கேரளா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேரளா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 மே, 2019

அனந்தபுரம் ஏரிக் கோயில் - சைவ முதலையும்.. கடு சர்க்கரை யோகமும்.. - கேரளம் (5)

#1

கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் அனந்தபுரா கிராமத்தில் ஒரு ஏரியின் நடுவில் அமைந்திருக்கிறது “அனந்தபுரம் ஏரிக் கோவில்”.  கேரள மாநிலத்தில் ஏரிக்குள் அமைந்திருப்பது இந்தக் கோவில் மட்டுமேயாகும். கும்பாலா எனும் இடத்திலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ளது. நாங்கள் பேகலில் இருந்து மங்களூர் திரும்பும் வழியில் இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தோம்.

நண்பகல் ஒரு மணி ஆகிவிட்டபடியால் கோவிலின் மூலஸ்தானம் மூடி விட்டிருந்தார்கள். அமைதியான சூழலில் அமைந்த கோவில். ஆலயம் எழும்பி நிற்கும் ஏரியானது சுமார் 302 சதுர அடி அளவிலானது.

#2

#3
 #4

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் குடிகொண்டுள்ள அனந்த பத்மநாபசுவாமியின் மூலம் இதுவே என்கிறார்கள்.  புராணங்களின் கூற்றுப்படி பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி அசலாக முதன்முதலில் குடியிருந்த இடம் இது என நம்பப் படுகிறது. இதை அங்கிருந்த பெரியவர் ஒருவரும் கூறினார்.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

கல்லிலே கலை வண்ணம் - விவான்டா சிற்பங்கள் - பேகல், கேரளம் (4)

ந்தப் பாகத்தில்,  பேகலில் இருக்கும் தாஜ் விவான்டாவின் வளாகத்தினுள்  காணக் கிடைத்த சிற்பங்களின் படங்களைத் தொகுக்கிறேன்.  பொதுவான கருவாக யானையையும் பிள்ளையாரையும் தேர்ந்தெடுத்து  விதம் விதமான வடிவில் செதுக்கப்பட்டச் சிலைகளை வளாகம் எங்கும் ஆங்காங்கே ரசனையுடன் நிறுவியிருக்கிறார்கள்.

#1
#2

#3

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

தேடு, உனைக் கண்டடைவாய்.. - பேகல், கேரளம் (3)

#1
கேரளத்தை, குறிப்பாக உப்பங்கழிப் பகுதிகளை இறைவனின் சொந்த நாடு எனக் கொண்டாடுகிறோம்.  பேகலில் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்த தாஜ் விவான்டா, இயற்கையின் எழிலை ரசித்தபடி அமைதியாக விடுமுறையைக் கழிக்கச் சிறந்த இடம்.  “தேடு, உனைக் கண்டடைவாய்” எனும் வாசகம் இங்கே இருக்கும் நாட்களுக்குப் பொருந்திப் போகும் என்கிறார்கள். அது ஓரளவு உண்மைதான்.

#2



தங்கியிருக்கும் குடில்களின் பின் பக்கத்தில் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் நீரை, பாறைகளில் வந்தமரும் பறவைகளை, சுற்றி அசைந்தாடும் தென்னைகளை மெய்மறந்து இரசித்துக் கிடக்கலாம் அறையின் முதல் தளத்து பால்கனியில் இருக்கும் ஊஞ்சலில் ஆடியசைந்தபடி.

#3

வெள்ளி, 29 மார்ச், 2019

உப்பங்கழி.. இயற்கையிடம் சரணாகதி.. - பேகல், கேரளம் (2)

ப்பங்கழி (Backwaters) என்றால் என்னவென்பதை 2010 கேரளப் பயணப் பகிர்வான ‘ஏரிக்கரைப் பூங்காற்றே’ பதிவில் சொல்லியிருக்கிறேன். அதாவது, மழைக்காலத்தில் மலையிலிருந்து பாய்ந்துவரும் நதிகளின் நீர் கடலில் கலக்கும்போது அந்த நல்லநீர் சுற்றியுள்ள மாவட்டங்களில் விவசாயத்துக்கு மிக உகந்ததாய் பயன் படுகிறது. மழையற்ற கோடையில் தாழ்வான மட்டத்தில் இருக்கும் காரணத்தால் கடலின் உப்புநீர் நதி வந்த பாதைகளில் புகுகின்றது. இதைத்தான் உப்பங்கழி (பேக் வாட்டர்ஸ்) என்கிறார்கள். அந்த சமயம் மட்டும் விவசாயத்துக்கு ஏற்றதாக இருப்பதில்லை.

நாங்கள் தங்கியிருந்த தாஜ் விவாண்டா விடுதியின் பின்பக்கமே அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது உப்பங்கழி. கரையோர மரங்களோடு அக்காட்சிகள் சிலவற்றை இங்கே தொகுக்கிறேன்:

#1

#2

திங்கள், 25 மார்ச், 2019

பேகல் கோட்டை - கேரளம் (1)

கேரளத்தின் காசரகோடு மாவட்டத்தில், . மங்களூரிலிருந்து 65கிமீ தூரத்தில், பேகல் எனும் இடத்தில் இருக்கிறது 40 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் ‘பேகல்’ கோட்டை.

#1

பம்பாய் திரைப்படத்தின் “உயிரே.. உயிரே..” பாடல் காட்சி படமாக்கப் பட்ட இடம் என்றால் உங்கள் எல்லோருக்கும் சட்டெனப் புரிந்து போகும். பலர் இந்தப் பாடல் கோவாவில் எடுக்கப்பட்டது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

#2


இந்தக் கோட்டையின் சிறப்பம்சம் இது கடற்கரையோரம் அமைந்திருப்பது. கண்காணிப்பு கோபுரங்கள், தண்ணீர் தொட்டிகள், குகைகள், தளவாட கிடங்குகள் என்று பல வகை வரலாற்று ஈர்ப்புகள் இங்கு இருக்கின்றன. உள்ளே செல்லலாம் வாருங்கள்.

#3

வியாழன், 29 மார்ச், 2012

‘மேக் மை ட்ரிப்’ வாங்கிய எனது படம்.. - சுற்றுலா வளர்ச்சிக்கு உதவணுமா நீங்கள் எடுத்த படங்கள்?



Picsean.com சென்ற வருடம் Flickr (mail) வழியாகத் தொடர்பு கொண்டு, இப்படத்தை என்னிடம் விரும்பிக் கேட்டு வாங்கி Make My Trip.com_யிடம் விற்றுக் கொடுத்தது. எவ்வளவுக்கு என்பது முக்கியமில்லை, எவ்வளவு பிடித்திருந்தது அவர்களுக்கு என்பது உங்களுடன் பகிர்ந்திடக் கூடிய ஒன்றாகவே எண்ணுவதால் இந்தப் பதிவு. மேலும் அறிந்த தகவல்களைப் பரிமாறிக் கொள்வது உங்களில் ஆர்வம் உள்ளவருக்குப் பயனாகும் என எண்ணுகிறேன்.

டிஸ்கவர் இன்டியா, மிஸ்டிகல் கேரளா, பேரடைஸ் காலிங் எனத் தனது ‘பல’ பேக்கேஜ் டூர்களுக்காக மேக் மை ட்ரிப் டாட் காம் எனது இந்தப் படத்தினைப் பயன்படுத்தி வருகிறது:

அனுமதி இல்லாமல், பதிவுகளுக்குச் சரியான சுட்டியும் அளிக்காமல் ‘நவசக்தி’ தளம் என் சிங்கப்பூர் பயணக் கட்டுரைகள் மற்றும் படைப்புகளை அப்படியே வெளியிட்டிருந்தது குறித்து தூறல் ஒன்றில் வருத்தப்பட்டிருந்த போது, அப்பாத்துரை அவர்கள் மேலும் ஒரு தகவலைத் தந்திருந்தார், இரண்டு வருடங்கள் முன் மலேசியா சென்றிருந்தபோது தமிழ்மணம் விருது பெற்ற என் புகைப்படப் பதிவொன்று சஞ்சிகை ஒன்றில் மேலும் சிலரது பதிவுகளுடன் அச்சாகி அரை டாலருக்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் காண நேர்ந்ததாக. இப்படி அனுமதியின்றி எங்கெங்கோ உபயோகப்படுத்தப் படுகையில், நம்மிடம் முறையாகக் கேட்டு பயன்படுத்த விரும்புவருக்குக் கொடுப்பதில் திருப்தியே.

சரி, அவர்களுக்குத் தேவையானதை மட்டுமேதான் நாம் கொடுக்க வேண்டுமா? அவர்களின் தேவையை எப்படி அறிவது? எடுத்த எந்தப்படங்களையும் கொடுக்கலாமா? எனும் கேள்விகள் உங்களில் பலருக்கு வரக்கூடும். சற்று விரிவாகப் பார்ப்போம்.

அடிக்கடி சுற்றுலா செல்பவர்களா நீங்கள்? உங்கள் படங்கள் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவ வேண்டுமா? உதவி செய்யக் காத்திருக்கும் தளமே http://www.picsean.com/ . இதில் ஒரு கணக்கை உருவாக்கிக் கொண்டு நம் படங்களை சமர்ப்பித்து வரலாம். தேவையைச் சொல்லி எனது படத்தை வாங்கியிருந்தாலும் தொடர்ந்து எனது படங்களை தங்கள் தளத்தில் சமர்ப்பிக்கக் கேட்டுக் கொண்டிருந்தது பிக்ஸியன். சமீபத்தில் மீண்டும் கர்நாடக, தமிழக கோவில் படங்கள் சிலவற்றை அங்கு பதிந்து வைத்தேன். படம் எடுத்த இடம், விவரங்கள் ஆகியவற்றையும் கூடவே அளித்திடல் நன்று. Landscape image எனில் அகலமும், Portrait image எனில் உயரமும் [அதாவது உயர அகலத்தில் எது அதிகமோ அது] 2200 பிக்ஸல் இருக்குமாறும்; dpi 300 இருக்குமாறும் படங்களை அங்கு வலையேற்ற வேண்டும்.

நம் படங்களுக்கானத் தேவையை அவர்களாகக் கண்டறிந்தோ அல்லது தேவைப்படுகிறவருக்கோ விற்றுத் தருகிறார்கள். இணையதள உபயோகத்திற்கு 10$ எனில் அச்சுப் பத்திரிகைகளின் அரைப் பக்க உபயோகத்துக்கு 50$ முழுப்பக்கத்துக்கு 100$ என்பதாகத் தெரிவித்திருந்தார்கள். பணத்தை நமது paypal கணக்குக்குச் செலுத்தி விடுகிறார்கள். முகப்புத்தகத்தில் http://www.facebook.com/picsean இவர்களைத் தொடர்வதும் அவ்வப்போதைய தேவைகள்,போட்டிகளை அறிய உதவும்.




மேலும் ஒரு புகைப்படத் தகவல்:

ஆனால் புகைப்படத் துறையில் ஆர்வமுள்ள பெண்களுக்கு மட்டும்:)!
இந்தத் தளத்தில்அறிவிப்பாகியிருக்கும் EVA '12 புகைப்படப் போட்டியில் விருப்பமானவர் கலந்து கொள்ளுங்கள். மார்ச் 31ஆம் தேதியே படங்களை அனுப்பக் கடைசித் தேதி.

திங்கள், 12 ஏப்ரல், 2010

தண்ணி காட்டறேன்- ஏப்ரல் PiT போட்டிக்கு

கொளுத்துகிற கோடையில் குளுமை வேண்டி வைத்தார்கள் தலைப்பு ‘தண்ணீர் தண்ணீர்’ என. கடல், ஏரி, குளம்,அருவி, வாய்க்கால், கிணறு, ஊற்று, பம்ப் செட் எதையும் விட்டு வைக்கவில்லை நான்:)!

[கணினித் திரையை விட்டுப் படங்கள் விலகித் தெரிந்தால் control மற்றும் minus பொத்தான்களை ஒருசேர அழுத்தி தேவையான அளவுக்கு கொண்டுவரக் கேட்டுக் கொள்கிறேன்.]


1. தீவுத் திடலா தென்னைத் திடலா


செவ்வாய், 6 ஏப்ரல், 2010

போகுமிடம் வெகுதூரமில்லை-PiT-ன் இந்த வார சிறந்த படமாக

3 ஏப்ரல் 2010, PiT தளத்தில் இந்த வார சிறந்த படமாக கீழ் வரும் எனது படம் பரிசு பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி PiT!

போகுமிடம் வெகுதூரமில்லை

PiT தளத்தில் வாழ்த்தியிருந்தவர்களுக்கும், Flickr தளத்தில் போற்றியிருந்தவர்களுக்கும் இங்கும் என் நன்றிகள்.

இப்படத்துக்கு நான் செய்த பிற்தயாரிப்பு, PiT-ல் கற்ற பாடமே.

இந்த வார சிறப்புப் படம் எப்படித் தேர்வாகிறது?
தெரியாத சிலருக்காக இந்தத் தகவல்கள்:

நீங்கள் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வமுள்ளவரா? எடுத்த படங்களை மற்ற ஆர்வலர்கள், வல்லுநர்கள், நண்பர்களுடன் பகிர்ந்திட விருப்பமா? Flickr-ல் ஒரு கணக்கை ஆரம்பியுங்கள். இது ஒரு இலவசச் சேவையே. கூடுதல் வசதிகள் தேவையெனில் பணம் செலுத்தி Pro Account ஆக்கிக் கொள்ளலாம்.

அடுத்து PiT Group-ல் இணைந்திடுங்கள். அதன் பின்னர் அங்கு நீங்கள் பதிகின்ற படங்களில் பிடித்தவற்றை PiT Group-ல் சேர்த்து வரலாம். ஒரு நாளுக்கு இரண்டுவரை அனுமதி. இணைக்கும் படங்களின் எண்ணிக்கைக்கு இணையாக மற்ற படங்களுக்கு கமெண்ட் வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால் உங்களால் இரண்டு கமெண்டுகளுடன் நிறுத்த முடியாது என்பது அங்குள்ள அழகுப் படங்கள் செய்யும் மாபெரும் சதி:)!

PiT Group படங்களை இந்தத் தளத்திலும் நீங்கள் கண்டு ரசிக்கலாம்: Flickriver .

இப்படியாக சேர்க்கப்படும் படங்களில் சிறந்த ஒன்றிரண்டைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று ‘இந்தவார சிறந்தபடம்’ என PiT தளத்தில் அறிவிக்கிறார்கள் PiT குழுவினர். குழுவிலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாரம் நடுவராக செயல் படுகிறார்கள்.

PiT group-ல் இணைவதில் என்னென்ன நன்மைகள்? பார்வைக்காக வைக்கப்படும் படங்களிலுள்ள நிறைகுறைகளை நண்பர்கள் ஒருவருக்கொருவர் சுட்டிக் காட்டிக் கொள்கிறார்கள். ஆலோசனைகள் வழங்கிக் கொள்கிறார்கள். இந்த முறை நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவும். அதுமட்டுமின்றி மற்றவர்கள் எப்படி படங்கள் எடுக்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து கவனித்து வருவதும் ஒரு சிறந்த பயிற்சியே. அடுத்தமுறை நாம் படம் எடுக்கையில் கோணங்கள் முதற்கொண்டு நாம் பார்த்தவை கை கொடுக்கும்.

அதே போல PiT நடத்தும் மாதப் போட்டிகளில் கலந்து கொள்ளும் படங்களைக் கவனிப்பதும் இவ்வகைப் பயிற்சிக்கு மிகவும் உதவுகின்றன. கடந்த மாதப் போட்டியான ‘ஒற்றை’ தலைப்புக்குக் கலந்து கொண்டவர் எண்ணிக்கை 91. கடைசி தினம் வரை 'ஜே ஜே'தான். ஒவ்வொரு நாளும் எத்தனை புது எண்ட்ரி என நம் மக்களும் சளைக்காமல் காத்திருந்து, பார்த்துப் பார்த்துக் கமெண்ட் மழை பொழிந்தார்கள்.

ஒவ்வொரு சுற்றிலும் முன்னேறிய படங்களையும், விலக நேர்ந்த படங்களையும் சிரத்தையுடன் விமர்சித்திருந்தார் கருவாயன். ஆர்வமுள்ளவர்கள், பரிசு என்பதைத் தாண்டி, ‘கற்றுக் கொள்ள’ எனும் நோக்கத்துடன் இதற்காகவே கலந்து கொள்ளலாம்.

சரி, இந்த மாதப் போட்டித் தலைப்பு என்ன தெரியுமா? ‘தண்ணீர்’! ஏற்கனவே கச்சேரி இங்கே களைகட்ட ஆரம்பித்து விட்டது. வாங்க நாமும் ‘பிட்’டுக்குத் தண்ணி காட்டலாம்:)! கடைசித் தேதி:15 ஏப்ரல் 2010.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin