Tuesday, January 27, 2015

‘தி இந்து’ போட்டோ கேலரியில்.. ( Bangalore Lalbagh Flower Show 2015 )

பெங்களூர் லால்பாகின் இருநூற்றியோராவது கண்காட்சியான, 2015 குடியரசு தின மலர் கண்காட்சியில் நான் எடுத்த படங்களில் 28.. ‘தி இந்து’ போட்டோ கேலரியில்.. இங்கே:

“பெங்களூர் லால்பாக் குடியரசு தின சிறப்பு மலர்க் கண்காட்சி - 2015”

# ஸ்லைட் ஷோ..

Monday, January 26, 2015

பட்டொளி வீசி.. இந்திய தேசியக்கொடி.. 207 அடி உயரக் கம்பத்தில்..- குடியரசு தின வாழ்த்துகள்!

இந்தியாவின் பெரிய அளவிலான மூவர்ணக் கொடி, கர்நாடகத்தின் அதி உயரக் கம்பத்தில் பட்டொளி வீசிப் பறக்கும் காட்சிகள்:

#1

72 அடி நீளமும் 48 அடி அகலமும் கொண்ட இக்கொடியின் எடை 31 கிலோ. இது மழை, வெயிலினால் பாதிக்கப்படாத வகையில் பாலியஸ்டரில் தயாரிக்கப்பட்டதாகும். இருநூற்றேழு அடி உயரம் கொண்ட இக்கம்பம் நாட்டின் பதினோராவது இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுக் கொடிக் கம்பமாகும்.

#2

Sunday, January 25, 2015

வாத்தியக் கருவிகள் - பெங்களூர் மலர் கண்காட்சி 2015 ( Bangalore Lalbagh Flower Show 2015 ) - பாகம் 2

வண்ண மலர்களாலான வாத்தியக் கருவிகள் இந்த வருட ஈர்ப்பாக அமைந்திருந்தன. இவற்றோடு, (சன்ன பட்னா விளையாட்டுப் பொருட்கள் உட்பட) கண்ணில் பட்ட காட்சிகள் சில பல...

#1 வீணை

#2 வீணையின் குடம்

கிடார், தபேலா, பியானோ..

Saturday, January 24, 2015

தில்லி செங்கோட்டை - 2015 லால்பாக் குடியரசுதினக் கண்காட்சி ( 2015 Bangalore Lalbagh Flower Show ) - பாகம் 1

# அதிபர் ஒபாமாவுக்கு வரவேற்பு
17 ஜனவரி தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது பெங்களூரில் 2015_ன் குடியரசுதின மலர்க் கண்காட்சி. இது லால்பாகில் நடைபெறும் இருநூற்றியோராவது கண்காட்சி! வழக்கம்போல போகலாமா வேண்டாமா என யோசித்து, பின் வழக்கம்போல போய் வந்து விட்டேன்:)! கூட்டமில்லாத வாரநாளான வியாழன் அன்று, மேலும் கூட்டம் குறைந்த நண்பகல் நேரமாகச் சென்று மாலையில் திரும்பினேன்.

# 2

3 லட்சம் சிகப்பு, வெள்ளை ரோஜாக்கள் மற்றும் சம்பங்கி மலர்களாலான, 28 அடி உயரமும், 50 அடி அகலமுமாக விரிந்து நின்ற “தில்லி செங்கோட்டை”தான் இந்தக் கண்காட்சியில் கண்ணாடி மாளிகையில் இடம் பெற்றிருந்த பிரதான அலங்காரம். தலைநகரின் செங்கோட்டை தேர்வு செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

Tuesday, January 20, 2015

சிந்தனை ஒன்றுடையாள்..

உலகில் உயர்வான ஒன்றாகப் போற்றப்படுவது தாய்ப்பாசம். அதையே இம்மாதப் போட்டிக்கானத் தலைப்பாகத் தந்திருக்கிறார் நடுவர் நித்தி ஆனந்த்: தாய்மை(Motherhood). மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் தாயன்பையும் காணத் தரக் கேட்கிறார். படங்களை அனுப்ப இன்றே கடைசி தினம் ஆகையால் நினைவூட்டலாக இந்தப் பதிவு. படங்கள் தாய்-சேய்க்கான பாசம், பரிவு, அக்கறை, மகிழ்ச்சி போன்றவற்றை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் வைக்கவும்.
#1

முன்னர் பகிர்ந்த படங்கள் 1+பதிமூன்றின் கொலாஜுடன், மேலும் புதிதாக 4 படங்கள் மாதிரிக்காகப் பகிருகிறேன்.

#2 சிந்தனை ஒன்றுடையாள்


#3 கனிவான அன்பு

Saturday, January 17, 2015

ஆதி வெங்கட் பார்வையில்.. - “அடை மழையும், இலைகள் பழுக்காத உலகமும்..”


தனது “கோவை2தில்லி” வலைப்பக்கத்தில் சென்ற மாதம் இதே நாள் திருமதி. ஆதி வெங்கட் பகிர்ந்து கொண்ட என் நூல்கள் குறித்த வாசிப்பு அனுபவத்தை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்:

மீபத்தில் தான் பதிவர் ராமலஷ்மி அவர்களின் இந்த இரு புத்தகங்களையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  இரண்டுமே அருமையான புத்தகங்கள். ”அடைமழை” புத்தகத்திற்கு மதிப்புரை எழுதிய திரு ரிஷபன் அவர்கள் எனக்கு வாசிக்கத் தந்தார். ராமலஷ்மி அவர்களின் புகைப்படங்களுக்கு நான் என்றுமே ரசிகை. தான் பார்க்கும் காட்சிகளை தத்ரூபமாக படமாக்குவதில் இவருக்கு நிகர் இவரே தான். அதே போல் தான் இவருடைய கதைகளும், கவிதைகளும். பன்முகம் கொண்டவர் ராமலஷ்மி அவர்கள். நான் நேரில் சந்திக்க விரும்பும் நபர்களில் இவரும் ஒருவர்.

Thursday, January 15, 2015

பொங்கப்படி

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!பொங்கப்படி

Tuesday, January 13, 2015

‘தூயோமாய் வந்தோம்..’ திருப்பாவை - பரதம் (பாகம் 2)

#1 நாராயணனே நமக்கே பறை தருவான்.. [Explored in Flickr]
"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்"

#2 எல்லே இளங்கிளியே.. இன்னம் உறங்குதியோ..?
” எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
'வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்!'
'வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!'
'ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை?'
'எல்லாரும் போந்தாரோ?' 'போந்தார் போந்தெண்ணிக் கொள்'
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய். “

#3 சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்!

Sunday, January 11, 2015

‘கைவழி நயனஞ் செல்ல..’ கம்பர் - பரதம் (பாகம் 1)

தசராவையொட்டி நெல்லையில் நடைபெற்ற நடன நிகழ்வொன்றில் இரண்டு மூன்று குழுக்களாகச் சிறுமியர் அற்புதமாக ஆடி, பார்வையாளர்களின் பாராட்டுகளை அள்ளிச் சென்றார்கள். சுமார் நாற்பதடி  தொலைவிலிருந்து ஜூம் செய்து எடுத்த படங்களில் திருப்தியாக வந்தவற்றை ஃப்ளிக்கரில் பகிர்ந்தேன். இரண்டு பாகங்களாக இங்கேயும் தொகுக்கிறேன் நீங்களும் கண்டு மகிழ..

#1 மஹிஷாசுரமர்த்தினி


#2 ‘கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா ~
நின்றன்கீதம் இசைக்குதடா நந்தலாலா~ ~’
#3 ‘சொல்லடி சிவசக்தி..

Saturday, January 10, 2015

கனவும் இலக்கும்

#1
“குரலை உயர்த்தாமல், வார்த்தைகளை உயர்த்துங்கள்.
இடியல்ல, மழையே பூக்கச் செய்கிறது மலர்களை.” -ரூமி


#2
“புதிதாய் ஒன்றைத் தொடங்க அதில் முழுதாய்த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதில்லை. ஆனால் தேர்ச்சியுற, ‘தொடங்குதல்’ அவசியம்.”
- Joe Sabha

#3
“கடந்த காலம் எத்தனைக் கடினமானதாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். மீண்டும் தொடங்கலாம் எப்போதும்.”
_ புத்தர்

Friday, January 9, 2015

அரங்கு எண் 304, வீரபாண்டிய கட்டபொம்மன் வீதி


வாசிப்பவருக்கும் பதிப்பகத்தாருக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு பாலமாக இருந்து வருகிற சென்னைப் புத்தகக் கண்காட்சி, இன்று தொடங்கி 21 ஜனவரி 2015 வரையிலும் நடைபெறவிருக்கிறது.


அதில்,

Thursday, January 8, 2015

எலிஸபெத் பேரட் பிரெளனிங்: குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 6 & 7)


சொல்கிறார்கள் குழந்தைகள் “ஓ! களைப்பாய் இருக்கிறோம் நாங்கள்.
எங்களால் ஓடிடவோ தாவிடவோ இயலாது __
எப்போதேனும் புல்வெளியை நாங்கள் நாடினால், அது
அதிலே விழுந்து உறங்க மட்டுமே.

Friday, January 2, 2015

மண் வாசனை - நெல்லை ஓவியர் மாரியப்பன் - பாகம் (2)

டுப்பு ஊதும் பெண்மணியில் ஆரம்பித்து மஞ்சள் நீர் விளையாட்டு;  பந்து விளையாட்டு; ஆனையும் பாகனும்;   குடத்தில் தண்ணீர் எடுத்து வரும்.., குடை பிடித்து நடக்கும்.., கோவில் வாசலில் செருப்புகளை விடும்.., குறுஞ்செய்தி கண்டு புன்முறுவல் பூத்து நிற்கும்.., குத்துவிளக்கேற்றும்.. இளம் பெண்கள்; மரக்கிளைகளில் ஆனந்தமாய் அமர்ந்து அரட்டை அடிக்கும் சிறார், கோழிகளைத் துரத்தி விளையாடும் குட்டீஸ்... என  தத்ரூபமான நீர் வண்ண ஓவியங்களாக மண்வாசனை கமழும் கிராமியக் காட்சிகள் பதிமூன்று:

#1

#2


#3

அட, பாகன் ஏறவும் இறங்கவும் யானை இப்படிக் காலைத் தூக்கிக் கொடுக்கும் அழகை இப்போதுதான் கவனிக்கிறேன்.


எல்லா ஓவியங்களும் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்ததால் சூரியனார் மரக் கிளைகளின் வழியாக எட்டி எட்டி ஓவியங்களை இரசித்ததன் பிரதிபலிப்பும் எடுத்த படங்களில் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. பொறுத்திடுக :)!

#4

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin