நம்புங்கள். 
உங்களால் என்ன முடியும் என நினைக்கிறீர்களோ 
அதை விடவும் அதிகமாகவே முடியும்.”
_ Dr. Benjamin


#6
“உங்களது வலுவான குற்றங்கறை விளக்கத்தை விடவும் 
வலிமையானவராக இருந்திடுங்கள்!”

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

12 கருத்துகள்:

  1. அழகான பறவைகள். அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனை அருமை.கிளி அழகு.

    பதிலளிநீக்கு
  2. பொன்மொழிகள் மற்றும் படங்கள் அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு
  3. வாசகத்துக்கேற்ப முதல் படம் மிகச் சரியாக பொருந்துகிறது. அருமை. நான்காவது படமும் அப்படியே.


    ஆறாவது வாக்கியம்... குற்றங்குறை? குற்றங்களை?


    படங்களும் வாசகங்களும் வழக்கம்போலவே அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம்.

      குற்றங்கறை என்பது ஆங்கிலத்தில் excuse என்பதற்கான தமிழ்ப் பதம். அதிகம் பயன்பாட்டில் இல்லாத சொல் ஆகையால் தங்களுக்குப் புதிதாகத் தெரிகிறது.

      நீக்கு
  4. ராமலஷ்மி நம்மள ரொம்ப அழகா எடுப்பாங்கன்னு பறவைகள் அழகா போல் கூடக் கொடுக்குதே!!! ! ஹாஹாஹாஹாஹா.....சூப்பர்! முதல் ஊதா தேன்சிட்டு தேவதை என்ன கலர்!!!!! ஹையோ பட்டு போன்று. இயற்கையின் படைப்பு. இதே போன்று கொஞ்சம் வித்தியாசமாக ஆசிய தேவதைப் பறவை கலர் இதே போல ஆனால் வித்தியாமா இருக்கும்.

    வாசகங்களும் அருமை

    படங்களை மிகவும் ரசித்தேன்

    கீதா

    அத்தனையும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், வண்ணம் மட்டும் Asian fairy- blue bird_யை ஒத்திருக்கிறது:)! வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  5. ரசனையான படங்கள், உரிய கவிதைகளுடன்.

    பதிலளிநீக்கு
  6. படங்களும் வாசகங்களும் அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin