வியாழன், 20 அக்டோபர், 2022

இறுதியில் தர்மமே வெல்லும்! - பொம்மைத் திருவிழா (பாகம்: 2)

 பொம்மைகளை வைத்து செய்யப்படும் கொலு வழிபாட்டு முறை தென்னிந்திய மாநிலங்களில் சிறப்பாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.  தமிழ் மொழியில் பொம்மை கொலு என்பது ‘தெய்வீக இருப்பு’ என்ற பொருளிலும்,  தெலுங்கு மொழியில் பொம்மல கொலுவு என்பது ‘பொம்மைகளின் கோட்டை’ என்ற பொருளிலும், கன்னட மொழியில் பொம்பெ ஹப்பா என்பது ‘பொம்மைத் திருவிழா’ என்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. கொலு என்றாலே அழகு என்று பொருள். அழகிய திருவிழாவின் முதல் பாகம் இங்கே. தங்கை வீட்டின் கொலுப் படங்கள் இரண்டாம் பாகமாக இந்தப் பதிவில் தொடருகிறது:

#1
கொலுப்படி

#3
இடதுபுறம்..
கிருஷ்ணாவதாரம்

#3
வலதுபுறம்..
மகாபாரதம்

#4
கொலுப்படியின் பிரதான பொம்மையாக

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே.. - பொம்மைத் திருவிழா 2022 (பாகம் 1)

கடந்த சில வருடங்களாக நவராத்திரி கொலு விஜயங்களையும் அங்கு எடுக்கும் படங்களையும் பகிர்ந்து வந்துள்ளேன். குறிப்பாகத் தங்கை வீட்டுக் கொலு. அந்த வரிசையில் இந்த வருடக் கொலுவில் அவர் தேடி வாங்கி சேர்த்தப் புது பொம்மைகள் உங்கள் பார்வைக்கு. 

கொலு வைக்க ஆரம்பித்ததில் முக்கியமாக வைக்க வேண்டியவற்றை மட்டும் முதல் வருடம் வாங்கி விட்டுப் பின் ஒவ்வொரு வருடமும் அவர் நிதானமாகப் பொம்மைகளை சேர்த்து வருவது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது. நேர்த்தியான தேர்வாக அவை இருப்பது கூடுதல் சிறப்பு.

கீழ்வரும் பொம்மைகளில் சில பெங்களூர் ஜெயநகரிலும், சில சென்னை பூம்புகாரிலும்,  சில ஆர்டர் கொடுத்து செய்தும் வாங்கப்பட்டவை.

#1
“ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப...”

#2
“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.”

#3
“வேலுண்டு வினையில்லை 
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே.”

சனி, 8 அக்டோபர், 2022

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin