புதன், 26 மார்ச், 2014

மழையின் குரல் - வால்ட் விட்மன் கவிதை

யார் நீ எனக் கேட்டேன் மெல்லத் தூறிய சாரலிடம்
சொல்வதற்கு விநோதமே, ஆனால் அது பதிலளித்தது, பின் வருமாறு:

பூமியின் கவிதை நான், என்றது மழையின் குரல்,
முடிவற்று உயருகிறேன் புலன்களால் உணரமுடியாதபடி,
அடியற்ற கடலுக்கும் பூமிக்கும் வெளியே, சொர்க்கத்தை நோக்கி,
தெளிவற்று உருவாகுகிறேன், அங்கு, மொத்தமாக மாறிப் போய்,

திங்கள், 24 மார்ச், 2014

திருமதி. செல்வி ஷங்கர் பார்வையில்.. - இலைகள் பழுக்காத உலகம்

தலைமைத் தமிழாசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் திருமதி. செல்வி ஷங்கர். ‘வலைச்சரம்’ ஆசிரியர் சீனா அவர்களின் மனைவி. ‘பட்டறிவும் பாடமும்’ வலைப்பூவில் தன் எண்ணங்களைப் பகிர்ந்து வருகிறார். ‘எண்ணச் சிறகுகள் - வள்ளுவம்’ என்ற இன்னொரு வலைப்பூவில் திருக்குறளுக்கு உரை எழுதி வருகிறார். ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பை வாசித்து விட்டு மின்னஞ்சல்  மூலமாக அனுப்பியிருந்த கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

ண்மையில் கவிதை - தவிப்பு - ஏக்கம் - இருப்பு என்று பூக்குட்டிகளைச் சுமந்த படி கடவுளே காப்பாற்று என்றெல்லாம் சொல்லும் பொழுது கவிதை இயல்பாகவே நீரோட்டமாய்ச் செல்கிறது.

இலைகள் பழுக்காத உலகம் எப்பொழுதும் எங்கோ இருக்கத்தான் செய்கிறது. தந்தையின் பாசமும் தளிர்களின் கற்பனையும் ஒரு காலத்தில் ஒட்டி உறவாடின என்பதை காலக் கண்ணோட்டம் கருத்தாய்ச் சொல்கிறது. கம்பீரமாய்ச் சிரிக்கும் அதே தந்தையின் கண்கள் எட்டு வயதுச் சிறுமியைத் தேடுகின்றன என்ற போது நமது முதுமையும் நரையும் திரையும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

ராணித்தேனீயில் இன்னமும் அடக்கு முறையால் ஒடுக்கப் படுகின்ற பெண் சமுதாயத்தின் கேவல்கள் கேட்பது போலவே உள்ளது. என்ன தான் உரிமைகள் பெற்று பிறர் உயர்விற்காக பொருளையும் செய்கின்ற பெண்களுக்கு இன்னம் மாறாத நிலைமைதான்.

சனி, 22 மார்ச், 2014

உலக தண்ணீர் தினம்: நீர் சேமிப்பு.. நீருக்காகக் காத்திருப்பு.. - ஓவியங்கள் ஆறு

இன்று உலக தண்ணீர் தினம். வருடத்தில் ஓர் நாள் நீர் வளத்தைக்  காக்கவென அனுசரிக்கப்படும் இத்தினத்துக்காக என்றில்லாமல் கடந்த பதினைந்து வருடங்களாக (1999_லிருந்து) “நீர் சேமிப்பு, நீருக்கான காத்திருப்பு” (SAVE WATER, WAITING FOR WATER) இந்த இரண்டு கருக்களை மட்டுமே எடுத்துக் கொண்டு சுமார் நானூறு ஓவியங்களைப் படைத்திருக்கிறார், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீஷாய்ல் பாட்டில்.
#1

கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தில் வசிக்கும் இவரை 2014 பெங்களூர் சித்திரச் சந்தையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது

# 2

மற்ற மாநிலங்களை விட நீர் வளம் சொல்லிக் கொள்ளும்படியாக இருந்தாலும் கூட விவசாயிகள் மழை வராவிட்டால் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். இயற்கையை மதித்து, காடுகளை.. மரங்களை.. இருக்கும் நீர் வளங்களை.. நாம் காக்காமல் போனால் நீருக்காகக் காத்தே இருக்கும் நிலை வருமென்பதை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டுமென்பதே தன் நோக்கம் என்கிறார்.
#3

வெள்ளி, 21 மார்ச், 2014

வெங்கட் நாகராஜ் பார்வையில்.. - ‘இலைகள் பழுக்காத உலகம்’

சமீபத்திய தமிழகப் பயணத்தின் போது வாங்கிய பல புத்தகங்களில் ஒன்று தான் “இலைகள் பழுக்காத உலகம்”.  இந்த கவிதைத் தொகுப்பினை வெளியிட்டவர் பதிவுலகில் முத்துச்சரம் எனும் வலைப்பூவில் தனது பதிவுகளை எழுதிவரும் திருமதி ராமலக்ஷ்மி.  கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, மிகச் சிறந்த புகைப்படங்கள் எடுப்பது, என பல திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ளவர். இப்புத்தகம் இவரது முதல் கவிதைத் தொகுப்பு.

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் மொத்தம் 61 – கல்கி, ஆனந்த விகடன், வடக்கு வாசல், அகநாழிகை போன்ற பல இதழ்களில் வெளிவந்த அவரது சிறப்பான கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். 61 கவிதைகளும் எனக்குப் பிடித்திருந்தாலும் எல்லா கவிதைகளையும் இங்கே சொல்லி விடக் கூடாது எனும் உணர்வினால் ஒரு சில கவிதைகளைப் பற்றி மட்டும் இங்கே பார்க்கப் போகிறோம்.

கடலை யாருக்குத் தான் பிடிக்காது?

திங்கள், 17 மார்ச், 2014

மு.வி. நந்தினி பார்வையில்.. அடை மழையின் ‘ஈரம்’: வேலைக்குச் செல்லும் பெண்களின் அசாதாரண தருணம்..

நான் பார்க்கும் பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்குப் பிறகு அல்லது குழந்தை பேறுக்குப் பிறகு வேலைக்குப் போவதை விரும்புவதில்லை. அல்லது அவர்கள் சார்ந்த குடும்பத்தில் இருப்பவர்கள் வேலைக்குப் போகவேண்டாம் என்று வற்புறுத்தி அவர்களை போக விடுவதில்லை. இந்த இரண்டு காரணங்களையும் என் விஷயத்தில் நடக்காமல் பார்த்துக் கொண்டேன். எப்போதும் நான் வேலைக்குப் போவேன் என்று திருமணத்திற்கு முன்பே என் வீட்டாரிடம் உறுதியாக சொல்லியிருந்தேன். அதன்படி திருமணமாகி, கர்ப்பம் தரித்திருந்த ஒன்பது மாதங்கள் வரை வேலைக்குச் சென்றேன். வேலையிலிருந்து விலகிய ஒரு வாரத்தில் எனக்கு பிரசவமானது. குழந்தை பேற்றுக்கு பிறகு, 3 மாதங்கள் வரை விடுப்பு கேட்டிருந்தேன். இன்னும் சிறிது காலம் குழந்தைக்கு அருகிலேயே இருக்க வேண்டிய தேவை இருந்தது. விடுப்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க கேட்டேன். அலுவலகத்தில் ஒத்துழைத்தார்கள். குழந்தைக்கு அருகில் இருந்த 5வது மாதத்தில் குழந்தைக்கு மாற்று உணவுக்கு பழக்கினேன். குழந்தையும் ஒத்துழைத்தான். அருகருகிலேயே உறவுகள் அமைந்துவிட்டதால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆள் தேடும் தேவை ஏற்படவில்லை. அவர்களே மாற்றி மாற்றி குழந்தையை பார்த்துக்கொண்டார். குழந்தையை விட்டு வேலைக்குப் போகிறோமே என்கிற செயற்கையாக உருவாக்கப்பட்ட குற்ற உணர்ச்சி எல்லாம் எனக்கு உண்டாகவில்லை. எனக்கென்றும் என் குடும்பத்திற்கென்றும் நான் வேலைக்குப் போகும் தேவையிருந்தது. இதில் குற்றவுணர்ச்சி கொள்ள ஏதும். இந்த குற்றவுணர்ச்சி பற்றி ஏராளமான பெண்கள் என்னிடம் கேட்டதுண்டு. அப்படி எதுவும் இல்லை, என் குழந்தை நான் அருகில் இருந்திருந்தால் இவ்வளவு விஷயங்களை கற்றுக்கொண்டிருக்க மாட்டான். அவன் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை உன்னிப்பாக பார்க்கிறான், அதிலிருந்து அவன் யாரும் சொல்லிக்கொடுக்காமலே கற்கிறான் என்று அவர்களிடம் பேசுவேன். அது அவர்களுக்கு உகந்த பதில் அல்ல, அவர்கள் எதிர்பார்ப்பது என் செய்வது என் தலை எழுத்து என்கிற புலம்பலைத்தான்.

வெள்ளி, 14 மார்ச், 2014

தூறல் 16 - AID பெங்களூர் கண்காட்சியும் எனது படங்களும்; மல்லிகை மகள்; சிறு வியாபாரிகள்

AID பெங்களூர், விழிப்புணர்வுக்காக நடத்திய ஒளிப்படப் போட்டி குறித்த அறிவிப்பு விரிவாக இங்கே. கலந்து கொண்ட படங்களில் கண்காட்சிக்குத் தேர்வான படங்கள் 15 குறித்த விவரங்கள் இங்கே. அவற்றில் எனது படங்கள் இரண்டு தேர்வாகியுள்ளன என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இவற்றோடு பெங்களூர் குறித்த மேலும் பல ஒளிப்படங்களுடன், மார்ச் 15 மற்றும் 16 தேதிகளில், பெங்களூரின் தொம்லூர் பகுதியிலிருக்கும் தளம் அரங்கில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் வாய்ப்புக் கிடைக்கிறவர்கள் கலந்து கொள்ளுங்கள்!

கண்காட்சியில் இடம் பெறவிருக்கும் எனது படங்கள்:

புதன், 12 மார்ச், 2014

வீடு - சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை (3)

அவர்கள் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்
அரை பர்லாங்கு தள்ளி
இங்கு  நான் நிழலில் அமர்ந்து
கவனித்துக் கொண்டிருக்கிறேன்
ஆணிகளில் சுத்தியல்
தக்தக் தக்தக் என இறங்கும் ஒலியை,
அடுத்ததாய் தக் தக் தக் எனும்
பறவைகளின் ஒலியை,
பின் படுக்கச் செல்கிறேன்
போர்வையை என் கழுத்துவரை
இழுத்து மூடிக் கொள்கிறேன்;
கடந்த ஒரு மாதமாக இந்த வீட்டைக்
கட்டிக் கொண்டிருக்கிறார்கள்,
சீக்கிரமே அதில் ஆட்கள்
குடிவந்து விடுவார்கள், தூங்கி,
சாப்பிட்டு, நேசித்து, சுற்றி வந்து,
ஆனால் ஏதோ ஒன்று சரியில்லை,
பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது,

சனி, 8 மார்ச், 2014

ITHI மகளிர் அமைப்பின் FEMME VUE ஒளிப்படப் போட்டி

ஐடி துறையில் பணியில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காணவும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவும் பெங்களூரில் இயங்கி வரும் அமைப்பு ITHI. அவ்வப்போது உழைக்கும் மகளிரின் பிரச்சனைகள், உரிமைகள் குறித்த கருத்தரங்கங்கள், விவாதங்கள், கூட்டங்களை மகளிருக்காகவும், பொதுமக்கள் உணர்ந்து கொள்வதற்காகவும் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இன்று மகளிர் தினம்:

மகளிர் தினம் அனுசரிக்கப்படும் இந்த மார்ச் மாதத்தில் ITHI விழிப்புணர்வுக்காக அறிவித்திருக்கும் ஒளிப்படப் போட்டிதான் FEMME VUE:

வியாழன், 6 மார்ச், 2014

குங்குமம் இதழில்.. - பிடித்த 'பெண் மொழிக் கவிதை'..

 மகளிர் தினத்தையொட்டி ‘பெண்கள் ஸ்பெஷலாக’ வெளிவந்துள்ள (10.03.2014) இந்த வாரக் குங்குமம் வார இதழில்...

பிடித்த பெண்மொழிக் கவிதையாக..

‘சிலைகள் அமைதியிழக்கும் நாட்கள்’:

புதன், 5 மார்ச், 2014

பாதுகாப்பு – சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை (2)

என்னை வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது அடுத்த வீடு.
அதிகாலையில் எழுந்து வேலைக்குச் செல்லும்
கணவனும் மனைவியும் வெகு சீக்கிரமாக
சாயும்பொழுதில் வீடு திரும்பி விடுகிறார்கள்.
இளம் மகனும் மகளும் கொண்ட அவர்களது
வீட்டின் விளக்குகள் அனைத்தும்
இரவு ஒன்பது மணிக்குள் அணைக்கப்பட்டு விடும்.

ஞாயிறு, 2 மார்ச், 2014

ரெண்டு ரூவாய்க்கு.. - நம்மைச் சுற்றி உலகம்

#1 சிற்றருவியின் சங்கீதம்

#2 எந்தப் பூவிலும் வாசமுண்டு

#3 பூப் போலே உன் புன்னகையில்..

 #4 பூவும் தளிரும்..

சனி, 1 மார்ச், 2014

தூறல் 15 - ரியாத் தமிழ்ச் சங்கம்; பெங்களூரின் ஆன்மா; குங்குமம் தோழி fb; Flickr 1500

நன்றி ரியாத் தமிழ்ச் சங்கம்!

சென்ற வருடம் ரியாத் தமிழ் சங்கம் நடத்திய . ‘கல்யாண் நினைவு’ உலகளாவிய கவிதைப் போட்டியில் எனது கவிதை ‘நட்சத்திரக் கனவு’ சிறப்புப் பரிசு பெற்றிருந்ததைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன் அதற்கான சான்றிதழ் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது:
#
இதைத் தொடர்ந்து,  இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இப்னு ஹம்துன் மூலமாகத் தற்போது பரிசுத் தொகையையும் கேடயத்தையும் அனுப்பி வைத்துள்ளார்கள்.
#
#
ரியாத் தமிழ்ச் சங்கத்தினருக்கும், நடுவர்களுக்கும் என் நன்றி. பரிசு பெற்றக் கவிதை இங்கே.
***

பெங்களூரின் ஆன்மா - வெளி - சமூகம்:

AID நடத்தும் பெங்களூர் உங்கள் பார்வையில்.. போட்டிக்குப் படங்களை அனுப்பும் கடைசித் தேதி 1 மார்ச் ஆக நீட்டிக்கப் பட்டுள்ளது:
படங்களை அனுப்ப விரும்புகிறவர்கள் இன்று இரவு வரைக்கும் இங்கே சமர்ப்பிக்கலாம். பெங்களூர்வாசிகள் இன்றைய நாளைப் பயன்படுத்திக் கொண்டு பொருத்தமாக 5 படங்களைப் புதிதாக எடுத்தும் அனுப்பலாம்.  மார்ச் 8,9 தேதிகளில் நடைபெறவிருந்த ஒளிப்படக் கண்காட்சியும் 15,16 தேதிகளுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரிவான விவரங்கள் இந்தப் பதிவில்

மாதிரிக்கு.. கலந்து கொள்ளும் எனது ஐந்தாவது படம்:

# சுமையைக் குறைக்க அன்றி தோளின் வலிமைக்காகப் பிரார்த்திக்கும் சாதாரண மனிதர்கள்.. (கமர்ஷியல் தெரு, பெங்களூருவில்..)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin