Sunday, May 31, 2020

பெரிய நிழல்கள்

#1
“பயம், நாம் ஆற்றும் எதிர்வினை.
தைரியம், நாம் எடுக்கும் முடிவு!”

#2
“இந்த உலகில் தன்னை விடவும் உங்களை அதிகமாக நேசிப்பது நாய் மட்டுமே..”
_ Josh Billings

#3
“எதற்கெல்லாம் அஞ்சக் கூடாதென்பதை 
அறிந்திருப்பதே தைரியம்.” 
Plato

Thursday, May 28, 2020

இது எங்கள் தேசம்!? - 'கீற்று’ மின்னிதழில்..

இது எங்கள் தேசம்!?


வீட்டை மறந்து
ஊரைத் துறந்து
உறவைப் பிரிந்து
மாநிலங்கள் தாண்டி
வாழ்வாதாரம் வேண்டி
துணிந்து இடம் பெயர்ந்தோம்
என்ன இடர் வரினும் காக்கும்
எங்கள் தேசம் என.

வானுயர்ந்த
கட்டிடங்களுக்காகவும்
வளைந்து நீண்ட
பாலங்களுக்காகவும்
மொழி அறியா ஊர்களில்

Thursday, May 21, 2020

க. அம்சப்ரியாவின் “வகுப்பறையே ஒரு வரம்தான்.. ” - மதிப்புரை.. ‘புத்தகம் பேசுது’ இதழில்..


வழிநடத்தும் ஒளிவிளக்கு..

சிரியர் மாணவர்களுக்கு அர்ப்பணிக்கும் நேரம், கொடுக்கும் சுதந்திரம், மாணவர்கள் ஆசிரியர் மேல் வைக்கும் நம்பிக்கை, அன்பினால் உருவாகும் மதிப்பு இவை ஒன்று கூடும் இடத்தில் உன்னதமான ஆசிரியர்களையும் சிறந்த மாணவர்களையும் இந்தச் சமுதாயம் கண்டடைகிறது. மாணவர்களின் வாழ்கையை மாற்றி அமைக்கும் சக்தி, குறிப்பாகத் திசை மாறிச் செல்லும் சிறுவர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்பங்களைக் கொண்டு வந்து, தாமாக அவர்கள் ஒருபோதும் கண்டு பிடித்திடச் சாத்தியப்படாத சரியான பாதைக்குக் கொண்டு செல்லும் சக்தி ஆசிரியருக்கு உண்டு. மாணவர்கள் பாடங்களைக் கற்றுத் தேர்வதில் மட்டுமின்றி, சமுதாயத்தை நேர் கொள்ளச் சிறந்த பண்புகளையும் கற்றுத் தேர்ந்தால் மட்டுமே ஆசிரியரின் பணி முழுமையடைகிறது. அக்கறையுடன் இதை மனதில் நிறுத்தி செயல்படும், 19 ஆண்டுகளாகத் தமிழ் துறையில் பணியாற்றும் ஒரு ஆசிரியரே, இந்நூலின் ஆசிரியர் என்பது கவனத்திற்குரிய சிறப்பம்சம்.

மாணவர்கள் தமது திறமைகளில் நம்பிக்கை வைத்து, தமக்கும் சமுதாயத்துக்கும் அந்தத் திறமை பயன்படும் வகையில் தம்மை மாற்றிக் கொள்ளவும் உயர்த்திக் கொள்ளவும் வழி காட்டுகிறார் ஆசிரியர் க.அம்சப்ரியா. எதைச் சிந்திக்க வேண்டும் என்பதை விட எப்படிச் சிந்திக்க வேண்டும் என்பதை விளக்குகிறார். “எங்கெல்லாம் கற்றுக் கொள்வதற்கான சூழல் அமைகிறதோ,

Sunday, May 17, 2020

விரும்பியது கிடைக்காமை

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (72) 
பறவை பார்ப்போம் - பாகம் (50)

#1
“நமது உடல், அறிவு மற்றும் மனதில் நிரம்பியிருக்கும் நம்பிக்கையே
நம்மைப் புதிய சாகசங்களைப் புரிய அனுமதிக்கிறது.”


#2
“பிறர் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை 
உங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பதோடு 
ஒருபோதும் குழப்பிக் கொள்ளாதீர்கள்!”

Friday, May 1, 2020

மே தினம் - கொரோனா


லகமே கொரனாவால் ஸ்தம்பித்து நிற்கிறது.  இந்தியாவில், பிழைப்புக்காக வேறு மாநிலங்களில் வசித்து வந்த உழைப்பாளிகள் ஊரடங்கு உத்திரவு வந்ததும் உணவுக்கு வழியில்லாத நிலையில் சொந்த ஊர்களை நோக்கி இன்னமும் கால்நடையாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள், கிடைத்ததை உண்டு, கிடைத்த இடத்தில் உறங்கி. இந்தப் பயணத்தை எதிர் கொள்ள இயலாமல் பெண்களும், குழந்தைகளும் இறந்து போகும் செய்திகளும் வருகின்றன. தற்போது அரசு அவர்களுக்காக இரயில்களை இயக்க ஆரம்பித்திருப்பது ஆறுதல்.

நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது முதன்மையானதாக இருக்கும் இந்தச் சூழலில்,  பலதரப்பட்ட துறைகளும் முடங்கியதால் அன்றாட உழைப்பில் வாழ்பவர்கள் உட்பட மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் ஏராளம். விரைவில் அனைத்துக்கும் தீர்வு வரட்டுமாக!

கொரானா நோயாளிகளுக்காக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புறவுத் தொளிலாளர்களை வாழ்த்துவோம்.

மே தின வாழ்த்துகள்!

டந்த ஒரு வருடத்தில் ஃப்ளிக்கர் பக்கத்தில் பகிர்ந்த, உழைப்பாளர்களின் படங்கள்... தொகுப்பாக.. இங்கே..

#2

#3

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin