சனி, 24 மே, 2014

அமைதி காத்தல் - பாப்லோ நெருடா (1)

இப்போது நாம் பன்னிரெண்டு வரை எண்ணுவோம்
எண்ணுகையில் அனைவரும் அசையாமல் நிற்போம்

ஒரு முறையேனும் இப்பூமியில்
எந்த மொழியிலும் பேசாதிருப்போம்
ஒருநொடியேனும் நம் கைகளை
அதிகம் அசைக்காமல் நிற்போம்

அவசரங்களின்றி, இயந்திரங்களின்றி
அதிசயமாய் நாம் அனைவரும் இணைந்திருப்பது
விநோதமாய்த் தோன்றலாம்.

திங்கள், 19 மே, 2014

யானை பலம்

1. முன் முடிவுகளால் மனக் கோப்பையை நிரப்பி வைக்காதீர்கள்.

'Have an open mindHave an empty cup!' _ Tae Yun Kim
2.  தங்களின் தனித்தன்மை மற்றும் திறமை மேல் நம்பிக்கை கொள்ளாதவர்களே  மற்றவர்களின் மலர்ச்சியில்.. வளர்ச்சியில் வாட்டம் அடைகிறார்கள்.

Individuality
3. ஒருதுளி வியர்வையேனும் சிந்தாது எந்த இலக்கும் நிறைவேறுவதில்லை.

ஞாயிறு, 11 மே, 2014

நாளை மலரும்

Flickr_ல் பகிர்ந்த மலர்கள் பத்தின் தொகுப்பு.
# 1
வசீகரம்..
வண்ணமும் வடிவமும்

# 2
சோலை மலர்.. 
காலைக் கதிரில்!

#3 உன்னிப் பூ

# 4
நித்திய கல்யாணி

வெள்ளி, 9 மே, 2014

சிலைகளை ஆவணப்படுத்தும் கலை - கல்கி கேலரியில் லக்ஷ்மி

சித்திரக் கலைக்காகக் கையில் எடுத்த கேமராவை கீழே வைக்காமல், ஒளிப்படக் கலை மூலமாகத் தற்போது சிற்பக் கலையை ஆவணப்படுத்தி வருவது குறித்த லக்ஷ்மியின் பகிர்வு, படங்களுடன் 11 மே 2014 கல்கி கேலரியில்..
# பக்கம் 44

வியாழன், 8 மே, 2014

இருபத்தியோராம் நூற்றாண்டில் பெண்கள் - ITHI "Femme Vue" ஒளிப்படப் போட்டி முடிவுகள்

இந்த வருட மகளிர் தினத்தையொட்டி ITHI மகளிர் அமைப்பு அறிவித்த ஒளிப்படப் போட்டி குறித்து பகிர்வு இங்கே. கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா குறித்த பகிர்வு இங்கே. சென்ற ஞாயிறு, 4 மே 2014 காலை 11 மணி முதல் 5 மணி வரை பெங்களூர், வில்சன் கார்டன் FSMK அலுவலகத்தில் நடைபெற்ற கண்காட்சியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற படங்கள் எவை என்பதை முதலில் பார்ப்போம்.

A பிரிவு: தனிப்படங்கள்

#1 முதல் பரிசு:
Talk To Him 
(by Kunjila Mascillamani Henry)
கொல்கத்தாவின் கரியாத் எனுமிடத்தில் வளையல்களும் கழுத்து மாலைகளும் விற்கும் பெண்மணி. கணவனிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வர அவரிடம், தன் அழகால் ஈர்க்கப்பட்டு, ஒருவர் தன்னைப் படமெடுப்பதைப் பெருமையுடன் சொல்லி மகிழ்ந்த பின், அப்பாவிடம் பேசுமாறு மகனை அழைக்கும் தருணம். “அந்த அழகான புன்னகையை என்னால் மறக்கவே முடியாது” என்கிறார் படத்தை எடுத்த குஞ்சிலா.

#2 இரண்டாம் பரிசு

திங்கள், 5 மே, 2014

சிதம்பரம் நடராஜர் கோவில் யாளி, மயிலாப்பூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் திருவாசி

#1 அனுமார் வாகனம்
பிரபல கணினி நிறுவனமொன்றில் கிராஃபிக் டிசைனராகப் பணியாற்றும் சரவணன், ஃபைன் ஆர்ட்ஸ் பட்டதாரி. கடந்த 4 வருடங்களாகச் சென்னையிலிருந்து வந்து பெங்களூர் சித்திரச் சந்தையில் கலந்து கொள்கிறார். ஒரே நாளில் பல ஓவிய ஆர்வலர்களைக் காண்பதும் அவர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டும் தொடர்ந்து வரையும் உற்சாகத்தைத் தருவதாகச் சொல்கிறார்.

பள்ளி நாட்களில் இயல்பாக வரைந்த ஓவியங்களுக்குக் கிடைத்த பாராட்டுகள், ஓவியப் போட்டிகளில் பெற்ற வெற்றிகள், தன் ஆசிரியர் முரளிக்கிருஷ்ணனின் ஓவியத் திறமையின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு இவையே ஆர்வத்தை வளர்த்து சென்னை ஓவியக் கல்லூரியில் சேர வைத்திருக்கிறது.

கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து பதினேழு வருடங்களாக வரைகிற இவர் அதற்கு முன்பும் ஏழு வருடங்கள் எந்தப் பயிற்சியுமின்றி தன்னார்வத்தில் வரைந்து பழகியபடி இருந்திருக்கிறார். தன் ஆர்வம் சார்ந்த படிப்பையே தேர்வு செய்த இவருக்கு கல்லூரியில் ஓவியத்தின் வெவ்வேறு பரிமாணங்களும் அறிமுகமாகியிருக்கின்றன.

சென்னை மயிலாப்பூர் கேசவப் பெருமாள் கோவில் திருவிழாவின் போது ஆலயத்தில் அமர்ந்தே தீட்டிய அனுமார் வாகன ஓவியத்தை (படம்: 1) இவர் வரைந்த அனுபவத்தைதான் கல்கி கேலரிக்காக நம்முடன் பகிர்ந்து கொண்டிருந்தார் இங்கே. எப்படி கருப்பு வெள்ளை கோவில் காட்சி ஓவியங்களில் ஆர்வம் ஏற்பட்டது என்பதையும் விளக்கியிருந்தார். சித்திரச் சந்தையில் இவர் காட்சிப்படுத்தியிருந்த மேலும் சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்காக இங்கே:

#2 மயிலாப்பூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில் வரைந்த திருவாசி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin