ஞாயிறு, 31 மே, 2015

வாய் பேசிடும் புல்லாங்குழல்..

# மழலை இன்பம் மங்காத செல்வம்

#1. துங்கக் கரிமுகத்துத் தூமணியே..


#2.  நிலாக் காய்கிறது.. நேரம் தேய்கிறது..
       யாரும் ரசிக்கவில்லையே..
       இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்


#3. மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது..

திங்கள், 25 மே, 2015

யக்ஷகானா - 'அர்ஜூனா - சுதன்வா யுத்தம்'

ர்நாடகாவின் பாரம்பரிய நாட்டிய நாடகக் கலை வடிவம்... யக்ஷகானா!
#1
“கிருஷ்ணா நீ பேகனே பாரோ!”
இசை, நடனம், வசனம், .உடை அலங்காரம், ஒப்பனை மற்றும் மேடை உத்திகள் ஆகியவற்றில் தனித்ததொரு பாணியைக் கொண்டது. இந்தப் பாரம்பரிய நடனம் ஆரம்பக் காலத்தில் இருள் கவிழத் தொடங்கும் அந்தி நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு விடிய விடிய, அதாவது பொமுது புலரும் வரை நடப்பது வழக்கமாக இருந்தது.

#2


நிகழ்ச்சிக்கான பின்னணி இசையை வழங்கும் கலைஞர்களின் குழு ஹிம்மேளா என்றும், வசனம் பேசி நாட்டியமாடும்  கலைஞர்களின் குழு மும்மேளா என்றும் அறியப்படுகிறார்கள். ‘பகவதா’ என அறியப்படும் இசைக்குழுவின் தலைவரே நாட்டிய நாடகத்தை இயக்குகிறார்.

#3

கைகளால் வாசிக்கப்படும் மிருதங்கம், குச்சிகளால் முழக்கப்படும்  Chande என்கிற மத்தளம்,

திங்கள், 11 மே, 2015

போர்ட்ரெயிட் (Portrait) என்றால் என்ன? - ஒரு அறிமுகம்




போர்ட்ரெயிட் அல்லது போர்ட்ரெய்ச்சர் என்பது ஒரு நபரின் முகம், முக அமைப்பு, உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலை வடிவம். அது ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, சிற்பமாகவோ இருக்கலாம். இவை சப்ஜெக்ட் நகராத நிலையில் இருக்கும் போது எடுக்கவோ, வரையவோ, வடிக்கவோ படுகின்றன. குறிப்பாக சப்ஜெக்ட் படம் எடுப்பவரையோ வரைபவரையோ நேராகப் பார்ப்பது போல் இருக்க வேண்டும்.  அப்போதுதான் பார்வையாளரைப் படத்துடனோ ஓவியத்துடனோ வெற்றிகரமாக ஒன்றிடச் செய்ய முடியும். அதுதானே ஒரு கலைஞனுக்கு தேவையானதும் :)?
**

ரி, நாம் இப்போது போர்ட்ரெயிட் ஃபோட்டோகிராஃபிக்கு வருவோம்.

I.  TRADITIONAL PORTRAIT எனப்படும் வழமையான மரபு: இதைத்தான் இம்மாதப் போட்டிக்கான தலைப்பாக நடுவர் அறிவித்திருப்பது.

* முகத்துக்கு முக்கியத்துவம்..

* நபரின் தனித்தன்மையைப் பிரதிபலிப்பது..


* நபர் நேரடியாகக் கேமராவைப் பார்ப்பது..

வியாழன், 7 மே, 2015

விக்கி லவ்ஸ் ஃபுட் (WLF) - விக்கிமீடியா ஒளிப்படப் போட்டி - ரொக்கப் பரிசுகள்

விக்கிமீடியா காமன்ஸ் அறிவித்திருக்கும் அனைத்து மக்களுக்குமான ஒளிப்படப் போட்டி, Wiki Loves Food (WLF). போட்டிக்கு வரும் படங்களில் சிறந்தவை அனைத்தையும் விக்கிப்பீடியா பக்கங்களிலும், விக்கிமீடியாவின் ஆய்வுப்பக்கங்களிலும் பயன்படுத்திக் கொள்ளவதே இதன் முக்கிய நோக்கம் என்றாலும் கலந்து கொள்பவர்களை ஊக்கப்படுத்த பெரிய அளவில் ரொக்கப் பரிசுகளையும் அறிவித்திருக்கிறார்கள்.

திங்கள், 4 மே, 2015

புத்த பூர்ணிமா - பொன்மொழிகள் பத்து

புத்த பூர்ணிமா அல்லது வைசாக் பண்டிகை மே மாதத்தின் முழுநிலவன்று பலநாடுகளில் கொண்டாடப்படுகிறது. புத்தர் லும்பினியில் பிறந்த தினம், கயாவில் ஞானம் பெற்ற தினம் மட்டுமின்றி அவர் மறைந்த தினம் இந்தப் பெளர்ணமி நாளே. அவரது பொன்மொழிகள் பத்தினை பல்வேறு சமயங்களில் எடுத்த புத்தரின் படங்கள் பத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.

#1.
நீண்ட காலத்துக்கு மறைத்து வைக்க முடியாத மூன்று விஷயங்கள்: சூரியன், நிலவு மற்றும் உண்மை.


#2
ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறக்கிறோம். இன்று என்ன செய்கிறோம் என்பது அதிமுக்கியமானது.



#3
அடைகிற கோபத்துக்காகத் தனியாக எவரும் தண்டிக்கப்படுவதில்லை; அந்தக் கோபமே கொடுத்து விடுகிறது தண்டனையை.

#4

வெள்ளி, 1 மே, 2015

மே தினம் - சிறு வியாபாரிகள்

நம்மைச் சுற்றி நமக்காக உழைப்பவர்கள் அத்தனை பேருக்கும் நமது

மே தின வாழ்த்துகள்!  

அவர்களில் சிலர் தத்தமது தொழிலில் மும்முரமாக இருந்த தருணங்கள்.., சிறு வியாபாரிகள் எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருந்த தருணங்கள்..
10 படங்களாக இங்கே...

#1

#2

#3


#4

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin