#1
![]() |
பத்து வயது ஆகையில்
#1
சாம்பல் கதிர்க்குருவி 13 முதல் 14 செ.மீ வரையிலான உயரம் கொண்ட, கிளைகளைப் பற்றி அமரும் மற்றுமொரு பாஸரைன் வகை சிறு பறவை. செங்குத்தாக நிற்கும் வால் இவற்றைப் பிற வகை கதிர்க்குருவிகளிடமிருந்து எளிதில் வேறுபடுத்திக் காட்டும்.
அடிக்கடி எங்கள் தோட்டத்திற்கு வருமாயினும் இவை மரக் கிளைகளில் அமர்ந்து அதிகம் பார்த்ததில்லை. பெரும்பாலும் புல்வெளியில் பூச்சிகளைத் தேடித் தத்தித் தாவியபடி இருக்கும். வேகமாக நகர்ந்தபடியே இருக்கும் இப்பறவையைப் படமெடுப்பது சற்று சிரமமே.
#2
சாதா கதிர்க்குருவிகளைப் போல் இவையும் வலசை செல்லாது.
#1
எல்லைக்கோடு
#1
#1
சாதா கதிர்க்குருவி சுமார் ஐந்து அங்குல உயரத்திலான, கிளைகளைப் பற்றி அமரும் பாசரைன் (Passerine) வகை சிறு பறவை. நல்லத் தெளிவாகக் குரலெழுப்பிப் பாடும். பழக்க வழக்கங்களைக் கொண்டு பாடும் குருவி, வெண்புருவப் பாடும் குருவி போன்ற வேறு பெயர்களாலும் அறியப்படுகின்றன.
#2
சற்று தைரியமான பறவை. அடிக்கடி புதர்களுக்குள் மறைந்து கொள்ளக் கூடியது ஆயினும், பாடும் போது திறந்தவெளி மரக்கிளைகளில் அமர்ந்தே பாடும்.