செவ்வாய், 17 ஜூலை, 2018

ஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்!

த்து ஆண்டுகள்.  மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென..

#


மொத்தப் பார்வைகள்: 
இருபத்தியொரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்++. 
சராசரியாக படம் ஒன்றுக்கு 700 பார்வைகள்
#


இது சாதனையல்ல.. மகிழ்ச்சி. எண்ணிக்கை பெரிதல்ல.. எண்ணியபடி செயலாற்றி வருவதில் ஒருவித மன திருப்தி.

மூவாயிரமாவது படம்.  
3000 நார்களால் பின்னிய கூடு. 
#


டங்களைக் கவனித்து, ஊக்கம் தந்து வரும் நண்பர்களுக்கும், ஒளிப்படக் கலை அனுபவம் குறித்தான எனது நேர்காணல்களை, நான் எடுத்த படங்களை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும் இந்நேரத்தில் என் அன்பும் நன்றியும்.

PiT ஒளிப்படப் போட்டிகளையும், பின்னாளில் அதன் ஆசிரியர் குழுவில் இணைந்து இயங்கியதையும் மறக்க முடியாது. சக PiT உறுப்பினர்களுக்கும் என் நன்றி.

#

முத்துச்சரம் பதிவுகளில் இடம் பெற்ற எல்லாப் படங்களும் ஃப்ளிக்கரில் இடம் பெறவில்லை. அதே போல அங்கே பதிந்த படங்களில் சில இங்கே பகிர விட்டுப் போயிருக்கவும் கூடும். மொத்தமாகப் பகிர்ந்தவை எனப் பார்க்கையில் எண்ணிக்கை முன் பின்னாக இருப்பினும், ஃப்ளிக்கர் தளம் ஒரு ஒழுங்கோடு பயணிக்க உதவியது.

பெரும்பாலான படங்களைப் பொருத்தமான வாழ்வியல் சிந்தனைகளோடு பகிர்ந்து வந்திருக்கிறேன். இயன்றவரை பறவைகளை மற்றும் பயணித்த இடங்களை அவற்றைப் பற்றிய தகவல்களோடு பதிந்திருக்கிறேன்.

திக பார்வைகளைப் பெற்ற படங்கள் பத்தின் தொகுப்பு இது. எனக்குப் பிடித்தவை எனப் பட்டியல் இட்டால் அது மிக நீண்டதாகி விடும். ஆகையால் பார்வையாளர்களுக்குப் பிடித்தவை மீள் பகிர்வாக...

TOP TEN

ஃப்ளிக்கர் தளத்தில் "EXPLORE" என்பது என்ன என்பது பற்றி ஏற்கனவே இந்தத் தூறல் பதிவொன்றில் பகிர்ந்திருக்கிறேன்.
#1
‘தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்..’ - EXPLORED
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/27037330367

#2
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்! - EXPLORED
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/40555688685

#3
நின்னைச் சரணடைந்தேன் - EXPLORED
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/15413007663
#4
ULSOOR LAKE, Bangalore
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/11512352024
#5
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் -  EXPLORED
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/26883492464
#6
சித்திரப் பூவிழியே.. - EXPLORED
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/15322897994
#7
'It's Not Easy Being Awesome. But..'
My nephew.. My favorite Model:)
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/34756913915
#8
"Teaching, is the one profession that creates all other professions." - EXPLORED
திருமதி. சரஸ்வதி கலாப்ரியா
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/16744955610
#9
“சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் 
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்”

https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/15874242819
#10
Serene
"Silence is not the absence of something,
but the presence of everything." ~ John Grossmann
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/1663287410

நடுநடுவே பலவித உடல்நலக் குறைவுகளால் ஏற்பட்ட இடையூறுகள் இடைவெளிகளைத் தாண்டித் தொடருகின்ற இந்தப் பயணம்.. இயலும் வரை இனியும் தொடரும் :).

***

இப்பதிவின் ஃபேஸ்புக் பகிர்வும் நண்பர்களின் வாழ்த்துகளும் எனக்கான சேமிப்பாக இங்கும்:

1. சாதனையல்ல.. சந்தோஷம்!

2. 3000 நார்களால் பின்னிய கூடு

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி :).

****

18 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் சகோ..உண்மையில் இது ஒரு மிக பெரிய உயரம் தான்....

    எண்ணிக்கையில் ஏதும் இல்லை தான்.. செய்ய வேண்டும் என்ற ஊக்கமே நம்மை மென்மேலும் சிறக்க வைக்கிறது....

    தொடரட்டும் உங்களின் அழகிய பணி..

    பதிலளிநீக்கு
  2. படங்கள், படைப்புகள் எப்போதும் மிகக் கவனமுடனும், நேர்த்தியான ஒழுங்கமைப்புடன் சமூக கரிசனை கலந்து தொடர்ந்து வெளியிடும் உங்கள் உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது.

    மகிழ்ச்சி நிறைந்த மனதுடன் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
    மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  4. மனதுக்குப் பிடித்த செயலாயிருப்பதால் இவ்வளவு நீண்ட காலம் அலுப்பில்லாமல் செய்து சாதனை படைக்க முடிகிறது. வாழ்த்துகளும், பாராட்டுகளும். தொடரட்டும் சாதனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதுக்கு பிடித்த செயல்.. உண்மைதான்:). நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. பெரிய சாதனை... மனமார்ந்த வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  6. மனம் நிறை வாழ்த்துகள் ராமலக்ஷ்மி. உங்கள் உழைப்பு மென் மேலும் சிறப்படையட்டும்.
    மிக அழகான மகிழ்ச்சி தரும் பட ஒவீயங்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. 2008_ஆம் ஆண்டிலிருந்து எனது ஒளிப்படங்களை கவனித்து வருபவர்களில் நீங்களும் ஒருவர். 24 மார்ச் 2012 இலங்கை ‘வசந்தம்’ தொலைக்காட்சியின் ‘தூவானம் - இலக்கிய சஞ்சிகை’ நிகழ்வில் முத்துச்சரத்தை அறிமுகம் செய்வித்து, நான் எடுத்த ஒளிப்படங்களைக் காண்பித்ததை இப்போது நினைவு கூர்ந்திடுகிறேன். அதற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி ரிஷான்:).

      நீக்கு
  8. மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி. இது ஒரு சாதனைதான். படங்களை எடுப்பதோடு அவற்றுக்கு உரிய வாசகங்களைத் தேர்ந்தெடுத்துப் பதிவது ஒரு பெரிய வேலை. தனித்திறமையும் கூட. நீங்கள் அழகாகச் செய்கிறீர்கள். ஃப்ளிக்கரில் தினமும் ஒன்றாவது பதியச் சொல்லி எனக்குத் தந்த ஆலோசனையின் மகத்துவம் புரிகிறது. நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பும் நன்றியும் கீதா. ஃப்ளிக்கரில் உங்கள் அருமையான படங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

      நீக்கு
  9. வாழ்த்துகள் ராமலஷ்மி :-)

    உங்களுடைய Passion தான் உங்களை இவ்வளவு தூரம் அலுப்பில்லாமல் கொண்டு வந்துள்ளது. Passion இருக்கும் வரை முயற்சியும் தொடரும்.

    நாம் என்ன தான் மற்றவர்களை பார்த்து செய்தாலும், செய்ய முயற்சித்தாலும் எதோ ஒன்று தான் நம்மை தனித்தன்மையாக வெளிப்படுத்தும்.

    உங்களைப் பொறுத்தவரை அது நிழற்படங்கள் எடுப்பது தான் :-) .

    மேலும் இதில் சாதிக்க வாழ்த்துகள்.

    Passion க்கு இருக்கும் சிறப்பு என்ன தெரியுமா? வயது ஒரு தடையேயல்ல.. நம் ஆர்வம் தொடரும் வரை சென்று கொண்டே இருக்கும், முடிவே இல்லாமல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடுக்கப் பழகிக் கொண்டிருந்த ஆரம்ப காலத்திலிருந்து எனது படங்களைக் கவனித்து வருபவர்களில் நீங்களும் ஒருவர்:). உண்மைதான், இத்துறையில் கொண்ட ஆர்வம் முடிந்தவரையிலும் என்னைத் தொடர வைக்கும் என நானும் நம்புகிறேன். வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin