சனி, 29 ஏப்ரல், 2017

அண்டிப் பிழைக்கும் ஆசியக் குயில்கள் - தெரிஞ்சுக்கலாம் வாங்க..

#1
ஆண் குயில்
ஆசியக் குயில் - Asian Koel 
உயிரியல் பெயர் - Eudynamys scolopacea

இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமாகப் பார்த்தால் மூன்று வகைக் குயில்கள் உள்ளன. அவற்றுள் ஆசியக் குயில் வகை பெரும்பாலும் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றன.

#2
பெண் குயில்

குயில் காகத்தைவிட சற்று சிறியதாக ஆனால், உருண்டு திரண்டு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வால் நீண்டிருக்கும். 

குயில் மரத்தில் மட்டுமே வாழும் பறவை, தரையில் காணப்படாது. சுமார் 36-46 செ.மீ அளவு வரை இருக்கும். குயிலுக்கு ‘காளகண்டம்’ என்ற பெயரும் உண்டு.

ஆண் குயில் பளபளப்பான கருமை நிறமுடையது; அலகு மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் கண்கள் இரத்தச்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

#3

பெண் குயில் பழுப்பு அல்லது சாம்பல் நிற உடலுடன், மேலே முத்து முத்தாக வெண் புள்ளிகள் நிறைந்து  காணப்படும்.

#4
கிளிகள் போன்று கூட்டமாக அல்லாமல் குயில்கள் தனியாகப் பறந்து செல்லும். ..

புதன், 26 ஏப்ரல், 2017

கிருஷ்ணராஜபுர ஏரியும்.. பெங்களூர் நீர் நிலைகளும்..

#1
40 ஏக்கர் பரப்பளவிலான வெங்கையா அல்லது வெங்கைநகரே ஏரி, பெங்களூரின் (Old Madras Road) பழைய சென்னை சாலையில் உள்ளது. சில வருடங்களுக்கு முன் வரையிலும் இது மோசமான நிலைமையில் இருந்தது. ஏரி முழுவதும் தீங்கு விளைவிக்கும் நீர் பதுமராகம் மற்றும் களைகளால் நிரம்பியிருந்திருக்கிறது. மேலும் மோசமாகும் முன் ஏதேனும் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டிய கட்டத்தில், பெங்களூர் மாநகராட்சி 15 வருடங்களுக்குப் பராமரிக்குமாறு ஏரியை Lake Development Authority (LDA) - ஏரி வளர்ச்சி அதிகாரக்குழுவிடம் ஒப்படைத்தது. ஏரியை ஓரளவுக்கு சீரமைத்த LDA,  “ஃபேன்டஸி லகூன்” என்ற பெயரில் இயங்கும் தீம் பார்க் நிர்வாகத்திடம் மாதாந்திர வாடகைத் திட்டத்தில், ஒப்படைத்து விட்டது.

#2

ஸ்கூட்டர் படகு, பெடல் படகு, வேகப் படகு என விதம் விதமான படகுச் சவாரிக்கு பிரபலமாகி விட்டது. சிறுவர் பூங்கா, நடை மற்றும் ஓட்டப் பயிற்சிக்கான பாதைகள், ஆங்காங்கே இளைப்பாற இருக்கைகள், நீருக்கு நடுவே படகில் மட்டுமே செல்ல முடிகிற செயற்கைத் தீவுப் பூங்கா, சிறு உணவகங்கள் என நுழைவுக்கு, கேமராவுக்கு, பூங்கா விளையாட்டுகளுக்கு, படகுச் சவாரிக்கு எனத் தனித்தனியாக கட்டணம் வசூலித்து இலாபம் பார்க்கும் ஃபேண்டஸி லகூன் ஏரியையும் பூங்காங்களையும் சரிவரப் பராமரிக்கிறதா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி.

#3

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

எளிய மனிதர்களும்.. எழுதப்படாத கதைகளும்..

#1
‘எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ..
அதுவரை நாமும் சென்றிடுவோம்..’
@ டாடா நகர்
#2
‘ரெண்டு பத்து ரூவா.. நாலு பதினஞ்சே ரூவா..’
@ நெல்லை

#3
சலவை
# முக்கூடல்

#4
நாளைய பாரதம்

புதன், 19 ஏப்ரல், 2017

இரட்டைவால் குருவி (Black Drongo)

#1

சிறு பாடும் பறவையான இரட்டைவால் குருவி அல்லது கரிக்குருவியானது, கிளை அல்லது கொம்பினைப் பற்றிக் கொண்டு அமர்வதற்கேற்ற கால்களையுடைய passerine பறவையினஞ் சார்ந்தது. சிட்டுக்குருவியை விடச் சற்றே பெரிதான இப்பறவை கரிச்சான், காரி, கருவாட்டு வாலி என்றும் அழைக்கப்படும். ஆங்கிலத்தில் Black Drongo எனப்படும். இதன் உயிரியல் பெயர் 'Dicrurus macrocercus'.

திவ்யப் பிரபந்தங்களில் வழங்கப்படும் ஆனைச்சாத்தன் என்ற பெயரும் இப்பறவையைக் குறிப்பதே என்கிறார்கள்.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

இவனும் அவனும் - சிறுகதைத் தொகுப்பு - ஒரு பார்வை

னிதர்களை, அவர்களது பல்வேறு குணாதிசயங்களை, மேன்மையான கீழ்மையான எண்ணங்ளை, புரிந்து கொள்ள முடியாத  மனச் சிக்கல்களை, கனவுகள் - நம்பிக்கைகள் - ஏமாற்றங்களை, சமூக அவலங்களை தீர்க்கமாகச் சொல்லிச் செல்கிறார் தன் எழுத்தெங்கிலும் கதாசிரியர் திரு. ஹேமலதா பாலசுப்பிரமணியம். 
1950ஆம் ஆண்டு முதல் 1980 வரையிலுமாக பல பத்திரிகைகளில் வெளியானவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 கதைகளின் தொகுப்பே “இவனும் அவனும்”.

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

ஹேமலம்ப சம்வத்சரம்

இன்று தொடங்குகிறது 'ஹேவிளம்பி' (அ)  'ஹேமலம்ப சம்வத்சரம்'.

#1

சம்வத்சரம் என்றால் ஆண்டு, வருடம் என்று அர்த்தம்.

‘ஹேம என்றால் தங்கம்..லம்ப என்றால் லட்சுமி. இரண்டையும் சேர்த்து சொல்லிப் பார்க்கும்போது இந்த வருடப் பெயரின் அர்த்தம் விளங்கும்.
எல்லா வகையிலும் 'செழிப்பான' ஆண்டாக இருக்கும்’ என்கிறார்கள்.

#2

அகஸ்தியர் பரம்பரையில் வந்த சித்தர்களால் இந்த வருடம் 'ஹேவிளம்பி' வருடம் என்றும் அழைக்கப்படுகிறது.

இறையருளால் வெற்றி விநாயகரின் திருவருளால்
 எல்லோருக்கும் இனிதாகட்டும் ‘ஹேவிளம்பி’!

#3
கணேஷ சரணம் சரணம் கணேஷ

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

வண்ணக் கனவுகள்

#1
‘திரும்பும் வழிகள் அடைபட்டுப் போகையில், உங்கள் உள்ளுணர்வு உங்களை முன்னடத்திச் செல்லும்.’
#2
பெருமைகளைக் கடந்து நிற்பது நல்ல விஷயம், ஆனால் அப்படி கடப்பதற்குப் பெருமைப்படக் கூடிய விஷயம் இருந்தாக வேண்டும்.
- Georges Bernanos

#3
‘உங்கள் வாழ்க்கையைக் கருப்பு வெள்ளையில் காண்பது போல உணருகிறீர்களா?

புதன், 5 ஏப்ரல், 2017

தூறல்: 29 - ஆட்டிஸ தினம்; சூழல் மாசு; வல்லமை; ஆல்பம்

ப்ரல் 2, உலக ஆட்டிஸ விழிப்புணர்வு தினம். மாதம் முழுவதுமே அனுசரிக்கப்படுகிறது. பத்திரிகைகள், செய்தி ஊடகங்கள், தன்னார்வலர்கள், பெற்றோர் மற்றும் பயிற்சி மையங்கள் என அனைத்துத் தரப்பினரும் விழிப்புணர்வுக்கான முயற்சிகளைப் பரவலாக முன்னெடுத்துச் செல்கின்றனர். இது குறித்த சில பகிர்வுகள் இங்கே:

ஆட்டிஸ குழந்தைகளுக்கு இலவசப் பயிற்சிகள் வழங்குவதோடு அவர்களின் பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அரவணைக்கும் அரசு நிறுவனமான நிப்மெட் குறித்து விரிவாக இந்த இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்:
#


ஆட்டிஸ குழந்தைகளின் பெற்றோர் மட்டுமின்று சமூகத்தின் அங்கத்தினராக அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள் இங்கே:

#



ஏப்ரல் 2,  ‘தி இந்து’ செய்தியாளர் பக்கத்தில் திரு யெஸ். பாலபாரதியின் கட்டுரை:



நேற்றைய ‘தி இந்து’ இணைய தளத்தில் லக்ஷ்மி பாலக் கிருஷ்ணன் எழுதியிருக்கும் சிறப்பு கட்டுரை..


மற்றும் இவர் தனது ‘மலர் வனம்’ வலைப்பூவில் எழுதியுள்ள கட்டுரை:


**
சில ஆண்டுகளுக்கு முன்  ‘ஐடி நகரின் அவலம்’ என உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த, சாயக் கழிவுகளால் நுரைந்துப் பொங்கி வழிந்த, பெங்களூர் வர்த்தூர் ஏரியின் மாசுப் பிரச்சனை இன்னும் தீர்ந்த பாடில்லை.

கீழ் வரும் படங்கள் அனைத்தும் பத்து நாட்களுக்கு முன்னர் அந்தப் பக்கமாகச் சென்ற போது வண்டிக்குள் இருந்து எடுத்தவை...
#

ஏதோ பனிப்பிரதேசத்தில் இருப்பது போல பொங்கிக் கொண்டே இருக்கும் இந்த நச்சு நுரையானது பறந்து  பாலங்களிலும் சாலைகளிலும் உருண்டோடி பல விபத்துகளையும் ஏற்படுத்தி வருகிறது.

#

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin