Friday, March 29, 2013

சாமியாட்டம் - யெஸ். பாலபாரதியின் சிறுகதைத் தொகுப்பு - ஒரு பார்வை - கீற்றினில்..


படைப்பிலக்கியம் என்பது அந்தந்த காலக்கட்டத்தின் சமூகத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருந்து வருகின்றன. ஏற்கனவே சமூகத்தில் ஊறிப்போன கோட்பாடுகளிலிருந்து விலகாமல் அவற்றைச் சார்ந்தும் ஆதரித்துமாய் படைக்கப்படுகிறவை ஒரு வகை. களையப்பட வேண்டிய நெறிமுறைகளை, தவறான நம்பிக்கைகளை, திருத்திக் கொள்ள வேண்டிய வழக்கங்களை அக்கறையுடனும், அங்கதம் கலந்தும் சுட்டிக்காட்டுபவை ஒரு வகை. இரண்டாவது வகையில் வெற்றி கண்டிருக்கிறது யெஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ சிறுகதைத் தொகுப்பு.   மற்றுமொரு செய்தியாக நாம் கடக்க நேர்ந்த நிகழ்வுகளையும், புரையோடிக் கிடக்கும் சமூக சீர்க்கேடுகளையும், சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் சித்தரிக்கிற கதைகள் மனதில் வலியையும், நம் இயலாமை குறித்த குற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன.

Tuesday, March 26, 2013

செம்மண் பூமி, கபினி அணை, கபிலா ஆறு - பாகம் 1


மைசூரிலிருந்து சுமார் அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் HD Kote தாலுகாவில் இருக்கிறது கபினி அணை. கபிலா ஆற்றின் மேல் கட்டப்பட்டிருக்கும் இந்த அணையே நாகர்ஹொலே, பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயங்களைப் பிரிக்கிறது. அணையின் உள்ளே செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை. நுழைவாயிலையொட்டிய சாலையில் பயணித்தால் அணை தெரிகிறது. பத்து நிமிடப் பயணத்தில் வருகிற இன்னொரு வாயிலில் வண்டிகளை வெளியே நிறுத்தி விட்டு ஒரு கிலோமீட்டர் போல உள்ளே நடந்து போனால் அணையைப் பார்க்கலாம் என்றார்கள். நேரமின்மையால் செல்லவில்லை. வாகனத்தில் இருந்தபடியே எடுத்த சில படங்கள்:

#2


நீருக்கு வேலி..

Friday, March 22, 2013

ஒற்றை ரோஜா லால்பாக் தோட்டமாகலாம்...- Selective Coloring - ( Bangalore Lalbagh Flower Show )


ஜனவரி 2013 லால்பாக் மலர் கண்காட்சிப் பதிவின் இரண்டாம் பாகமாக அன்று படமாக்கிய மேலும் சில மலர்கள்... செலக்டிவ் கலரிங்கில் மழலைகள்...

# 1
இயற்கையின் வனப்பில்
உயிர்த்திருக்கிறது உலகம்


# 2
Every flower is a soul blossoming in nature.
-Gerard De Nerval


#3  மந்தாரை

Wednesday, March 20, 2013

அங்கீகாரம் - ‘தென்றல்’ அமெரிக்க தமிழ் மாதாந்திரப் பத்திரிகையில்..


எழுத்தையும் ஒளிபடப் பயணத்தையும் முன் நிறுத்தியதொரு அங்கீகாரம்..  ‘தென்றல்’அமெரிக்க தமிழ் மாதாந்திரப் பத்திரிகையின் ‘மகளிர் சிறப்பிதழ்’ அட்டையிலும், ‘சாதனைப் பெண்கள்’ கட்டுரையிலும்.

தென்றல் பேசுகிறது..(தலையங்கம்)

“இந்த இதழின் அட்டையைப் பார்த்தாலே மகளிரில் எத்தனை வகைச் சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை உணரலாம்.

Tuesday, March 19, 2013

ஓய்வு பெற்ற என் நண்பனுக்கு.. - டு ஃபு சீனக் கவிதை

friendship.jpg.w300h301

காலை மாலை நட்சத்திரங்கள் சந்தித்துக் கொள்ள இயலா
சிரமத்தைப் போன்றதாகி விட்டது
நண்பர்கள் சந்தித்துக் கொள்வதும்.
இந்த இரவின் சந்திப்பு ஒரு அபூர்வ நிகழ்வு,
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சேர்ந்து அமர்ந்திருக்கும்
இரண்டு ஆண்களும்
இளமையாக இருந்தவர்கள்தாம் சிலகாலம் முன்வரை.
இப்போதோ நரைக்கத் தொடங்கி விட்டது உச்சிச் சிகை.

Sunday, March 17, 2013

பெண் மகவைக் கொண்டாடும் “ங்கா” - தேனம்மை லெஷ்மணனின் கவிதைக் குழந்தைகள் - ஒரு பார்வை


“ங்..கா..”

குழந்தையின் முதல் மழலைச் சொல்.

ஒவ்வொரு குழந்தையும் முதன் முறை இதை உச்சரிக்கையில் குடும்பமே குதூகலிக்கிறது. அந்தக் குதூகலம் குழந்தையையும் தொற்றிக் கொள்ள ‘படீர் படீர்’ எனக் காலைப் படுக்கையில் ஓங்கி அடித்துக் கால் தண்டையோ கொலுசோ ’ஜல் ஜல்’ எனப் பக்கவாத்தியம் வாசிக்க, பொக்கை வாய் மலரச் சிரித்து, கண்கள் மினுங்க இன்னும் சத்தமாய் ‘ங்கா.. ங்கா’ எனத் தொடரும் போது அன்னைக்கும்,  அனைவருக்கும் உலகமே மறந்து போகிறது. சம்பந்தி வீட்டாருக்கிடையே இருக்கும் மனக் கசப்புகள் கூட அந்த மழலைச் சொல்லில் மறைந்து போகிறதென்கிறார் தலைப்புக் கவிதையில் கவிஞர். உண்மைதான். அதுவும் எங்கள் ஊர்ப் பக்கத்தில் குழந்தை ‘ங்கா’ சொல்ல ஆரம்பித்ததும் தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி, மாமா, சித்தப்பா, அக்கா, அண்ணா என ஆளாளுக்கு மாற்றி மாற்றி அதைச் சூழ்ந்து கொண்டு “இங்குங்கு பேசணுமா..? ஆக்காக்கு பேசணுமா..?’ எனக் கொஞ்சியபடியே இருப்பார்கள். அந்த அழகான முதல் மழலைச் சொல்லையே தொகுப்புக்குப் பெயராக்கிய இரசனையிலும் பாராட்டைப் பெறுகிறார் கவிஞர்.

Friday, March 15, 2013

பெண் மொழி பேசும் புகைப்படங்கள் (பாகம் 2)

இல்லத்தையும் குழந்தைகளையும் கவனித்தபடியே, ஈடுபடும் கலைகளிலும், ஆற்றிவரும் பணிகளிலும் பரிமளித்து வருகிறார்கள் பெண்கள். குமுதம் பெண்கள் மலர் கட்டுரையின் தொடர்ச்சியாக, மேலும் சில பெண்மொழி பேசும் படங்கள்:

#1 தாய்மை என்றால் பொறுமை

கவிஞர் கயல்விழி முத்துலெட்சுமி

Friday, March 8, 2013

குமுதம் பெண்கள் மலரில்.. - பெண் மொழி பேசும் புகைப்படங்கள் - எனது பேட்டியுடன்..

இந்தவாரக் குமுதம் இதழுடன் மகளிர்தினச் சிறப்பு இணைப்பாக 128 பங்கங்களுடன் வெளிவந்திருக்கும் பெண்கள் மலரில்..

# பெண் மொழி பேசும் புகைப்படங்கள்: அன்றாட வாழ்வில் சந்திக்க நேரும் ஒவ்வொரு சாதாரண பெண்ணின் முகத்திலும் ஒரு அசாதாரண உறுதியைப் பார்க்கிறேன். வாழ்க்கையை சவாலாக ஏற்றுக் கொள்ளும் போராட்டக் குணமும் அநாயசமாகக் கடந்து செல்கிற அவர்களது தைரியமும் போற்றுதலுக்குரியதாக இருக்கிறது. சமூகத்துக்கு நம்பிக்கை தரும் செய்தியாக, அந்த ஒளிமிகு முகங்களை புகைப்படங்களாகப் பதிவதில் விருப்பம் காட்டுகிறேன். அதே நேரம் படிப்பு வாசம் கிட்டாமல் உழைக்கும் குழந்தைகளை பார்க்கும்போது மனதில் வலி ஏற்படுகிறது. அப்படி இந்த சமூகம் சரி செய்ய வேண்டியவையவற்றையும் காட்சிப்படுத்தி வருகிறேன்...” 
 

Thursday, March 7, 2013

இயற்கையின் வண்ணங்கள் - மார்ச் PiT போட்டி - மகளிர் தின வாழ்த்துகள்!


நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட வண்ணங்களால் உலகை அலங்கரித்திருக்கிறது இயற்கை. அந்த வண்ணங்களைதான் சட்டமிடப் போகிறீர்கள் இந்த மாதப் போட்டிக்கு.

[பெரிதாகக் காட்டியிருக்கும் படங்கள் ஆறும், முன்னர் முத்துச்சரத்தில் பகிராதவை.   கிளிகள் தவிர்த்து மற்றவை கபினியில் எடுத்தவை. சிறிய அளவுப் படங்கள் மேலும் மாதிரிக்காக.]

 #1 புல்லும் பூமியும் நீரும்


Tuesday, March 5, 2013

‘தினகரன் வசந்தம்’ பெண்கள் தின ஸ்பெஷலில்..- இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்


பெண்கள் தின ஸ்பெஷலாக வெளிவந்திருக்கும் 3 மார்ச் 2013 தினகரன் வசந்தம் இதழில், பெண் பதிவர்கள் பலரின் வலைப்பூக்கள் இடம் பெற்றிருக்கின்றன. அடையாளமாகிப் போய்விட்ட கேமரா படத்துடன் www.tamilamudam.blogspot.com :)! துளசி டீச்சர், சந்தனமுல்லை, அமிர்தவர்ஷினி அம்மா, தேனம்மை, தீபா, ஹுஸைனம்மா, சுசி, சக்திசெல்வி, மேனகா, கவிதா, விக்னேஷ்வரி, இயற்கை ராஜி, புவனா, விதூஷ், ரம்யா, காயத்ரி, தாரணிப் பிரியா, வித்யா, மயில் விஜி...... என

Monday, March 4, 2013

புன்னகை 71வது இதழ் - எனது கவிதைகளின் சிறப்பிதழாக..


கேட்பினும் பெரிதுகேள், ‘புன்னகை’ சிற்றிதழின் எழுபத்தியோராவது இதழ் எனது கவிதைகளின் சிறப்பிதழாக வெளியாகியிருப்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

முப்பத்தியொரு பக்கங்கள் கொண்ட இதழில் பனிரெண்டு பக்கங்கள் ஒதுக்கி, என்னைப் பற்றிய சிறுகுறிப்புடன் 11 கவிதைகளை, பொருத்தமான படங்களுடன் சிறப்பாக வெளியிட்டிருக்கும் புன்னகைக்கு நன்றி!


ஏதேனும் ஒரு படத்தின் மேல் click செய்தால் Light Box-ல் பக்கங்களை வரிசையாகப் பெரிதாகக் காண இயலும். (தேவைப்பட்டால் ctrl மற்றும் +, keys ஒருசேர அழுத்தி இன்னும் பெரிதாக்கிடலாம்.)

Friday, March 1, 2013

ஒரு சின்னப் பறவை - ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை


a minor bird


பறந்து போகட்டும் என நினைத்திருக்கிறேன்
அந்தச் சிறுபறவை,
நாள் முழுக்க என் வீட்டில் பாடிக் கொண்டிராமல்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin